மிஸ்டுகால் - ஏதாவது ஃபிகர் நம்பராக இருக்குமோ...!



போனுக்கு மிஸ்டுகால் வந்துவிட்டால் சிலர் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் வெகு சிலர் அந்த நம்பருக்கு திருப்பி கூப்பிடுவார்கள். (ஒருவேளை ஏதாவது பிகர் சிக்காதா என்ற நல்ல எண்ணம்தான்?) இப்படி திருப்பி அழைத்த எண்களில் இருந்து சமீபகாலமாக பேலன்ஸ் அதிகமாக காலியாகிவிடுகிறதாம். இதுபற்றி வோடபோன் நிறுவனம் ‘சில செல்போன்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக மிஸ்டுகால் வருகிறதாம். திரும்ப அவற்றை தொடர்பு கொண்டால் அந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பலமடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். எனவே வெளிநாடுகளில் இருந்து இது போன்ற மிஸ்டுகால்கள் வந்தால் அவற்றை பொருட்படுத்தி திரும்ப தொடர்பு கொண்டு பேச வேண்டாம். இந்த அழைப்பு எந்த எண்ணில் இருந்து வருகிறது... என்பது பற்றிய விசாரணையில் இறங்கியுள்ளோம்.’ என்று தெரிவித்துள்ளது. இனிமே மிஸ்டுகாலாக இருந்தால் உள்ளூரா வெளியூரா வெளிநாடா என்று பார்த்து மீண்டும் அழையுங்கள். இல்லாவிட்டால் உங்கள் போன் இருக்கும்... ஆனா பேலன்ஸ் இருக்காது...
hotlinksin

2 comments:

  1. // போன் இருக்கும் ஆனால் பேலன்ஸ் இருக்காது //

    சூப்பர்


    அன்புள்ள
    அசலம்

    ReplyDelete
  2. நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

    ReplyDelete