தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு - அதிர்ச்சியில் சினிமா தொழிலாளர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
சமீபகாலமாகவே தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்பளத்தை அதிகமாகவே உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இது தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் மத்தியில் மிகப் பெரிய புகைச்சலையே உண்டு பண்ணியிருந்தது. சினிமா தொழிலாளர்கள் சம்பளத்தைப் பொறுத்தவரை லோ பட்ஜெட் படத்திற்கும் பெரிய பட்ஜெட் படத்திற்கும் ஒரே மாதிரி சம்பளம்தான். அது மட்டுமல்லாமல் சங்கம் வைத்துக் கொண்டு இவர்கள் பண்ணுகிற அலப்பறை தாங்கவே முடியாததாக இருந்து வந்தது
ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடிக்க 200 துணை நடிகர்கள் தேவைப்பட்டால் இயக்குநர் தன் இஷ்டப்படி யாரையும் கூப்பிட்டு நடிக்க வைத்துவிட முடியாது. அப்படி நடிக்க வைத்துவிட்டால் இந்த சங்கத்தினர் வந்து போர்க்கொடி பிடித்துவிடுவார்கள். சமீபகாலமாக இந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்கள். ஆனால் படமோ நாலு நாள் கூட ஓடாத நிலையில் சம்பளத்தை உயர்த்துவது என்பது முடியாத காரியம் என்று தயாரிப்பாளர்கள் பதிலளித்தார்கள்.
இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் நடபெற்றது. திரைப்பட தொழிலாளர்கள் அதிகப்படியான சம்பளம் கேட்டிருப்பதால் அவர்களுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இனி தயாரிப்பாளர் யாரை வேண்டுமானாலும் வைத்து படத்தைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கங்களின் வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு முடிவை எடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா... இன்னும் இல்லை என்றால் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளை பகிர்ந்திடுங்கள்.
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா... இன்னும் இல்லை என்றால் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளை பகிர்ந்திடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு - அதிர்ச்சியில் சினிமா தொழிலாளர்கள்”
Post a Comment