‘அதை’ படிக்கிறவன் வௌங்கின மாதிரிதான்...



ஒரு தினசரி நாளிதழ் அதன் பெயரை இதுதான் என்று குறிப்பிட்டு நான் சொல்ல விரும்பவில்லை. அந்த செய்தி தாளில் பணியாற்றுபவர்களில் யாரோ ஒருவர் விடிய விடிய தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்யக் காத்துக் கிடந்திருப்பார் போலும். காலையில் டிக்கெட் கவுன்டர் திறந்த சிறிது நேரத்திலேயே டிக்கெட் அனைத்தும் காலியாகிவிட அவருக்கோ டிக்கெட் கிடைக்கவில்லை. வந்த கோபத்தில் பேனாவை எடுக்கிறார். அந்த செய்தித் தாளின் அரை பக்கத்திற்கு எழுதிக் கிழிக்கிறார். என்ன தெரியுமா? தட்கல் முறையில் இணையதளம் மூலம் டிக்கெட் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று. படிக்கும் போதே செம காமெடியாக இருக்கிறது. உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் போது இவர் சொன்ன இந்த ஐடியாவைப் பார்த்து எனக்கு இவர்கள் அறியாமையை நினைத்து அழுவதா? இல்லை இப்படி எல்லாம் 8 ஆவது அறிவையும் பயன்படுத்தி யோசிக்கிறாங்களே என்று சிரிப்பதா என்று தெரியவில்லை.

இணையதளம் மூலம் டிக்கெட் விற்கப்படுகிறது, இதனால் தட்கல் முறையில் மற்ற சாதாரண முறையிலும் டிக்கெட் எடுக்க கவுன்டரில் போய் காத்துக் கிடப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிச்சயம் உண்மைதான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. அந்த டிக்கெட்டை எடுத்து எல்லாரும் தலையைச் சுற்றி தூரவா எறிந்துவிடப் போகிறார்கள். பயன்படுத்தத்தானே போகிறார்கள். அப்படி இருக்கும் போது இந்த செய்தித்தாள் இன்னும் கூடுதல் ரயிலை இயக்க ஐடியா சொல்லலாமே அதைவிட்டுவிட்டு செருப்பு சிறிதாக வாங்கிவிட்டீர்களா? உடனே காலை வெட்டுங்கள் என்கிற ரீதியில் ஏன் இப்படி அறியைமையுடன் செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

பிரிட்டீஸ்காரனுங்க போட்டு வெச்ச ரெயில்வே தண்டவாளத்திலயே இன்னும் எத்தனை காலத்துக்கு வண்டியை ஓட்டுவீங்க. புதுசா ட்ராக் போடுங்க. சீனாவில மணிக்கு 700 கிலோமீட்டர் வேகத்துல ரயில் ஓடுது. அது மாதிரி இங்க எப்ப கொண்டு வருவீங்க... என்று கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இந்த செய்தித்தாள்கள் இப்படி யோசிப்பது இதைப் படிப்பவர்களை மடையர்களாக்கும் விஷயம்தான்.

இப்படி ஐடியா தருகிற செய்தித்தாள்கள் இருக்கிற வரையில் அதைப் படிக்கிறவன் நிச்சயம் வௌங்கின மாதிரிதான்.
hotlinksin

4 comments:

  1. எனக்கு இனயதள வசதி இருக்கிறது,7.59 க்கு சிஸ்டத்தை ஆன் செய்து,8.05 க்கெல்லாம் டிக்கெட் எடுத்துவிடுகிறேன,ஆனால் இனயதள வசதி இல்லாதவர்கள்...,அதிகாலை நாலு மணிக்கே போய் கியு வில் நின்றும் டிக்கெட் கிடிக்கவில்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும.அனைத்து வீடுகளிலும் இனய வசதி இல்லாத இத்தருணத்தில்,கவுன்டரில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதாம் ஒதுக்கி தருவதுதான் மனிதாபிமானம்.முறையும் கூட.

    ReplyDelete
    Replies
    1. //கவுன்டரில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதாம் ஒதுக்கி தருவதுதான் மனிதாபிமானம்.முறையும் கூட...///

      ஆமாம்...

      Delete
  2. உங்கள் கருத்துடன் ஒத்து போக இயலவில்லை. மன்னியுங்கள்.

    இந்தியா போன்ற நாடுகளில் இணையம் இன்னும் பரவலாகாத நிலையில் இணைய இணைப்பு இல்லாதவன் எப்படி பயணச்சீட்டை பதிவு செய்ய இயலும்? கிராமங்களில் வாழும் இந்தியர்களில் எத்தனை பேருக்கு இணையம் பயன்படுத்தும் வசதி உள்ளது? இங்கே நான் பொருளாதார வசதியை மட்டும் குறிக்கவில்லை, உள்கட்டமைப்பு வசதியையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.

    24 மணி நேர மின்சார வசதியே கொடுக்க வக்கில்லாத ஊரில் இணையத்தில் எல்லா வசதியையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

    அதிக ரயில்கள் இயக்குவதும் ஒன்றும் எளிதல்ல. சென்னையிலிருந்து திருச்சிக்கு சுமார் 6 மணி நேர பயணம். ஒரு நாளைக்கு சுமார் 18 ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதை விட அதிகமாக எவ்வளவு ரயில்களை விட முடியும்? சிக்னலுக்காக ஒவ்வொன்றும் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

    அதே நேரத்தில் அந்த பதிப்பில் கூறியது போல இணையத்தில் பதிவு செய்யும் வசதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதும் சரியில்லை. ஏதேனும் கோட்டா வழங்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ///ஏதேனும் கோட்டா வழங்கலாம்.///

      உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன் நண்பரே...

      Delete