வாடி வாடி வாடி... க்யூட் பொண்டாட்டி...
மயக்கம் என்ன படத்திற்கு நண்பருடன் போயிருந்தேன். படத்தில் ரிச்சாவை பார்த்த அவருக்கு அன்றிலிருந்து ரிச்சா காய்ச்சல் வந்துவிட்டது. தியேட்டரை விட்டு வெளியே வந்தவர் ‘ரிச்சா என்ன அழகு...’ என்று ஆரம்பித்தார். நான் ஸ்டாப் மஜாவாக ரிச்சா பற்றியே புலம்பிக் கொண்டு வந்தார். பின்பு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் ஒஸ்தி படம் பார்க்கப் போயிருந்தேன்.
சிவப்பு சேலையைக் கட்டிக் கொண்டு இடுப்பு தெரிய ரிச்சா ஒரு நடை நடந்து வருவார் பாருங்கள் ஒரு காட்சியில்... அடஅட... என்ன ஒரு அழகு. அந்த காட்சிக்கே ஒட்டு மொத்த உலகத்தையும் ரிச்சா பெயருக்கு எழுதி வைத்துவிடலாம். நண்பர் சும்மா இருப்பாரா... ரிச்சா நினைப்பில் ஏங்கியே போய்விட்டார். ‘வாடி வாடி வாடி... க்யூட் பொண்டாட்டி...’ என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்.
மறுநாள் அவருக்கு ஜூரம். அட இது ரிச்சா காய்ச்சல்ப்பா... வா... இன்னொரு தடவை ஒஸ்தி படம் பார்ப்போம் சரியாகிடும் என்று சொன்னேன். ரிச்சா மட்டும் வர சீன்ஸ் போடுவங்கன்னா சொல்லு வரேன்... ஆனா இந்த சிம்பு இம்ச தாங்கலைப்பா... என்றார் நண்பர்.
சதா ரிச்சா பத்தியே புலம்பிட்டிருக்கிற என் நண்பருக்காக மட்டுமில்லாம ரிச்சா காய்ச்சல் தாக்கின இல்ல தாக்கப் போகிறவங்களுக்காக ரிச்சா பற்றின சில விவரங்ளை சொல்லப் போறேன்.
ரிச்சா அமெரிக்கா வாழ் இந்திய பெண்களுக்கான அழகிப் போட்டியில மிஸ் போட்டோஜெனிக் பட்டம் வாங்கியவர். பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்துற நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்றவர். ஏவிஎம் நிறுவனம்தான் தெலுங்கில் தயாரித்த லீடர் படதில் ரிச்சாவை முதலில் நடிக்க வைத்தார்கள். ரிச்சாவை தமிழுக்கு செல்வராகவன் அழைத்துவந்தார். ரிச்சா நடித்த மயக்கம் என்ன, ஒஸ்தி இரண்டு படங்களுமே ப்ளாப்பாகி விட்டாலும் வருத்தப்படாம அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ரிச்சா.
அடுத்த படத்திலயாவது மேடம் சிரிக்கிறமாதிரி கேரக்டரை குடுங்க இயக்குநர்களே...
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “வாடி வாடி வாடி... க்யூட் பொண்டாட்டி...”
Post a Comment