அட... அந்தமாதிரி படத்தில் அமலாபாலா?




சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருந்தார் அமலாபால். இந்த படத்திற்கு ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக அமைப்பினர் என பல இடங்களில் இருந்தும் சரமாரியான கண்டனங்கள் வந்து குவிந்தன. இந்த படத்திற்குப் பிறகு கொஞ்சகாலம் திரைமறைவு வாழ்க்கையே நடத்தி வந்தார் அமலாபால். அதன் பிறகு மைனா படத்தில் அவர் நடித்து இன்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடமும் பிடித்துவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடித்ததிலேயே மிகவும் பிடித்தது சிந்துசமவெளி படம்தான். அந்த படத்தை மீண்டும் யாராவது எடுக்க ஆரம்பித்தால் அதில் நான் நிச்சயம் நடிப்பேன்... என்று சொல்லியிருந்தார் அமலாபால். இதைத் தொடர்ந்து அமலாபாலுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். நான் நீ என ஏகப்பட்ட புதுமுக இயக்குநர்கள் ஒரு மாதிரியான கதையுடன் அமலாபாலை சந்திக்க முயன்று வருகிறார்களாம். விரைவில் சிந்துசமவெளி பாகம் 2 படத்தில் அமலாபால் தோன்றி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை.

11:26 by iamvenkatesh · 0

hotlinksin

மெரினா - சர்ச்சையை உருவாக்குமா?




பாண்டிராஜ் இயக்கி தயாரித்திருக்கும் மெரினா திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க மெரினாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் இந்த படம் மெரினாவில் நடக்கும் சின்னஞ்சிறு விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரைக்கும் பதிவு செய்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் அவருக்கு ஜோடியாக ஓவியாவும் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொலைக்காட்சியில் இந்த படத்தின் விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட படத்திற்கான எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கம், சிவகார்த்திகேயனின் முதல் அறிமுகப்படம், தொடர் விளம்பரங்கள் இப்படி மெரினா படம் பல வகைகளில் நம் கவனத்தை ஈர்த்துள்ளது. மெரினாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களான அரவாணிகள் மெரினாவில் சுற்றிவருவது மற்றும் மெரினாவின் மறைவான இடங்களில் நடக்கும் இன்ன பிற விஷயங்களும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெரினா படம் மெரினாவின் இன்னொரு முகத்தை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

00:43 by iamvenkatesh · 0

hotlinksin

பகல்கொள்ளையடிக்கும் சினிமா சங்கங்கள் - சேரன் அதிரடி



cheran009

“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ். சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது? என்பதில் தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை. திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏன்?

‘லாபத்தில் பங்கு’ என்பது தான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும் வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது. மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச்சொற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என் கடமையும், உரிமையும்.

இன்றைய இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும் விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இது மாற வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்
குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில் இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா? கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை! என்பதுதான்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று ஆளாளுக்கு ஓடி வந்தனர்.

ஆனால் இன்றென்ன நிலைமை?

ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது. திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி.. திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.

பல முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்?

அப்படித் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்? கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து, μசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக் கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது. கோமாஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள் தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால் கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். மேலும், வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில் தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை. ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா?

அதாவது, சினிமா - மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த நியாயம்?

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால், எதார்த்தம் என்ன? ஒரு படம் μடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஒளிப்பதிவாளர்களும், படத்தின் பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துத்தான் வாங்குகிறார். இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா!

நூறு கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம் தான். இது பாரபட்சமான அணுகுமுறை. பெரிய பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும். அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதுதான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.

சினிமா நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலை திரைப்படத் தொழிலார்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்? இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத் தான் தரவேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில் தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன்வைக்கிறது.

அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ·பெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?

தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,’ என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது.

பெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணிசெய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வரமுடியாது. இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை.

டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ·பெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!.

படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதைத் எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.

இயக்குனர் சேரன்,
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)

-------------------------------------------------------------------------------------
நண்பர்களே... http://www.hotlinksin.com திரட்டி இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா...?
-------------------------------------------------------------------------------------

15:05 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகையை வலைவீசி தேடும் இயக்குநர் - பரபரப்பான காரணங்கள்



சமீபத்தில் பாவி என்னும் தலைப்பில் கில்மா படம் ஒன்று வெளியானது. ஆங்காங்கே ஒன்றிரண்டு தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ரிலீஸ் ஆன இடங்களில் எல்லாம் நல்ல வசூலை வாரிக் குவித்திருந்தது இந்த படம். இந்த படத்தில் நான்கைந்து நடிகைகள் நடித்திருந்தார்கள். இதில் ஒரு நடிகை மட்டும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். மற்ற நடிகைகள் எல்லாம் சுமார் ரகம்தான்.

பாவி படத்தில் இந்த அழகான நடிகை நன்றாகவே தன் திறமையைக் காட்டியிருந்தார். இந்த படத்தைப் பார்த்த மீடியாவில் பணியாற்றும் நபர் ஒருவர் தன் நண்பரான முன்னணி இயக்குநருக்கு போனைப் போட்டு, ‘பாவி படத்தில் அந்த பொண்ணு நடிப்பைப் பாரு... சும்மா பிச்சு உதறியிருக்கு... ஏன் இந்த பொண்ணு இப்படி ஒரு கிளாமர் படத்தில் நடிச்சுது? கூப்பிட்டு உன் படத்தில ஒரு நல்ல கேரக்டர் கொடுப்பா...’ என்று சொல்லியிருக்கிறார்.


உடனே தன் உதவியாளர்களிடம் சொல்லி பாவி படத்தின் டிவிடி கிடைக்குமா என்று அலசி வரச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். டிவிடி கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்திருக்கிறார்கள் இயக்குரின் உதவியாளர்கள். அந்த படத்தின் டிரைலர் மற்றும் ஸ்டில்ஸ்களையாவது பார்க்கலாம் என்று கூகிளில் தேடி ஒரு வழியாக நடிகையின் படத்தைப் பார்த்திருக்கிறார்.

பார்த்ததுமே தனது அடுத்த படத்தில் நடிகையை பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்த இயக்குநர் தன் உதவியாளர்களிடம் அந்த நடிகையிடம் தனது அடுத்த படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்க சொல்லியிருக்கிறார். உதவியாளர்களோ உடனே பாவி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் பண்ணியிருக்கிறார்கள். விஷயத்தை அவர்களிடம் சொன்ன போது தொடர்பு எண்ணை தர மறுத்துவிட்டார்களாம் அவர்கள்.

பின்பு, ‘எங்களிடம் அவங்க எண் இல்லை... அவங்க போன் நம்பரை மாற்றிவிட்டார்கள்...’ என்று மாற்றி மாற்றி சொல்லியிருக்கிறார்கள். வெறுத்துப் போன உதவி இயக்குநர்களோ, ‘சரி... அந்த நடிகை உங்களைத் தொடர்பு கொண்டால், உடனே எங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்...’ என்று சொல்லி இயக்குநரின் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அன்றிலிருந்து சுமார் ஒரு மாதமாக அந்த நடிகையை தேடிக் கொண்டுதான் இருக்கிறார் அந்த முன்னணி இயக்குநர்.

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சுன்னு சொல்வாங்களே... அது இதுதானோ...!

------------------------------------------------------------------------------------------
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா? இல்லையெனில் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளுக்கு ஏராளமான ஹிட்ஸ்களை பெற்றிடுங்கள்.
-------------------------------------------------------------------------------------------

00:53 by iamvenkatesh · 0

hotlinksin

நான் ரசித்த விளம்பரம்



இந்த விளம்பரத்தை பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கிறது. எம்.எஸ். பாஸ்ககரும் லொள்ளுசபா சாமிநாதனும் அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த விளம்பரம் எனக்கு ரொம்பவே பிடிக்கக் காரணம் நிச்சயமா அந்த பொண்ணுதான். என்ன ஒரு க்யுட். எம்.எஸ். பாஸ்கர், தம்பி, ‘ஷு வாங்கும் போது கிடைக்கிற பேக்கை கோகிகிட்ட கொடுத்திடு’ என்று சொல்லும் போது அந்த பொண்ணு முகத்தை ஒரு மாதிரி இழுத்துட்டு பண்ணுதே...சே... என்ன ஒரு அழகு. அப்புறம், ‘வரன் தேடுறதுதான்டி முதல் செலவு, முக்கியமான செலவு...’ என்று எம்.எஸ். பாஸ்கர் சொன்னவுடனேயே அந்த பொண்ணு அப்படியே தலையை குனிகிறதே... அடடா இதுதான் நாணம் என்பதோ... செம பீல் பண்ணின நடிப்பு. இந்த இரண்டு காட்சிகளுக்காவுமே எப்ப வேண்டுமானாலும் இந்த விளம்பரத்தைப் பார்த்துட்டே இருக்கலாம் போல தோணுது...
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...?

15:54 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகை சங்கவிக்கு விரைவில் திருமணம்



அமராவதி என்னும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சங்கவி. அதன்பிறகு விஜய்யின் ஆஸ்தான நாயகியாக திகழ்ந்தார் சங்கவி. சங்கவியும் விஜய்யும் இணைந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற சில படங்களில் நடித்தனர். இந்த படங்களில் சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டன. ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகியாக திகழ்ந்த சங்கவி பின்பு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல ஒதுங்கினார். இப்போது சங்கவிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார் சங்கவி. இவர்களது திருமணம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

15:19 by iamvenkatesh · 0

hotlinksin

மன்மோகன்சிங்கை குடும்பதோட இங்க வந்து இருக்கச் சொல்லுங்க...


13:34 by iamvenkatesh · 0

hotlinksin

பாரதிராஜா படத்திலிருந்து அமீர் நீக்கம்





பாரதிராஜாவின் கனவுப்படம்தான் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப் படத்திற்கு பிரமாண்டமான முறையில் தனது சொந்த ஊரிலேயே பட பூஜையும் நடத்தினார் பாரதிராஜா. அமீர் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இனியாவும், கார்த்திகாவும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்த நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை பூதாகரமாக வெடிக்க படப்பிடிப்புக்கு கொஞ்ச நாளைக்கு பேக்அப் சொன்னார்கள். இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடரலாம் என்றால் மீண்டும் தடைபட்டு நிற்கிறது அன்னக்கொடியும் கொடிவீரனும். இதற்கு காரணம் அமீர் என்கிறார்கள். அமீரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

11:11 by iamvenkatesh · 0

hotlinksin

அந்த மாதிரி காட்சியில் சரண்யா - அதிரவைக்கும் பின்னணி





சமீபகாலமாக கோலிவுட்டில் ஒரே பரபரப்பு. என்ன... அந்த நடிகை நிர்வாணமாக நடித்துள்ளாராமே... என்ற பேச்சுதான் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் காதல், பேராண்மை  படங்களில் நடித்த சரண்யா மழைக்காலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நிர்வாண காட்சியில் சரண்யா நடித்திருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவிக் கிடக்கிறது. இதற்காக சரண்யாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், சரண்யா நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை, படத்தின் பப்ளிசிட்டிக்காக திட்டமிட்டு இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்னும் செய்தியும் இப்போது மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது. 
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

01:00 by iamvenkatesh · 0

hotlinksin

கிசுகிசுவை விரும்பும் வித்தியாசமான நடிகை



கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவுக்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவுரையே கொடுக்கிறார். ‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக கிசுகிசு எழுதக்கூடாது…’ என்று சொல்கிறார் சஞ்சிதா.

12:00 by iamvenkatesh · 0

hotlinksin

மதுரை கதை களத்தில் சூரியநகரம்




மதுரை ஏரியா படமா... அய்யய்யோ... ஆளை விடுங்கப்பா என்று ரசிகர்கள் ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஒரு காலகட்டத்தில் மதுரை ஏரியா  படங்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தன. பின்பு மதுரை பகுதியை மையமாக கொண்ட படம் என்றாலே அதை வைத்து ரசிகர்கள் கொலை வெறி வரக்கூடிய அளவுக்கு காமெடி எஸ்.எம்.எஸ்.க்ளை பண்ண ஆரம்பித்தனர். இதனால்தானோ என்னவோ சமீபகாலமாக மதுரை ஏரியாவை மையமாக கொண்ட படங்கள் வருவது கொஞ்சம் குறைந்திருந்தது. இப்போது அந்த குறையை நீக்குவதற்காகவே சூரிய நகரம் என்ற படம் தயாராகியுள்ளது. மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக நடித்த ராகுலும் அவருக்கு ஜோடியாக நந்தனாவும் நடித்திருக்கிறார்கள். மதுரையை மையப்படுத்திய படங்களுக்கு மத்தியில் இந்த படம் அடி தடி இல்லாமல் காதலை மையப்படுத்தியதாக கொண்டு வெளிவர உள்ளது.

13:33 by iamvenkatesh · 0

hotlinksin

அமலாபால்... நீங்க இப்படி பண்ணலாமா?





காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடிக்கும் அமலாபாலிடம் கால்ஷீட்டில் சொதப்புவது எப்படி? என்று கேட்டால் அழகாக சொல்லித் தருவார் போலிருக்கிறது.

கில்மா படமான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அமலாபால். அதைத் தொடர்ந்து கில்மா பட வாய்ப்புகளாகவே அம்மணிக்கு குவிய நொந்து நூடுல்ஸே ஆகிவிட்டார் அமலாபால். அதன்பிறகு இவரைக் கூப்பிட்டு மைனாவில் நடிக்க வைத்தார் பிரபு சாலமன். அதன் பிறகு அமலாபால் வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம்தான். மளமளவென அடுத்தடுத்த படங்களில் புக்காகிவிட்டார் அமலாபால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டை படமும் ஹிட்டாகிவிட தெலுங்கு, மலையாளம், தமிழ் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அமலாபால். வந்த வரைக்கும் லாபம் என்கிற ரீதியில் அம்மணி படங்களை ஒப்புக் கொள்வதால் கால்ஷீட் பிரச்சினையாகி படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்று நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் படத்தில் அமலாவைப் புக் பண்ணியவர்கள். இப்படியே கால்ஷீட் சொதப்பிக் கொண்டு போனால் இன்னும் கொஞ்ச நாட்களில் அமலாபாலை தமிழ் சினிமாவில் தேடித்தான் பார்க்கவேண்டியிருக்கும்.

01:02 by iamvenkatesh · 0

hotlinksin

நண்பன் டீமை பாராட்டிய கமல்


00:45 by iamvenkatesh · 0

hotlinksin

தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு - அதிர்ச்சியில் சினிமா தொழிலாளர்கள்




தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

சமீபகாலமாகவே தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்பளத்தை அதிகமாகவே உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இது தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் மத்தியில் மிகப் பெரிய புகைச்சலையே உண்டு பண்ணியிருந்தது. சினிமா தொழிலாளர்கள் சம்பளத்தைப் பொறுத்தவரை லோ பட்ஜெட் படத்திற்கும் பெரிய பட்ஜெட் படத்திற்கும் ஒரே மாதிரி சம்பளம்தான். அது மட்டுமல்லாமல் சங்கம் வைத்துக் கொண்டு இவர்கள் பண்ணுகிற அலப்பறை தாங்கவே முடியாததாக இருந்து வந்தது

 ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடிக்க 200 துணை நடிகர்கள் தேவைப்பட்டால் இயக்குநர் தன் இஷ்டப்படி யாரையும் கூப்பிட்டு நடிக்க வைத்துவிட முடியாது. அப்படி நடிக்க வைத்துவிட்டால் இந்த சங்கத்தினர் வந்து போர்க்கொடி பிடித்துவிடுவார்கள். சமீபகாலமாக இந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்கள். ஆனால் படமோ நாலு நாள் கூட ஓடாத நிலையில் சம்பளத்தை உயர்த்துவது என்பது முடியாத காரியம் என்று தயாரிப்பாளர்கள் பதிலளித்தார்கள்.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் நடபெற்றது. திரைப்பட தொழிலாளர்கள் அதிகப்படியான சம்பளம் கேட்டிருப்பதால் அவர்களுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இனி தயாரிப்பாளர் யாரை வேண்டுமானாலும் வைத்து படத்தைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கங்களின் வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு முடிவை எடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா... இன்னும் இல்லை என்றால் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளை பகிர்ந்திடுங்கள்.

01:15 by iamvenkatesh · 0

hotlinksin

நீயா நானா – விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள்



பண்டிகை நாட்களில் டிவி முன்னால் உட்கார்ந்தால் அன்று நிகழ்ச்சிகளை விட விளம்பரங்களைத்தான் நாம் அதிகம் பார்க்க முடியும். சொல்லப் போனால் நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள்தான் நன்றாக இருக்கின்றன என்பது வேறு கதை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்தால், இடையில் இவர்கள் போட்டுத் தாக்குகிற விளம்பரங்களின் எண்ணிக்கைதான் தாங்கவில்லை. இரண்டு மணிநேர நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 விளம்பரங்களுக்கு மேல் காட்டுகிறார்கள். நிகழ்ச்சிக்கு இடையில் விளம்பரங்கள் போட்டாக வேண்டிய கட்டாயத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருந்தாலும், அதிகமான விளம்பரங்கள் பார்ப்பதற்கு சலிப்பூட்டுகிறது. விளம்பரம் வரும் வேளையில் அடுத்த சேனலுக்கு தாவினால், அங்கு வேறு நல்ல நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தால், அதையே தொடர்ந்து பார்க்க வேண்டியதாகப் போய்விடுகிறது. நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் விளம்பரங்களை கொஞ்சம் அளவோடு வெளியிட்டால், நிகழ்ச்சியை கொஞ்சம் சலிப்பில்லாமல் பார்க்கலாம் என்பது நமது வேண்டுகோள். செவிசாய்க்குமா விஜய் டிவி?

நண்பர்களே www.hotlinksin.com ல் இணைந்துவிட்டீர்களா?

08:09 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய் ஆசையை நிறைவேற்றிய ஷங்கர்



முதல்வன் படத்தை ஷங்கர் இயக்க தயாரான போது முதலில் விஜய்யிடம் தான் அந்த கதையைச் சொன்னார் இயக்குனர் ஷங்கர். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அந்த படத்தில் அர்ஜூன் நடித்ததும் படம் மிகப்பெரிய ஹிட்டானதும் அனைவரும் அறிந்த விஷயம்தான். இதன் பிறகு விஜய்க்கு ஷங்கரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நெடு நாளைக்கு இருந்து வந்தது என்றே சொல்லலாம். நண்பன் படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் யோசித்த போது அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பவர் விஜய்தான் என்பது அவரது மனதில் தோன்ற விஜய்யை தொடர்பு கொண்டிருக்கிறார். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த விஜய் வேண்டாம் என்று சொல்வாரா என்ன… உடனே ஓ.கே. சொல்லிவிட்டார். இப்போது நண்பன் படமோ மிகப்பெரிய அளவுக்கு ஹிட்டாகியிருக்கிறது. இது பற்றி விஜய்யிடம் கேட்டபோது, ‘ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் ஆசை இப்போது நண்பன் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது…’ என்று சொல்லியிருக்கிறாரர்.

23:49 by iamvenkatesh · 0

hotlinksin

விரைவில் விஜய் டிவியில் நண்பன்



ரிலீஸ் அன முதல் நாளில் இருந்தே கலெக்க்ஷனில் சாதனை படைத்து வருகிறது விஜய்யின் நண்பன். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை வாங்க டிவி சேனல்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவியது. கடைசியில் விஜய் டிவி இந்த ரேஸில் முந்தியிருக்கிறது. விஜய் டிவி சில கோடிகளைக் கொட்டிக் கொடுத்து நண்பன் படத்திற்கான சேட்டிலைட் சேனல் உரிமையை வாங்கியிருக்கிறது. லேட்டஸ்டாக மைனா போன்ற மிகப்பெரும் ஹிட்டான படங்களையும் வாங்கியிருக்கிறது விஜய் டிவி. அடுத்து வரும் ஏதாவது ஒரு விடுமுறை நாளில் நண்பன் டிவிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

11:52 by iamvenkatesh · 0

hotlinksin

நண்பன் வசூல் - 5 நாட்களில் 50 கோடி



ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது விஜ்ய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்த நண்பன் படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய இந்த படத்திற்கு முதல் நாளில் இருந்தே திரையிட்ட இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. நண்பன் படத்தின் முதல் நாள் கலெக்க்ஷன் சுமார் 15 கோடி எனவும் கடந்த 5 நாட்களில் நண்பன் படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. எனினும் இந்த கலெக்க்ஷன்  பற்றி படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இதுவரை எதுவும் சொல்லவில்லை.

00:32 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த நடிகைகள் எப்பவுமே உஷார்தான்...



தயாரிப்பாளர்கள் மட்டும்தான் படத்தைத் தயாரிப்பதில் கிடைக்கும் பணத்தை மறுபடியும் சினிமாவில் போட்டு அடுத்த படத்தைத் தயாரிப்பார்கள். ஆனால் நடிகர்களோ நடிகைகளோ கொஞ்சம் என்ன ரொம்பவே உஷாராக தான் சம்பாதிக்கும் பணத்தை வேறு தொழில்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. இவர்கள் அரிதாக எப்போதாவது ஒருமுறை படத்தைத் தயாரிப்பார்கள். உஷார் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார் காஜல் அகர்வால். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு  மேல் சினிமாவில் நடித்து வரும் காஜல் தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் பிஸியாக நடித்துவருகிறார். விரைவில் மிக பிரமாண்டமான ஹோட்டல் ஒன்றை கட்ட உள்ளாராம் காஜல் அகர்வால். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் சல்லி காசு கூட மீண்டும் சினிமாவில் போட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உஷாராக இருக்கிறார்கள் இந்த நடிகைகள்.

15:37 by iamvenkatesh · 0

hotlinksin

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க எளிய வழிகள் - பாகம் 1



என்னதான் ரூம் போட்டு யோசிச்சு ஒரு விஷயத்தை நாம எழுதினாலும் அதை நாலு பேரு வந்து படிச்சுப் பார்த்தாதான் நாம எழுதின எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருக்கும். வந்தவங்களே நாலு கமென்டைப் போட்டுட்டுப் போனா... இன்னும் சந்தோஷமாகிடும். சிலர் பிளாக்கில் அருமையான விஷயங்களை எழுதியிருப்பார்கள். ஆனால் அதற்கு விழுந்த ஹிட்ஸ்ன்னு பார்த்தால் 10 அல்லது 20 தான் இருக்கும். அட, நல்ல பதிவை இவ்வளவு பேர்தான் படிச்சாங்களா என்று நாமளே யோசிப்போம். எழுதினவங்களோ நல்ல பதிவை படிக்கிறவங்க இவ்வளவு பேர்தானா என்று மண்டை காய்ஞ்சி போயிடுவாங்க. இவர்களுக்கு உதவுவதுதான் திரட்டிகளின் வேலை என்பதால், ப்ளாக் எழுதுகிறவர்கள் முதலில் தமிழில் வெளிவரும் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க தவறக்கூடாது. தமிழில் ஏராளமான திரட்டிகள் இணையத்தில் உலாவருகின்றன. அவற்றில் எத்தனையில் இணைக்க முடியுமோ அத்தனையிலும் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்.





இவை தமிழ் திரட்டிகளில் முக்கியமானவை. இவற்றில் தொடர்ந்து இணைத்து வாருங்கள். உடனேயே அதிகமான வாசகர்கள் கிடைத்துவிட மாட்டார்கள். போகப் போக நிச்சயம் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட HOTLINKSIN.com இணையதளம் அதிகமான வாசகர்களை பெற்றுவருகிறது குறிப்பிடத்தக்கது. நீங்களும் இந்த இணையதளத்தில் உடனே உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்.

00:41 by iamvenkatesh · 0

hotlinksin

‘நண்பன்’ படத்திற்கு தமிழக அரசு கேளிக்கை வரிவிலக்கு




விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான நண்பன் படம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இந்த படம் திரையிட்ட நாள் முதல் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி ஓட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நண்பன் படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கப்படும் அனைத்துப் படங்களுக்கும் கேளிக்கை வரி விலக்கு உண்டு என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் பிறகு இதுவரை எந்த படமும் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகைக்கு தேர்வு செய்யப்படாமலேயே இருந்தது. முதல் முறையாக நண்பன் படத்திற்கு இந்த வரிவிலக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நல்ல கருத்துக்களுடன் களம் இறங்கிய நண்பன் படத்திற்கு தமிழக வரிவிலக்கு அளித்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

01:24 by iamvenkatesh · 0

hotlinksin

‘அதை’ படிக்கிறவன் வௌங்கின மாதிரிதான்...



ஒரு தினசரி நாளிதழ் அதன் பெயரை இதுதான் என்று குறிப்பிட்டு நான் சொல்ல விரும்பவில்லை. அந்த செய்தி தாளில் பணியாற்றுபவர்களில் யாரோ ஒருவர் விடிய விடிய தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்யக் காத்துக் கிடந்திருப்பார் போலும். காலையில் டிக்கெட் கவுன்டர் திறந்த சிறிது நேரத்திலேயே டிக்கெட் அனைத்தும் காலியாகிவிட அவருக்கோ டிக்கெட் கிடைக்கவில்லை. வந்த கோபத்தில் பேனாவை எடுக்கிறார். அந்த செய்தித் தாளின் அரை பக்கத்திற்கு எழுதிக் கிழிக்கிறார். என்ன தெரியுமா? தட்கல் முறையில் இணையதளம் மூலம் டிக்கெட் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று. படிக்கும் போதே செம காமெடியாக இருக்கிறது. உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் போது இவர் சொன்ன இந்த ஐடியாவைப் பார்த்து எனக்கு இவர்கள் அறியாமையை நினைத்து அழுவதா? இல்லை இப்படி எல்லாம் 8 ஆவது அறிவையும் பயன்படுத்தி யோசிக்கிறாங்களே என்று சிரிப்பதா என்று தெரியவில்லை.

இணையதளம் மூலம் டிக்கெட் விற்கப்படுகிறது, இதனால் தட்கல் முறையில் மற்ற சாதாரண முறையிலும் டிக்கெட் எடுக்க கவுன்டரில் போய் காத்துக் கிடப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிச்சயம் உண்மைதான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. அந்த டிக்கெட்டை எடுத்து எல்லாரும் தலையைச் சுற்றி தூரவா எறிந்துவிடப் போகிறார்கள். பயன்படுத்தத்தானே போகிறார்கள். அப்படி இருக்கும் போது இந்த செய்தித்தாள் இன்னும் கூடுதல் ரயிலை இயக்க ஐடியா சொல்லலாமே அதைவிட்டுவிட்டு செருப்பு சிறிதாக வாங்கிவிட்டீர்களா? உடனே காலை வெட்டுங்கள் என்கிற ரீதியில் ஏன் இப்படி அறியைமையுடன் செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

பிரிட்டீஸ்காரனுங்க போட்டு வெச்ச ரெயில்வே தண்டவாளத்திலயே இன்னும் எத்தனை காலத்துக்கு வண்டியை ஓட்டுவீங்க. புதுசா ட்ராக் போடுங்க. சீனாவில மணிக்கு 700 கிலோமீட்டர் வேகத்துல ரயில் ஓடுது. அது மாதிரி இங்க எப்ப கொண்டு வருவீங்க... என்று கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இந்த செய்தித்தாள்கள் இப்படி யோசிப்பது இதைப் படிப்பவர்களை மடையர்களாக்கும் விஷயம்தான்.

இப்படி ஐடியா தருகிற செய்தித்தாள்கள் இருக்கிற வரையில் அதைப் படிக்கிறவன் நிச்சயம் வௌங்கின மாதிரிதான்.

00:48 by iamvenkatesh · 4

hotlinksin

நண்பன் படத்திற்கு எதிராக... - ஒரு காமெடி பீஸ் போராட்டம்



நண்பன் படத்திற்கு எதிராக அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதித்தது. படத்தில் விஜய் பெயரை வைத்தது தவறாம். அந்த அமைப்பின் தலைவரின் பெயரும் அது என்பதால் படத்திற்கு எதிராக குதித்திருககிறார்கள் இந்த தொண்டர்கள். இதில் காமெடி என்னவென்றால் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நண்பன் படத்தைப் பார்க்காமலே பேசியதுதான். விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு போராட்டத்தில் குதித்த அவர்கள் அந்த படத்தைப் பார்த்திருந்தால் நிச்சயம் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். காரணம் படத்தின் மெசேஜ் அப்படி. இதில் படத்தைத் தடை செய்யவும் கோரியிருக்கிறார்களாம். இவங்க கிச்சு கிச்சு மூட்டுறதுக்கு அளவே இல்லாமப் போச்சு. இப்படி ஏன்பா விளம்பரம் தேடுறதுக்கு யோசிக்கிறீங்க. இதில் எல்லாம் உச்சகட்ட காமெடி என்னவென்றால் புதியதலைமுறை டிவி மட்டுமே இந்த போராட்டத்தை (?) செய்தியில் ஒளிபரப்பியது. மற்ற மீடியாக்கள் ஏன் ஒளிபரப்பவில்லை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதால் நான் அதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆ... ஊ... என்றால் போராட்டத்தில் குதித்துவிடும் நண்பர்களே உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு சொந்தமாக யோசிக்கும் பழக்கமே கிடையாதா? சப்பையான விஷயங்களுக்காக கூட இப்படி போராடும் நேரத்தில், போங்கப்பா... போயி புள்ளைங்களுக்கு படிப்பு சொல்லி குடுங்க...

00:28 by iamvenkatesh · 0

hotlinksin

நண்பன் மெஹாஹிட் படத்தின் விமர்சனம்



நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில நிச்சயமா ஜெயிப்பீங்க என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.

ஏற்கனவே வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.

என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில் வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல நண்பர்களாகிவிடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன் விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்) தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில் எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில் நடித்த எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள். பஞ்சவன் பாரிவேந்தனாக வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில் சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம் அல்ல... எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான்... என்கிற ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம் மெசேஜ்.



நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம் முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும் வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப் பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக இஞ்சினியரிங் படித்துவிட்டு பின்பு தன் அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சிகள் செம டச்சிங்.

ஜீவா, ஒரு அரியர்ஸ்ம் வைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஊரு உலகத்தில உள்ள சாமி படங்களை எல்லாம் வாங்கி வைத்து பூஜை செய்கிற கேரக்டர். பின்பு, ஜீவா திருந்திவிட்ட பின்னர், அவரிடம் கேள்வித் தாளை ஜெராக்ஸ் செய்து விஜய் கொடுக்கும் போது, அதை வாங்கி கசச்கி எறிந்துவிட்டு சொல்லும் வசனமும், ஜீவா கேம்பஸ் இன்டர்வியூவில் கேள்வி கேட்பவர்களிடம் பேசும் வசனங்களுக்கும் செம க்ளாப்ஸ் போடலாம்.

கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டரில் நடித்திருக்கிறார் இலியானா. ஒரு பாடலுக்கு கிளாமராக ஆட்டமும் போடுகிறார். 

சைலன்ஸர் கேரக்டரில் வரும் சத்யனுக்கு இது நிஜமாகவே மிகவும் பிரமாண்டமான கேரக்டர்தான். இவர் இதுவரை நடித்த படங்களில் நல்லா நடிச்ச படமும் இதுதான். இவருக்கு பெயர் வாங்கித் தரப்போகும் படமும் இதுவாகத்தான் இருக்கும்.

வைரஸ் என்னும் பெயருடன் வலம் வரும் சத்யராஜ் இன்றைய கல்லூரிகளின் சிடுசிடு மூஞ்சு டீன்களை நினைவுக்குக் கொண்டு வருகிறார். சில நிமிடங்களே வந்து செல்லும் எஸ்.ஜெ. சூர்யா படத்தில் ஒரு டர்னிங் பாய்ன்ட். அவரது அப்பாவின் அஸ்தி சொம்பை எடுத்து வைத்து கொண்டு ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் போக்கு காட்டுவது செம ரகளையான காமெடி.

படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே... தியேட்டரே செம அலப்பறையாகிறது அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.

ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஒரு தடவை கேட்கலாம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஹரிஸ்.

சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால், அதுவும் ஏற்கனவே வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் இருந்து வெளிவந்தது. வேறு ரீமேக் மன்னர்கள் கையில் சிக்கியிருந்தால் ஒருவேளை சின்னாபின்னமாகியிருந்தாலும் ஆகியிருக்கலாம். இந்த படம் ஷங்கர் டீமிற்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான்.

உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள் http://www.hotlinksin.com இணையதளத்தில்.

01:06 by iamvenkatesh · 0

hotlinksin

கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்?


ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் கோச்சடையானில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமீப நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தன. முதலில் அனுஷ்கா, பின்பு தீபிகா படுகோனே இப்படி ஒவ்வொருவராக ஆளாளுக்கு ரஜினிக்கு ஜோடியாக்கினார்கள். கடைசியில் டர்ட்டி பட புகழ் வித்யாபாலனையும் ரஜினிக்கு ஜோடியாக்கினார்கள். கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்? என்பதற்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது. காத்ரினா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்க உள்ளார். இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ரஜினியுடன் நடிக்கப்போவதால் காத்ரினா கைஃப் தனது கால்ஷீட்டை மொத்தமாக கோச்சடையான் படத்திற்கு வழங்கியுள்ளார்.

19:16 by iamvenkatesh · 0

hotlinksin

அமலாபால் - பொண்ணு ரொம்பவே உஷார்!



இந்த வருடத்தில் அதிக படங்களில் நடிக்கப் போகும் நடிகை என்று அமலாபாலுக்கு யாராவது பட்டம் கொடுத்தல் கூட ஆச்சரியப்பட ஏதும் இல்லை. காரணம், இவர் நடித்துள்ள வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அமலாபால். இப்போது படு மும்முரமாக காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்து வருகிறார் அமலாபால். இது மட்டுமின்றி அமலாபாலை நோக்கி இயக்குநர்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் கையில் கிடைத்ததை வாங்கிப் போட்டுக் கொண்டு படங்களை ஒத்துக் கொள்ளும் எண்ணத்தில் இல்லை அமலாபால். இதற்கு முக்கிய காரணம், இப்போதே ஏதாவது படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டால் அதன் பின்பு, பெரிய நடிகர்கள் யாராவது கூப்பிட்டால் உடனே போக முடியாது என்பதால்தான் வருகிற வாய்ப்புகளை உடனே ஒத்துக் கொள்வதில்லையாம் அமலாபால். இதை அறிந்த அவரது நட்பு வட்டாரங்கள் பொண்ணு ரொம்ப உஷாரா இருக்குப்பா... என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

14:55 by iamvenkatesh · 0

hotlinksin

தமிழ் படங்களை தாங்கிப் பிடிக்கும் சந்தானம்



எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் படத்தில் அவரை விட வெயிட்டாக வந்து கலக்குவது கூடவே வரும் காமெடியன்களாகத்தான் இருக்கிறார்கள். வடிவேலு நடிப்பில் வெளிவந்த பல படங்களில் ஹீரோ டம்மி பீஸ் என்றாலும் கூட படங்கள் விலை போகவும் ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கவும் காரணம் வடிவேலுதான். இப்போது அந்த இடத்தை பிடித்திருக்கிறார் சந்தானம். திரையில் சந்தானத்தைப் பார்க்கும் போது முன்னணி ஹீரோக்களுக்கு வரும் விசிலை விட அதிக ஆரவாரத்தை ரசிகர்கள் மத்தியில் காண முடிகிறது. ரசிகர்கள்தான் சந்தோஷப்படுகிறார்கள் என்றில்லை படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கூட படத்தில யாரு காமெடி சந்தானமா…? என்று ஆர்வத்தோடு கேட்கிறார்களாம். இன்றைய தேதியில் பிஸி நடிகராக வலம் வரும் சந்தானம் படத்தில் நடித்துக் கொடுப்பது, டப்பிங் பேசுவதோடு சரி. படம் சம்பந்தப்பட்ட பிரமோஷன்களில் கலந்து கொள்ளவே மாட்டார். அந்த நேரத்தில ஏதாவது படத்தில நடிச்சு காசு தேத்திரலாம் என்பதுதான் அய்யாவோட ஐடியாவாம்.

20:21 by iamvenkatesh · 0

hotlinksin

நான் ரசித்த விளம்பரம்


இந்த விளம்பரத்தை நான் ரசிப்பதற்கு ரிச்சா ஒரு முக்கிய காரணம்.

அதிரூப சுந்தரியே அழகூரின் தேவைதையே
வரிகளுக்கு ரிச்சாவின் அழகு முகத்தை காட்டுகிறார் இயக்குநர்.

ஆயிரம் மலர்களே மலருங்கள் நேச்சர் பவர் பியூட்டியைப் பாருங்கள்
என்று வரும் வரிகளுக்கு ரிச்சா நடக்கிற நடையையும் பார்க்கிற பார்வையையும் பாருங்க அடேங்கப்பா... 

14:51 by iamvenkatesh · 0

hotlinksin

ரூ. 15,000 சம்பளத்தில் வேலை மற்றும் கல்வி உதவித் தொகையுடன் படிப்பு



அச்சுத்துறை நச்சுத்துறைன்னு சொல்லுவாங்க. ஆனால் டிஜிட்டல் அச்சுத்துறையோ இன்று அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் இதில் பணியாற்றுவதற்கென்றே சிறப்பு படிப்பு ஒன்றை அறிமுகம் செய்கிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். டிஜிட்டல் பப்ளிஷிங் என்னும் இளநிலை பட்டப்படிப்பை +2 அல்லது பட்டப்படிப்பை முடித்தவர்கள் படிக்கலாம். கணிணி மூலமாகவே இதற்கான தேர்வு நடத்தப்படும். பின்பு நேர்காணல் தேர்வு நடைபெறும். விண்ணப்படிவத்தை www.dpub.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த படிப்பில் சேர்பவர்களுக்கு அன்று முதல் ஜோவ் இந்தியா நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்கான பணி நியமனம் வழங்கப்படும். முழுநேரமாக இந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே படிக்கலாம். முதல் வருடத்தில் 6 ஆயிரமும், 2 ஆம் ஆண்டில் 8 ஆயிரமும், மூன்றவது வருடத்தில் 10 ஆயிரமும உதவித் தொகையாக வழங்கப்படும். பட்டப்படிப்பை முடித்தவுடன் ரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் நிரந்தரப் பணியை அந்நிறுவனத்திலேயே  தொடரலாம். இது குறித்து மேலும் விளக்கம் தேவைப்படுவோர் 97109 38631 / 97109 38632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

11:54 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய் தந்த வாய்ப்பு - தவறவிட்ட இயக்குநர்



விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் எழில். ஜெயம் ரவியை வைத்து தீபாவளி என்னும் படத்தை இயக்கியவர் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மனம்கொத்திப் பறவை என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் இவரைக் கூப்பிட்டு இரண்டு தெலுங்கு படங்களைக் குறிப்பிட்டு அவற்றை ரீமேக் பண்ணலாம். என்னை வைத்து இயக்குங்கள்... என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரீமேக் படம் பண்ணினால் அது கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அந்த வாய்ப்பை விட்டுவிட்டாராம் எழில். இது குறித்து இப்போதும் ஃபீல் பண்ணுகிறார் எழில். விஜய் தந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு எழில் போயிருந்திருப்பாரோ!

02:11 by iamvenkatesh · 0

hotlinksin

அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படாத...



மயக்கம் என்ன பெரிய அளவுக்கு வெற்றியைப் பெறாவிட்டாலும் படத்தில் என்னை கவர்ந்த காட்சிகள் சில இருக்கின்றன. அவற்றில் ஒரு காட்சிதான் ரிச்சா அவள் நண்பனைப் பார்த்து பேசும் காட்சி. ஒரே வரியில் அடுத்தவர் மனைவி மேல் ஆசைப்படும் அத்தனை பேருக்கும் சாட்டை கொண்டு விளாசியிருந்தார் செல்வராகவன்.

கீழே விழுந்ததில் அடிபட்டு மனநோயாளி ஆகியிருந்த தனுஷ், அவர் மனைவியாக நடித்திருக்கும் ரிச்சா, தனுஷ் நண்பன் மூவரும் வண்டியில் வந்து கொண்டிருப்பார்கள். நண்பன்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பான். திடீரென தனுஷ் வண்டியை நிறுத்திதச் சொல்லி இறங்கி ஓடுவார். அப்போது அவரைப் பார்க்கும் ரிச்சா மனம் உடைந்து போய் அழுவார். உடனே அவர்களது நண்பன் பின் சீட்டுக்கு வந்து ரிச்சாவை அப்படியே மெல்ல அணைத்துக் கொள்வான். ‘அழாத யாமினி... நீ ஏன் அவன் கூட இருந்து கஷ்டப்படுறே... அவனை ஒரு ஹாஸ்பிட்டல்ல சேர்ததுட்டு என்கூட வந்திடு... உன்னை நல்லா வச்சிப்பேன்...’ என்று சொல்வான்.

அதைக் கேட்டு கோபப்படும் யாமினி, ஒரு இளைஞன் முன்பு தான் அழுதது தன் தவறு என உணர்கிறாள். நண்பனை நோக்கி முறைத்த படியே விரலைக் காட்டி ‘உன் முன்னால நான் அழுதது தப்பு... அதனாலதான் நீ இப்படி எல்லாம் சொல்லுற... இந்த மாதிரி என்கிட்ட பேசாத... அவன் மனநோயாளி அல்ல... அவன் ஜீனியஸ்...’ என்கிறாள். நண்பனும் தன் தவறை உணர்ந்தவனாக, ‘என்னை மன்னிச்சிரு... யாமினி... ப்ளீஸ் நம்ம ப்ரண்ட்ஸ்க்கு நான் இப்படி பிகேவ் பண்ணினது தெரிஞ்சா... என்னை...’ என்கிறான். ‘ம்... நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்... நீ எப்பவும் போல என்கிட்ட பேசலாம்... எங்க வீட்டுக்கு வரலாம்... நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணு... அதுதான் உன்னை இப்படி எல்லாம் பேச வைக்குது... உன் பொண்டாட்டிய நீதான் தேடிக்கணும்... இன்னொருத்தர் பொண்டாட்டி மேல ஆசைப்படக் கூடாது... ஆங்... இன்னொரு தடவை என் புருஷனை பைத்தியம்னு சொல்லாத, அவன் ஜீனியஸ்...’ என்று சொல்வாள் அவள். 

நண்பனுக்கு அட்வைஸ் பண்ணும் அதே நேரத்தில் அவள் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுவாள். ம்... யாமினி மாதிரி பொண்டாட்டி கிடைக்கணும்... ம்... அதுக்கெல்லாம் யோகம் வேணும்பா...

01:57 by iamvenkatesh · 0

hotlinksin

போதையால் சிரழியும் மாணவர்கள்



பிஞ்சிலே பழுத்தவர்கள் என்பது குமரி மாவட்டத்தில் உள்ள இறைச்சகுளம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் போதை மருந்துகளை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டயருக்கு பஞ்சர் ஒட்டப் பயனபடும் ஒருவகையான மருந்தை பயன்படுத்தியும் அதை எரிப்பதன் மூலம் உருவாகும் புகையிலிருந்தும் போதையை அனுபவிக்கிறார்களாம் இந்த மாணவர்கள். இதை அந்த பகுதிவாசிகள் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

மாணவர்கள் இது போன்று போதை பொருட்களை பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும், தண்ணி அடிப்பதும் இப்போது பரவலாக பரவி வருகிற விஷயமாக மாறிவிட்டது. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நாளுக்கு நாள் மாணவர்கள் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுவது அதிகரித்துதான் வருகிறது. எங்க போய் முடியுமோ இது...?

01:28 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் ‘நண்பன்’ நிகழ்த்திய சாதனை



ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள நண்பன் படத்திற்கான டிக்கெட்டுகள் இன்று காலை முதல் பெரும்பாலான தியேட்டர்களில் விற்பனையாகத் தொடங்கின. காத்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் ஜனவரி 12 ஆம் தேதியே படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் டிக்கெட் வாங்க வந்திருந்தனர். ஆனால் ரசிகர் மன்றத்தினரே ஜனவரி 12 அன்றைய டிக்கெட்டுகளை தியேட்டர்களில் மொத்தமாக வாங்கிவிட்டனர். அன்றைய டிக்கெட் கிடைக்காதவர்கள், மறுநாள் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். பொங்கல் விடுமுறை தினங்களின் டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாவதாக தியேட்டர் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. 

சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு நண்பன் படத்திற்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, ‘ஜனவரி 12 அன்று முதல்நாள் நண்பன் படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி டிக்கெட் வாங்க வந்தேன். இங்கு கிடைக்கவில்லை. வேறு திரையரங்கில் போய் டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார். ‘முதல் நாள் டிக்கெட்டுகளை தியேட்டர்காரர்கள் பதுக்கிவைத்துவிட்டு அன்று பிளாக்கில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துவிடுவார்கள்’ என்று தியேட்டர்காரர்களையும் அவர் குறை சொன்னார்.

ம்... டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் நண்பன் வெற்றியடைந்து கலெக்க்ஷனில் சாதனை படைத்தால் சந்தோஷம்தான்.


01:07 by iamvenkatesh · 1

hotlinksin

கல்யாணம் பண்ணிட்டீங்களா இன்னும் இல்லையா - ஒரு ஃபீலிங் ஸ்டேட்மென்ட்



என் நண்பர் ஒருவர் ஏதாவது இளைஞர்களை சந்தித்தால் அவரைப் பற்றி நலம் விசாரிக்கிறாரோ இல்லையோ கல்யாணம் பண்ணிட்டீங்களா என்றுதான் முதலில் கேட்பார். என்னடா இது வம்பாப் போச்சு இந்த மனுசன் இப்படி எடுத்த எடுப்பிலேயே இப்படி கேக்குறாரே என்றுதான் யாருக்குமே நினைக்க தோன்றும். அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் என் நண்பரிடம் ‘உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா...?’ என்று கேட்டால், இல்லை என்னும் பதில்தான் அவரிடம் இருந்து வரும். நீங்கள் உடனே கேட்கலாம், என்ன, கல்யாணம் ஆகாமலே மத்தவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா என்று கேட்கிறாரே என்று... அதுதான் என் நண்பன். தனக்குத்தான் இன்னமும் கல்யாணம் ஆகலை... மத்தவங்களாவது சீக்கிரம் பண்ணட்டுமே என்கிற நல்ல எண்ணம்தான் அது.

என் நண்பருக்கு இன்றைய தேதியில் கொஞ்சம் வயது அதிகம் ஆகிவிட்டது. அதனால் பெண் கிடைப்பதில் சிரமமாகிவிட்டது. ஆனால், அன்றோ அவர் இன்னும் நான் செட்டில் ஆகணும்... நல்லா சம்பாதிக்கணும்... அப்புறம்தான் கல்யாணம் என்றுதான் சொல்லிக் கொண்டே வந்தார். கடைசியில் நல்லா சம்பாதிச்சார். செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இளமை என்றும் காத்துக் கொண்டிருக்குமா என்ன? இப்போது சுகர், பிபி என்று எல்லா கழுதைகளும் அவரோடு வந்து ஒட்டிக் கொண்டுவிட்டன. இத்தனைக்கும் அவர் வயது முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையில்தான்.

‘திருமணத்திற்கு அரசாங்கமே குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருந்தாலும் ஆண்களைப் பொறுத்தவரை 25-29க்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. மனது அலைபாய்வது கொஞ்சம் குறையும். இதனால் தொழில் அல்லது வேலை போன்ற ஏதாவது ஒன்றில் மனதை முழுமையாக செலுத்த இயலும். இல்லாவிட்டால் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் வாழ்க்கை வெறுத்துப் போய்விடும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ்ந்து விட முடியும். ஆனால் ஒரு ஆணால் அது சாத்தியம் அல்ல. முப்பது வயதுக்கும் மேல் தனியாக வாழும் இளைஞர்கள் இன்றைய சமுதாயத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை. 25-29க்குள் திருமணம் செய்து உங்கள் வயது 50 இருக்கும் போது உங்கள் மகனோ மகளோ கல்லூரி முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல தயாராகிவிடுவார்கள். உங்கள் பாராம் கொஞ்சம் குறையும். நீங்கள் தாமதமாக திருமணம் செய்தால் எல்லாமே லேட்டாகிக் கொண்டே போகும்...’

இதெல்லாம் என் நண்பர் 30 ஆகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சகோதரர்களுக்கு சொன்னவை. ஆகவே சகோதரர்களே உடனே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிற வழியைப் பாருங்கள்.

23:54 by iamvenkatesh · 0

hotlinksin

நண்பன் பார்க்கப் போறீங்களா? உஷார்...




பொங்கலுக்கு படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? அதுவும் விஜய் படம் நண்பன் பார்க்கப் போறீங்களா? கொஞ்சம் உஷாரா நாளைக்கே டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க. நண்பன் படத்திற்கு இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம். இதனாலதான் 12 ம் தேதி ரிலீஸ் ஆகிற நண்பனுக்கு 8 ஆம் தேதியே டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போறாங்க. நாளை டிக்கெட் விற்பனை துவங்கும் நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றே 12 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விடும் என்று எதிர்பார்ப்பதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

20:55 by iamvenkatesh · 0

hotlinksin

கலைஞரின் குடும்ப சொத்து பட்டியல் - மயக்கமா வருதே....



ஒரு நாளில் 100 ரூபாய் சம்பாதிக்கிறதுக்குள்ளயே நம்ம ஆளுங்க வெலவெலத்துப் போகிறாங்க. ஆனால் முன்னாள் முதல்வர் கலைஞர் குடும்பத்தினரின் சொத்து மதிப்பைப் பாருங்கள். கிட்டத்தட்ட சில ஆயிரம் கோடிகள் தேறும் போலிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு சம்பாதிக்க முடிந்தது? இதில் நமது பணம் எவ்வளவு என்று கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கீழ உள்ள லிஸ்டைப் படிக்கிறதுக்கு முன்னால எதுக்கும் உஷாரா ஒரு சோடா வாங்கி பக்கத்தில வெச்சிக்குங்க.

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

20:38 by iamvenkatesh · 0

hotlinksin

தினமும் ரூ.1000 சம்பளத்தில் வேலை... வர்றீங்களா?



ராமர் பாலம் விவகாரம் ரொம்பவே சூடு பிடிச்சிருந்த அந்த நேரத்துல வார இதழில் ஒன்றில் அது சம்பந்தமான விளம்பரம் ஒன்று போட்டிருந்தார்கள். ஆட்கள் தேவை என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த அந்த விளம்பரம் எனக்கு இன்னமும் நினைவிலேயே இருக்கிறது.

ஆட்கள் தேவை

கல்வித் தகுதி தேவையில்லை. எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் ரூ. 1000 சம்பளம் வழங்கப்படும். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். பெயின்ட் அடிக்கத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

வேலை : ராமர் பாலத்திற்கு பெயின்ட் அடிப்பது

பாலம் என்று ஒன்று இருந்தால் அதற்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக பெயின்ட் அடித்துத்தானே ஆகவேண்டும். அதைத்தான் இந்த விளம்பரம் நாசூக்க்காக சொல்லுகிறது.

01:20 by iamvenkatesh · 0

hotlinksin

விநாயகா வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லாத படம் - விமர்சனம்



பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்த விளம்பரமும் இல்ல. தினசரியில் மட்டும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள் அதுவும் விளம்பரத்தில தொப்பை வயிறோட ஒருத்தர் நிக்கிற மாதிரி. அதனாலதான் படத்துக்கு விநாயகான்னு பேரு வெச்சிருப்பாங்க போல. இந்த தொப்பை ஆசாமிதான் ஹீரோவா அட வௌங்குச்சு போங்க என்றுதான் படம் பார்க்க போகும்வரை நினைத்திருந்தேன். ஆனால் படத்திற்கு இளம் கதாநாயகர்களின் படங்களுக்கு வருவது போன்ற கூட்டம் வந்திருதது. ஒருவேளை இவர்கள் சந்தானத்துக்காக வந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் சந்தானத்துக்காக வந்தவர்கள் சந்தானத்தை திரையில் பார்த்ததும் கைத்தட்டியிருக்க வேண்டுமே... அதுவும் இல்லை. பின்புதான் புரிந்தது வந்திருந்தவர்கள் எல்லோரும் படத்தில் ஏதோ இருக்கிறது என்ன எண்ணத்தில்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தை நன்றாகவே நிறைவேற்றி அனுப்புகிறது விநாயகா.

இனி படத்தின் கதைக்குப் போவோம்.

வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார் கார்த்திக். பெசன்ட் நகரில் இருக்கும் தன் அக்கா வீட்டில் தங்குகிறார். பார்ப்பதற்கு பீம் பாய்ன்னு சொல்லுவோமே அந்த மாதிரி இருக்கிறார் கார்த்திக். இவருடன் இவரது அக்கா கணவரின் தம்பியான சந்தானமும் தங்கியிருக்கிறார். கார்த்திக்குக்கு சென்னையில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் கல்பனாவுக்கு கார்த்திக்கை பிடிக்காமல் போகிறது. பின்பு போகப் போக கார்த்திக்கிடம் தன் மனதை இழக்கிறாள் கல்பனா. இதுக்கு அப்புறமா க்ளைமேக்ஸ்ல என்ன நடக்கும்ங்கிறதை நீங்களே யூகித்துவிடலாம்தான்.

பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும், கார்த்திக் கதாபாத்திரம் அதையெல்லாம் நினைவுக்கு கொண்டுவராமல் செய்துவிடுகிறது. படம் போரடிக்காமல் நகருகிறது. பின்னணி இசை இல்லாமல் திரையில் கேரக்டர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ மேடை நாடகம் ஃபீல் நமக்குத் தோன்றினாலும், அடுத்தடுத்த காட்சிகள் படத்தை இன்னும் டெவலப் செய்து கொண்டு போகின்றன. இடைவேளைக்குப் பிறகு கதாநாயகி பீல் பண்ணுகிற இடங்களில் சில காட்சிகள் ரீபிட்டடு போல் வந்து போகின்றன. 

வெள்ளந்தியான இந்த கேரக்டருக்கு நான்றாகவே பொருந்தியிருக்கிறார் ஹீரோ. இந்த படத்தின் ஹீரோவுக்காக கதை பண்ணினார்களா? இல்லை கதைக்காக இந்த ஹீரோவை தேடிக் கண்டுபிடித்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் கார்த்திக் கேரக்டருக்கு அவரை விட்டால் ‘சின்னவனே... பெரியவனே...’ அவங்களை கூப்பிட்டுதான் நடிக்க வைத்தாக வேண்டும். இவர் சந்தானத்துடன் இணைகிற இடங்களில் வெடி சிரிப்புகளுக்கு பஞ்சமில்லை. 

இவருடன் சந்தானம் படுத்திருக்கும் போது மனுஷன் போடுகிற குறட்டைச் சத்தத்துக்கு சந்தானம் நொந்து நூடுல்ஸ் ஆகிறார் என்றால், லிப்டில் சந்தானம் மாட்டிக் கொள்கிற போது அசால்டாக கார்த்திக் வந்து திறந்துவிடுவது குபீர் சிரிப்பு காமெடி. கார்த்திக் கேரக்டரின் சாதாரண பேச்சே பல இடங்களில் நம்மை கைத்தட்டி சிரிக்க ரசிக்க வைக்கின்றன.

சாட்டிங்கில் அறிமுகமான பெண் ஒருத்தி கார்த்திக்கை பார்க்கவேண்டும் என்று ஆசையோடு வந்து இவரது பெரிய தொப்பையைப் பார்த்ததும் தன் பெயரை மாற்றிச் சொல்லி எஸ்கேப் ஆகிறாள். ஆனாலும் அந்த பெண் வந்துவிடுவாள் என்கிற அந்த ஏக்கத்தோடு அவர் வெயிட் பண்ணுகிற காட்சிகள் அருமை. ‘எத்தனையோ பேர் குண்டுன்னு சொன்ன போது கூட நான் வருத்தப்படலை, ஆனா அவ என்னை குண்டுன்னு சொல்லிட்டா...’ என்று ஹீரோ தன் அக்காவிடம் சொல்லி அழுகிற காட்சி செம டச்சிங் சீன்ஸ். அவ்வளவு பெரிய குண்டு மனிதராக இருந்தாலும் தன் மனம் இன்னும் சின்னக் குழந்தை மாதிரிதான் என்று நிரூபிப்பதாக இருக்கிறன, தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கார்த்திக் எம்பிக் குதிக்கும் காட்சி.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் ‘பையா’ சோனியா. பொண்ணு நடிக்குது என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு செம கேசுவலாக பண்ணிட்டுப் போறாங்க. எந்த காட்சியிலும் அலட்டிக்கிற மாதிரி இல்லாம ரொம்ப ரிலாக்ஸா பண்றாங்க சோனியா. தமிழ் சினிமாவில் சோனியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனா, நம்ம ஆளுங்க இந்த மாதிரி முக வெட்டு பொண்ணுகளை ரசிப்பாங்களாங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான். இவர் தவிரவும் வேறு சில கதாநாயகிகளும் இருக்கிறார்கள். எல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்த முகங்கள்தான்.

சந்தானம் அவருக்கே உரிய ஸ்டைலில் காமெடியில் கலக்கியிருக்கிறார். மேலும் சின்னச் சின்ன கேரக்டர்களில் அற்புதமாக பலரும் பண்ணியிருக்கிறார்கள். அதுவும் அந்த அண்ணி கேரக்டர், அவங்க வாய்ஸ். நச்ன்னு இருக்கு.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் நல்ல படம் பார்த்த திருப்தியில் சந்தோஷமாகவே வெளியே வருகின்றனர். இது ஒன்றே போதும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு.

படத்தை இயக்கியிருக்கிறார் பாலசேகரன். அடிதடி, வெட்டு குத்து, கிளாமர் காட்சிகள், குத்துப்பாட்டு இதெல்லாம் இல்லாமல் படம் எடுத்ததற்காகவே  பாலசேகரனுக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம். ராம் மோகன் ராவ் படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படி ஒரு ஹீரோ என்றாலும் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தைத் தயாரித்த அவருக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள். 

00:55 by iamvenkatesh · 0

hotlinksin

வந்தனா - செம சூப்பர் பிகருப்பா...



தமிழ்நாட்டின் தவிச்ச வாய்க்கு தண்ணி தருவதற்கு யோசிக்கிறது கேரளா. ஆனால் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகி வேண்டும் என்றால் எந்த அணையைத் திறக்கிறதோ தெரியவில்லை தினமும் ஒரு கதாநாயகிகளாக வந்து குவிகிறார்கள் கோடம்பாக்கத்தில். 

இப்போது லேட்டஸ்ட் வரவு நந்தனா. செம சூப்பர் பிகருப்பா. கிருஷ்ணவேணி பஞ்சாலையில் அறிமுகமாகியிருக்கிறார். பொதுவாகவே கேரள அம்மணிகள் அழகாகத்தான் இருப்பார்கள். அதுவும், நந்தனா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். இவரைப் பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது மலையாள சூப்பர் பிகர் என்பது. ரொம்பவே க்யூட்டாக இருக்கும் நந்தனாவை இயக்குநர் தேடி கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். நந்தனா சிரிச்சாலே ஏரியாவே கண் வைக்குது. இப்படி ஒரு அழகியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இயக்குநர் தனபால் பத்மநாபனுக்குதான் நன்றி சொல்லணும்.

15:50 by iamvenkatesh · 0

hotlinksin