என்னது… சிவாஜி செத்துட்டாரா? - அதிர்ச்சியடைந்த இளம் நடிகர்என்னது… சிவாஜி செத்துட்டாரா? - அதிர்ச்சியடைந்த இளம் நடிகர்

 

20:25 by iamvenkatesh · 0

hotlinksin

அதிர்ச்சியடைய வைத்த தனுஷின் 3
ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி பிரத்தியேக தியேட்டரில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக 3 படம் சத்யம் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டை போர் பிரேம்ஸ் தியேட்டரில் நடந்த சூரிய நகரம் பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார்கள். டிக்கெட்டை ஆர்வமாக வாங்கிப் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், சத்யம் தியேட்டரில் இரவு 10.30 மணிக்கான டிக்கெட் அது. இதுவரை தமிழ் திரையுலகில் பத்திரிகையாளர்களுக்கு எந்த சிறப்புக் காட்சியும் இந்த நேரத்தில் திரையிடப்பட்டதில்லை. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிய சலிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து விசாரித்த போது, பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட முடியவில்லை என்பதால் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும், ஆனால், மத்தியானம், மாலை நேர காட்சிக்கான டிக்கெட் எதுவும் கிடைக்காததால் இரவு நேர டிக்கெட்டை மொத்தமாக புக் பண்ணி பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்... என்பது தெரியவந்தது. ஆனால், அன் டைமில் வைக்கப்பட்ட இந்த பத்திரிகையாளர் காட்சியை பத்திரிகையாளர்களில் பலரும் புறக்கணித்திருக்கிறார்கள்.

01:15 by iamvenkatesh · 0

hotlinksin

அடேங்கப்பா... தனுஷின் 3 படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?
தனுஷின் படங்களில் இதுவரை வெளியான படங்களை விட 3 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. 3 படத்திற்கு டிக்கெட் ரிசர்வேசன் துவங்கிய அன்றே மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன. தனுஷின் படங்களில் முதல் முறையாக இந்த படத்திற்குதான் இப்படி புக்கிங் ஆகி உள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை திங்கட்கிழமைக்குமேல்தான் டிக்கெட் கிடைக்கும்... என்று தியேட்டரில் இருந்து தகவல் வருகிறது. இது பற்றி தியேட்டர்காரர்களிடம் விசாரித்தால், ‘தனுஷ் ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக புக் பண்ணிவிட்டார்கள்... ரஜினி ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதால் படம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரம் ஏற்பட்டுள்ளது’ என்று சொல்கிறார்கள். சென்னை, அண்ணா சாலையில் உள்ள திரையரங்கத்திற்கு நாம் சென்ற போது அங்கு தனுஷ் ரசிகர்கள் சிலர் படம் ரிலீஸ் ஆன அன்று டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள், ‘தனுஷ் படத்தை முதல் நாளில் முதல் காட்சி பார்த்துவிடுவோம். ஆனால் 3 படத்தை அவ்வாறு பார்ப்பதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், படத்தின் கொலைவெறி பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருப்பதுதான். அதுவே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டதால் தனுஷின் மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் முதல் நாளில் டிக்கெட் கிடைக்கவில்லை...’ என்று தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் ‘தியேட்டர்காரர்களிடம் சிலர் மொத்தமாக டிக்கெட்டை வாங்கிவிடுகிறார்கள். படம் ரிலீஸ் ஆன அன்று பிளாக்கில் விற்று கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்... இதில் தியேட்டர்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது...’ என்று தியேட்டர்காரர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

01:17 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகையை பந்தாடும் இயக்குநர்கள்...
பார்ப்பதற்கு ஸ்மார்ட் அன்ட் க்யூட்டாக இருக்கும் பிந்து மாதவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்தது கழுகு. கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்ததால் அவரது கெப்பாசிட்டிக்கு ஏற்றவாறே இந்த படத்தின் வெற்றியும் அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிந்துமாதவி ஈரம் அறிவழகன் நகுலை வைத்து இயக்கும் வல்லினம் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ படத்திலிருந்து பிந்துமாதவியை தூக்கிவிட்டு மிருதுளா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துவிட்டார் அறிவழகன். இது ஒரு புறம் இருக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில், ரெட்ஜெயன்ட் தயாரிப்பில் உருவாக இருக்கும் நீர்ப் பறவைகள் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க பிந்து மாதவியைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார் சீனு ராமசாமி. என்ன ஆச்சோ... ஏதாச்சோ... இப்போது திடீரென பிந்து மாதவியை தூக்கிவிட்டு சுனைனாவை விஷ்ணுவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. இது குறித்து இயக்குநர்கள் தயாரிப்பில் விசாரித்துப் பார்த்தால் கால்ஷீட் பிரச்சினை... என்று இரண்டே வார்த்தையில் சொல்லி முடிக்கிறார்கள்.

00:59 by iamvenkatesh · 0

hotlinksin

பிளாக் எழுதுபவர்கள் மேல் கடுப்பில் சினிமா இயக்குநர்கள்
காலைக் காட்சி 12 மணிக்குத் துவங்கினால் அது முடிந்த சில நிமிடங்களிலேயே பிளாக்கில் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தில் படம் பற்றி அலசி காயப்போட்டு விடுகிறார்கள் பிளாக் எழுதுபவர்கள். படம் நன்றாக இருந்தால் விழுந்து விழுந்து பாராட்டும் இவர்கள் படம் நன்றாக இல்லை என்றால் கடுமையாக விமர்சனமும் செய்துவிடுகிறார்கள். இந்த பிளாக்கர்கள் மீது சினிமா இயக்குநர்களுக்கோ தயாரிப்பாளர்களுக்கோ கோபம் இல்லை. ஆனால் சில பிளாக் எழுதுபவர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் குறிப்பாக தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.க்கள்.

பத்திரிகையிலோ அல்லது ஏதாவது மீடியாவிலோ வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர்களில் பலரும் சொந்தமாக பிளாக் எழுதி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியை தாம் பணியாற்றும் மீடியாவுக்காக பார்த்துவிடும் இவர்கள், படம் பார்த்துவிட்டு வந்ததும் செய்யும் முதல் வேலை தமது பிளாக்கில் படம் பற்றிய விமர்சனத்தை எழுதுவதுதான். தான் வேலை பார்க்கும் மீடியாவுக்கு மட்டும் ஒன்றிரண்டு நாட்கள் கழித்தே எழுதித் தருகிறார்கள் என்பது வேறு கதை. 

தாம் பிளாக்கில் எழுதும் விமர்சனத்தில் படத்தின் பிளஸ்களை எழுதுவதை விட்டு மைனஸ்களையே எழுதித் தள்ளுகிறார்களாம் இவர்கள். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே இவர்கள் எழுதுவதால் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கூட கிடைக்காமல் போய்விடுவதுதான் பரிதாபம். இதனால் இது போன்று பிளாக் எழுதும் பிளாக்கர்கள் மேல் ரொம்பவே கடுப்பாக இருக்கிறார்கள் படத்தின் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும். எனவே பிளாக் எழுதும் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் காட்சிக்கு கூப்பிடாமல் இருந்துவிடலாமே என்னும் கோரிக்கையை பி.ஆர்.ஓ.விடம் வைத்திருக்கிறார்களாம் 01:12 by iamvenkatesh · 0

hotlinksin

நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியலுக்கு வரும் இளம் நடிகை
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் சோனியா அகர்வால். இந்த படம் ரிலீஸ் ஆனதும் நிச்சயம் அதைத் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும் என்று நினைத்திருந்த சோனியா அகர்வாலுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் எடுபடாமல் போனதால் அதைத் தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் ஹீரோயினாக நடிப்பது என்னும் தனது கொள்கையை சற்றே தளர்த்தியிருக்கிறார் சோனியா. பொருத்தமான கேரக்டராக இருந்தால் போதும்... என்று சொல்லியிருக்கிறார் சோனியா அகர்வால். விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் டிவி சீரியலில் சோனியா தலைகாட்டுவார் என்று தெரிகிறது.

12:00 by iamvenkatesh · 0

hotlinksin

‘வெங்காயம்’ ரிசல்ட் - கலக்கத்தில் சேரன்!
ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் வெங்காயம். புதுமுகங்களே முழுக்க முழுக்க படத்தில் இருந்தாலும் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. பார்த்தவர்கள் பாராட்டினாலும் படம் ஓடினால்தானே சந்தோஷம். ஆனால் படமோ வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியது. காரணம் படத்திற்கு சரியான பப்ளிசிட்டி இல்லாததுதான். குறை சொல்ல முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தைப் பார்த்து அதிசயித்துப் போனவர் இயக்குநர் சேரன். இது போன்ற நல்ல படங்கள் ரசிகர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்று நினைத்த சேரன் இந்த படத்தை கொஞ்சம் விளம்பரப்படுத்தி ரீ ரிலீஸ் செய்தார். சேரனே இதை செய்வதால் இந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, தியேட்டரில் கூட்டமே இல்லையாம். முன்பு வெங்காயம் என்ற பெயரில் இந்த படம் ரிலீஸ் ஆன போது இருந்ததை விட கூட நாலு பேர் அதிகமாக உட்கார்ந்து இந்த படத்தைப் பார்க்கிறார்களாம். சொந்தப் பணத்தைப் போட்டு சேரன் இந்த படத்தை ரிலீஸ் செய்ததால் செலவு செய்த பணம் சேரனின் கையைக் கடிக்கும் என்றே தெரிகிறது. ஆனாலும் ஒரு நல்ல முயற்சியைச் செய்தார் சேரன் என்பதற்காக நிச்சயம் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராஜ்குமார் முதலிலேயே இவ்வளவு பப்ளிசிட்டியுடன் களம் இறக்கியிருந்தால் படம் நிச்சயம் வசூலையும் வாரிக் குவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெங்காயம் ஏற்படுத்திய காயம் பற்றிய விவரம் தெரியாமலே ஆரண்ய காண்டம், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களையும் ரீ ரிலீஸ் செய்யத் தயாராகி வருகிறார்களாம் படத்தின் தயாரிப்பாளர்கள்.

00:31 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்
ஒஸ்தி படத்தில் மல்லிகா போட்ட குத்தாட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த மல்லிகாவையே கடுப்பாக்கியிருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனம். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்ட மல்லிகா அந்த கார் ஷோரூமுக்குப் போயிருக்கிறார். ஆனால் கார் வாங்கும் ஆசை அடியோடு போய்விட்டதாம் அங்கு நடந்த சம்பவத்தால். அப்படி அங்கு என்னதான் நடந்தது? ‘நீங்கள் எங்கள் காரை வாங்க முடிவெடுத்தற்கு நன்றி. ஆனால் உங்களுக்கு எங்களால் ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்ய முடியாது...‘ என்று கைவிரித்துவிட்டதாம் விற்பனை நிறுவனம். ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களின் இமேஜ் மற்றும் பின்புலம் போன்றவற்றை பரிசீலித்தே காரை அவர்களிடம் விற்பனை செய்யுமாம். அப்படி இருக்கும் போது அந்த நிறுவனம் காரை தமக்கு விற்பனை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டது, தன்னை மிகவும் அவமானப்படுத்தும் செயலாக நினைத்து வெறுத்துப் போய்விட்டாராம் மல்லிகா.

00:43 by iamvenkatesh · 0

hotlinksin

பாலியல் தொழிலாளியாக நடிக்க ஆசை - நடிகை அதிரடி
நடிகரோ நடிகையோ தன் வாழ்நாளில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தே ஆக வேண்டும் என்னும் லட்சியத்தை வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய ட்ரீம் ரோல். நடிகை ஆன்ட்ரியாவுக்கும் இப்படி ஒரு ட்ரீம் ரோல் இருக்கிறது. அது என்ன தெரியுமா? பாலியல் தொழிலாளியாக நடிப்பது. ‘பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடிப்பது தனது கனவு ரோல் என்றும் அந்த கேரக்டரில் நடிக்க யோசிக்கமாட்டேன்... உடனே ஒத்துக் கொள்வேன்...’ என்கிறார் ஆன்ட்ரியா. இது போன்ற கேரக்டரில் நடித்தால் உங்கள் இமேஜ் பாதிக்காதா என்று கேட்டால் ‘கரீனா கபூர், தபு போன்றோரல்லாம் அது போன்ற கேரக்டரில் நடித்தார்கள். அதனால் அவர்களது இமேஜ்க்கு பாதிப்பு வந்துவிட்டதா என்ன?’ என தனக்கு முன்னாலேயே பாலியல் தொழிலாளியாக படங்களில் நடித்த நடிகைகளைச் சுட்டிக்காட்டி பேசுகிறார் ஆன்ட்ரியா. 

01:30 by iamvenkatesh · 0

hotlinksin

நிகிதாவை விட்டு வைக்காத இயக்குநர்அறிமுகமாகி பல வருடங்கள் ஆன போதிலும் இதுவரை வெகு சில படங்களிலேயே நடித்திருக்கிறார் நிகிதா. சமீபத்தில் வெளியான முரண் படத்திலும் சேரனின் அடங்காத மனைவியாக வந்து ஆட்டம் போட்டவர் இந்த நிகிதா. கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் மூன்றாவது நாயகியாக இப்போது இணைந்திருக்கிறார் நிகிதா. இந்தப் படத்தை இயக்கிவருகிறார் சுராஜ். ஏற்கனவே அலெக்ஸ் பாண்டியனின்ல அனுஷ்கா, சனுஷா ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் சுராஜ் நிகிதாவுக்கு இந்த வாய்ப்பை கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். கார்த்தியுடன் நடிப்பது பற்றி கேட்டால், ‘கார்த்தி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்… கார்த்தியுடன் நடிக்கும் இந்த படம் எனக்கு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன்…’ என்கிறார் நிகிதா.

14:24 by iamvenkatesh · 0

hotlinksin

பெண்களின் விழிப்புணர்வுக்காக ஒரு நான்வெஜ் படம்பணத்திற்காகவும், சொகுசாக வாழவேண்டும் என்கிற பேராசையாலும் பெண்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது “அசைவம்”

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்களது எண்ணம் அறிந்த காமவெறியன் ஒருவன் அவர்களைத் தன் வசப்படுத்துகிறான்.  அவனிடம் சிக்கிய அந்த பெண்களின் கதி என்ன? என்பதை விறுவிறுப்பான பின்னணியில், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளது  “ அசைவம் “


அன்னை தெரசா இண்டெர் நேஷனல் சார்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து  இயக்கியும் இருக்கிறார் கின்னஸ் கிஷொர்.  நாயகன் சித்தார், நாயகிகள் ஜெனிபர்,ஸ்ரீஜா இவர்களுடன் வாசு விக்ரம், சிட்டி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


15:52 by iamvenkatesh · 0

hotlinksin

ஹன்ஸிகாவா இப்படி செய்கிறார்...?சினிமா நடிகைகள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் செய்கிற முதல் வேலை ஆங்காங்கே இடத்தை வாங்கிப் போடுவதுதான். அதன்பிறகு முடிந்தால் கல்யாண மண்டபம் கட்டுவார்கள். பணத்தை நல்ல வகையில் முதலீடு செய்வது எப்படி என்று நிபுணர்களிடம் பாடமும் படிப்பார்கள். ஆனால் ஹன்ஸிகா இதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறார். இவரது நீண்டநாள் கனவு முதியோர் இல்லம் கட்டுவதுதான். இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஹன்ஸிகா. முதல் வேலையாக இதற்காக நல்ல இடத்தைப் பார்க்கும்படி தனது அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் ஹன்ஸிகா. முதியோர் இல்லம் கட்டி முதியோர்களைப் பராமரிக்க வேண்டும்... என்ற கொள்கையுடன் இருக்கும் ஹன்ஸிகாவை ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

15:37 by iamvenkatesh · 0

hotlinksin

சிமென்ட் மூட்டை திருடி விற்ற சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மனம் கொத்திப் பறவை ஷூட்டிங் மற்றும் இன்ன பிற வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் கடலளவு காமெடி கடுகளவு காதல் என்னும் பாலிஸியுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் எழில்.

‘படத்தின் கதை ரொம்பவே சிம்பிளானதுதான். ஒரு ஆரம்பப் பள்ளியைச் சுற்றிலும் நகர்கிறது கதை. சிவகார்த்திகேயனுடைய அப்பா இளவரசு ஒரு பில்டிங் காண்டிராக்டர். அப்பாவுக்கு தெரியாமலே சிமென்ட் மூட்டைகளைத் திருடி விற்கிற கேரக்டர்தான் சிவகார்த்திகேயனுடையது. பள்ளிக்கூடம் ஒன்றின் கன்ஸ்ட்ரக்ஸன் வேலைக்குப் போவார் சிவகார்த்திகேயன். அங்கு கரஸ்பாண்டன்டாக இருக்கிறார் ஹீரோயின்... அப்புறம் என்ன... காதல் மோதல் காமெடி தான்... படம் பாருங்க சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க...’ என்கிறார் படத்தின் இயக்குநர் எழில்.

00:55 by iamvenkatesh · 0

hotlinksin

சேரனின் மாஸ்டர் பிளான் - கைகொடுக்குமா? காலை வாருமா?சமீபத்தில் வெளியான படம் வெங்காயம். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேருமே படத்தைப் பாராட்டினார்கள். ஆனாலும் படம் சில நாட்கள் கூட ஓடவில்லை. காரணம், படம் வெளியானதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு படத்திற்கு பப்ளிசிட்டி செய்யாமல் விட்டிருந்தார்கள். என்னதான் படத்தை கோடி கோடியாக கொட்டி எடுத்தாலும், படத்திற்கு விளம்பரம் இல்லையென்றால் மக்களை அது போய் ரீச் ஆவதே இல்லை. இதை லேட்டாக உணர்ந்திருக்கிறது வெங்காயம் படக் குழு. அதே நேரத்தில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சேரனுக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. நல்ல கருத்துக்கள் இருக்கும் வெங்காயம் படம் நிச்சயம் ரசிகர்களை நல்ல முறையில் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை ரீரிலீஸ் செய்கிறார் சேரன். இதற்காக பப்ளிசிட்டி டிசைன்ஸ்களில் இருந்து எல்லாமே மாற்றப்பட்டுள்ளன. வெங்காயம் படத்தின் புதுவித விளம்பர டிசைன்கள் ரசிகர்களை ஈர்க்கிற விதத்தில்  உருவாக்கப்பட்டுள்ளன. டைட்டிலிலும் மாற்றம் செய்திருக்கிறார் சேரன். சேரன் இந்த படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பழைய வெங்காயம் இப்போது ப்ரெஷ்ஷாக வலம் வரப்போகிறது.

23:38 by iamvenkatesh · 0

hotlinksin

தயாரிப்பாளர் காலை வாரிய நடிகர்
இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சுவையான சம்பவங்களைக் களமாகக் கொண்டு இளசுகள் என்னும் படம் உருவாகி வருகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்ஸடன வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரையுலகிற்கு புதியவர். இவரது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் படத்தைத் தயாரிக்க வந்துள்ளார். மீடியம் பட்ஜெட்டில் படத்தை முடித்து விட வேண்டும் என்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

புதுமுகமாக அறிமுகமாகும் இப்படத்தின் ஹீரோவின் நட்பு கிடைத்திருக்கிறது. கையில் இருக்கும் தொகை படத்தைத் தயாரித்து முடிக்க போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் அவரிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன... உங்களுக்கு எத்தனை லட்சம் வேணும்னு சொல்லுங்க... நான் அரேஞ்ச் பண்ணிடுறேன்... ஆனா, என்னை ஹீரோவாகப் போட்டுதான் படம் எடுக்கணும்...’ என்று சொல்லியிருக்கிறார் ஹீரோ. ‘பணம் போடுறாரே... அப்புறம் என்ன ஹீரோவாக அவரையே போட்டு படத்தை எடுத்துவிடலாம்...’ என்று முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

படத்தின் பூஜையும் போட்டு முடித்தாயிற்று. படப்பிடிப்பையும் துவக்கிவிட்டார்கள். தயாரிப்பாளரின் பணம் தண்ணியாய் செலவாக ஆரம்பித்தது. ஹீரோவிடம் போன தயாரிப்பாளர் ‘தம்பி... பணம் ரொம்ப செலவாகிட்டு இருக்குது... நீங்க தரேன்னு சொன்ன பணத்தை எப்போ தருவீங்க...’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஹீரோ... ‘அடுத்த வாரம் ஊருக்கு போறேன்... ஊர்ல இருந்து அரேஞ்ச் பண்ணிட்டு வந்து தந்துடுறேன்...’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒருவாரம் ஊருக்கு போய்விட்டு வந்த ஹீரோவின் முன்னால் போய் நின்றிருக்கிறார் தயாரிப்பாளர். ‘என்ன தம்பி... பணம் ரெடியா...?’ என கேட்டிருக்கிறார்.

‘அப்பாகிட்ட ரெடி பண்ண சொல்லியிருக்கேன்... ஒரு வாரத்தில பேங்க்ல போட்டிருவாங்க... டோன்ட் ஒரி...’ என்று நம்பிக்கையுடனே சொல்லியிருக்கிறார் ஹீரோ. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்திருக்கிறது. பாதி படம் முடிந்த பிறகும் ஹீரோ பணத்தை இறக்காததால் சற்றே டென்ஷனான தயாரிப்பாளர், ‘என்ன தம்பி... என்ன ஆச்சு... பணத்தை தருவீங்களா... இல்லையா...?’ என்று கேட்டிருக்கிறார்.

பாதி படம் முடிந்துவிட்டதல்லவா... இனிமேலும் படத்தில் இருந்து தன்னை தூக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட ஹீரோ ‘சார்... அது வந்து... அப்பா பணம் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு...’ என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் அதிர்ந்தே போய்விட்டார் தயாரிப்பாளர்.

‘என்ன தம்பி நான் உங்களைதான் மலை போல நம்பி இருந்தேன்... நீங்க என்னடான்னா... காலை வாரிட்டீங்களே...’ என்று வருத்தத்துடனே சொல்லியிருக்கிறார்.

‘என்ன பண்றது சார்... நான் எங்க அப்பாவை மலை போல நம்பியிருந்தேன்... அவரு என்னை கவுத்துட்டாரே....’ என்று சொல்லியிருக்கிறார் ஹீரோ.

முக்கால்வாசி படப்பிடிப்பு முடிஞ்சு போச்சு... இனி என்ன பண்றது... வேறு வழியில்லாமல் மீதி பணத்தையும் தன் கையிலிருந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தி முடித்திருக்கிறார்கள்.

கையில காசே இல்லாம தயாரிப்பாளருக்கு அல்வா கொடுத்து ஹீரோவாகிவிட்டதால் அந்த ஹீரோவைப் பற்றி ‘பையன் ரொம்பவே உஷாருப்பா...’ என்கிறார்கள் இளசுகள் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

00:27 by iamvenkatesh · 0

hotlinksin

சரவணபவன் சர்வரை காதலிக்கும் நடிகை!
பொதுவாக நடிகைகளிடம் ‘யாரையாவது காதலிக்கிறீர்களா?’ என்று கேட்டால், படத்தில் மட்டும்தான் காதலித்திருக்கிறேன்... என்று பூசி மெழுகுவார்கள். ‘படத்தில நடிக்க வருவதற்கு முன்பு படிக்கும் போது யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று கேட்டால், ‘இடத்தை கொஞ்சம் காலி பண்ணுறீங்களா?’ என்பது போல் இருக்கும் அவர்களது பார்வைகள். இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் காதல் சரண்யா. காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர், இப்போது மழைக்காலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

இவரிடம் காதல் அனுபவம் பற்றி கேட்டால், இவரிடம் இதுவரை இரண்டுபேர் மட்டுமே காதலை சொல்லியிருக்கிறார்களாம். ஒருவர் சரவணபவன் சர்வர். அடிக்கடி சரவணபவனுக்கு போகும் இடத்தில் அவர் சந்தியாவிடம் காதலை ஓப்பன் பண்ணியிருக்கிறார். அதற்கு ஒரு ரிப்ளை கூட பண்ண முடியவில்லையாம் சரண்யாவால். 

படிக்கும்போது தனது சீனியர் ஒருவரை காதலித்திருக்கிறார் சரண்யா. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்ததும் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனாலேயே காதல் பாதியில புட்டுக்கிச்சாம். ‘யாரு வேணும்னாலும் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்...’ என்று ஓப்பனாகவே பேசுகிறார் சரண்யா.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

விஜயகாந்தை கடுப்பாக்கிய ஆசாமி - சங்கரன்கோவிலில் பரபரப்பு
சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, தமிழக அரசின் மின்வெட்டு குறித்து பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்தவுடன் இப்போது இருக்கும் மின்வெட்டு இன்னும் அதிகமாகும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கீழே நின்று கொண்டிருந்த ஒருவர், ‘மின்சாரம் இருப்பதால்தானே நீங்க பேசிக்கொண்டிருக்கிறீங்க...’ என்று கேட்டார்.

இதனால் கடுப்பான விஜயகாந்த், ’யார் நீங்க...?’ என்று கேட்டார், அதைக் கேட்ட அந்த ஆள், ‘எங்க ஊருக்கு வந்து விட்டு என்னையே நீ யார்ன்னு கேட்கிற நீங்க யாரு..?’ என்று கேட்டார். இதனால் கடுப்பான விஜயகாந்த், ‘மேலவா... சொல்றேன்...’ என்று சொல்ல ‘நீ கீழே வா...’ என்று பதிலுக்கு அந்த ஆசாமி சொல்ல, இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்க காவலுக்கு நின்றிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். தேமுதிகவினர் இது குறித்து காவல்துறையினரிடம் முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தேமுதிகவினரையும் சமாதானம் செய்ய விஜயகாந்த் அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றார்.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

என் பொண்ணுகளே என்னை கிண்டல் பண்றாங்க... - அதிர்ச்சியில் பிரபல நடிகர்
சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ஹீரோவாக தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடித்த படங்களை இப்போது பார்த்தால் அவருக்கே சகிக்கவில்லையாம். இவர் நடித்த பழைய படங்களை டிவியில் போட்டால் அந்த சேனல் பக்கமே ரிமோட்டைக் கொண்டு போக மாட்டாராம் அர்ஜூன். அதையும் மீறி எப்போதாவது அந்த படங்களைப் பார்த்துவிட்டால் அவரது பொண்ணுங்களே அவரை கிண்டல் பண்ணி சிரிக்கிறார்களாம். நடிக்க வந்த புதிதில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் என்ன நடிப்பது எப்படி நடிப்பது என்று தெரிந்து கொள்ளாமலே இயக்குநர்கள் சொல்வதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடும் அர்ஜூன், அதன் பிறகு படிப்படியாக நடிப்பில் தன்னை பட்டை தீட்டியிருக்கிறார்.

01:13 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்
திறமைசாலிகள் வாய்ப்புகளை தேடிப் போகவேண்டியதில்லை. வாய்ப்புகளே அவர்களை துரத்திப் போய் பிடித்துக் கொள்ளும் என்பதற்கு கேபிள் சங்கரை ஒரு உதாரணமாக சொல்லாம். தமிழ் பிளாக்கர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் கேபிள் சங்கர் படம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் இவரை துரத்திப் பிடித்த வாய்ப்பு, படத்திற்கு வசனம் எழுதுவது. சுந்தர் சி இயக்கத்தில் படப்பிடிப்பில் இருக்கும் மசலா கேஃப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் கேபிள் சங்கர். இந்த வாய்ப்பு அவருக்கு தானாக போய் சேர்ந்திருக்கிறது. இயக்குனர் பத்ரி அவருடன் சேர்ந்து வசனமெழுத அழைத்ததன் பேரில் சுந்தர்சி படத்திற்கு வசனகர்த்தாவாக மாறிவிட்டார் கேபிள்சங்கர். படத்தின் காட்சிகளில் நிறையோ குறையோ மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடும் கேபிள் சங்கருக்கு முன்னணி இயக்குநர் சிலர் இப்போது வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம். ‘என் பட டிஸ்கஸனில் வந்து கலந்துக்குங்க…’ என்பதுதான் அந்த இயக்குநர்களி தற்போதைய கோரிக்கையாம்.

00:38 by iamvenkatesh · 0

hotlinksin

செல்வராகவன் வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சில வருடங்களுக்கு முன்பு 7ஜி ரெயின்போ காலனி படம் வந்த சமயம் என்று நினைக்கிறேன். அப்போது வார இதழ் ஒன்றில் செல்வராகவன் பேட்டி ஒன்று படித்தேன். அதில் ‘தேவதைகள் முட்டாள்கள்’ என்பதை செல்வராகவன் சொல்வது போல போட்டிருந்தார்கள். தேவதைகளை ஏன் இப்படி திட்டி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே பேட்டியைப் படிக்க ஆரம்பித்தேன்.

செல்வராகவன் +1 படித்துக் கொண்டிருந்த போது, ஒன் சைடாக ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தாராம். அந்த பெண் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பாளாம். அவள் +2 படித்துக் கொண்டிருந்தாளாம். செல்வராகவனை விட கிட்டத்தட்ட 2 வயது பெரியவளாம். தன் காதலை, பல நாட்களாக அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செல்வராகவனால் அவளிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் அவள் வீட்டினர் செல்வராகவனது வீட்டுக்கும் பக்கத்து வீட்டில்தான் குடியிருந்தார்களாம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வராகவன் மனதில் பத்து லட்சம் பட்டாம் பூச்சுகள் பறக்கும். அவள் வரும் போது அந்த ஏரியாவே தேசிய கீதம் பாடுவது போல இருக்குமாம் செல்வராகவனுக்கு.


ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்த போது அவளை அப்படியே கட்டிப் பிடித்துவிட்டாராம் செல்வராகவன். அவளோ கோபப்படாமல் அவரை அப்படியே அணைத்துக் கொண்டாள். ‘நீ எக்ஸாம்ல பெயிலாகிட்டன்னு உங்க அம்மா சொன்னாங்க... எந்த டவுட் இருந்தாலும் என்கிட்ட கேளு... அதுக்காக பீல் பண்ணக் கூடாது... சரியா...’ என்று சொல்லி அவரை தேற்றுவது போல் பேசியிருக்கிறாள். அப்போது வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டதாம் செல்வராகவனுக்கு.

அதன் பிறகு செல்வராகவன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாலும் அவளை மட்டும் மறக்கவே முடியவில்லையாம். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த தேவதை பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயம் அவருக்கு அதிர்ச்சியாவே இருந்திருக்கிறது. அவர் ஒன்சைடாக நேசித்த அந்த தேவதை, யாரோ ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாளாம். அந்த பையனோ சுத்த பொறுக்கியாம். ஒழுங்காக குளிக்காமல் வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டே இருப்பானாம். ‘அவனிடம் அப்படி என்னதான் அவளுக்கு பிடித்திருந்ததோ... இப்படி ஒரு வெட்டிப் பயலுடன் ஓடிப் போய்விட்டாளே... அவள் தேவதைதான்... தேவதைகள் முட்டாள்கள்...‘ என்று சொல்லியிருந்தார். வெட்டிப் பயலுடன் ஓடிப் போனாள் என்றால் அந்த தேவதை நிச்சயம் முட்டாளாகத்தான் இருந்திருப்பாள்.

00:18 by iamvenkatesh · 0

hotlinksin

அனிருத்துக்கு நோ சான்ஸ் – தனுஷ் அதிரடிஒய் திஸ் கொலை வெறி பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன? உள்ளூர் பாடலான ஒஸ் திஸ் கொலை வெறிடி உலக அளவுக்கு பேசப்பட்டது. 3 படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படத்தின் விலையையும் எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டார்கள். இது ஒரு புறம் இருக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்த அனிருத்க்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை தனுஷ். தொடர்ந்து படிக்க... கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

http://bit.ly/zZLgjH

17:04 by iamvenkatesh · 0

hotlinksin

சேவற்கொடி - இல்ல... இல்ல... இது கொசுக்கடி...
எதார்த்த சினிமாவை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் சேவற்கொடி படத்தின் இயக்குநர். ஆனால் படமோ அதிகப்படியான எதார்த்தத்துடன் வந்துவிட்டது.

பாலா, ஒரு நாள் வள்ளியைப் பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிறான். பார்த்த உடன் பத்திக்கிட்டு வருகிறது காதல். அப்புறம் அவளைத் தேடி தேடி அலைகிறான். ஒரு மாதத்திற்கு பிறகு வள்ளியைக் கண்டுபிடித்து காதலை ஓப்பன் பண்ணுகிறான். அவளும் சரி சொல்ல இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவர் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு சம்மதித்து விட காதலர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த நேரத்தில் வருகிறது பிரச்சினை. எதேச்சையாக ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் நண்பனாகிறான் ஒருவன். அவன் டிரைவர் காளி என்பவனுடைய தங்கையையுடன் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகிவிட, அவர்களை பாலாதான் அனுப்பிவைத்தான் என்று தவறாக புரிந்து கொண்ட காளி, தொடர்ந்து படிக்க... கீழே உள்ள லிங்கை க்ளிச் செய்யவும் 

01:08 by iamvenkatesh · 0

hotlinksin

கோபத்தில் த்ரிஷா – காரணம் என்ன?ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து தம்மு என்னும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் தொடக்கம் முதலே இந்தப் படத்தில் செம ஹாட்டாக த்ரிஷா நடிக்கிறார் என்னும் செய்திகளை ஊடகங்கள் பரப்பி வந்தன. இதனால் ஊடகங்கள் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கிறார் த்ரிஷா. ‘நான் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை இல்லை. நல்ல நடிக்கும் திறமை உள்ள நடிகை என்னும் இமேஜ் என் மீது இருக்கிறது. தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 

http://bit.ly/xu1WjP

11:20 by iamvenkatesh · 0

hotlinksin

ஓர் இளம் விதவையின் எதிர்பார்ப்பு…அந்த இளம் விதவைப் பெண்ணிற்கு வயது வெறும் 26 தான். 2 வயதில் ஒரு பெண்குழந்தையும் அவளுக்கு இருக்கிறது. 23 வயதிலேயே அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். திருமணம் ஆன மூன்று வருடங்களில் சந்தோஷமாகப் போய்க் கொண்ருந்த வாழ்க்கையில் பெரிய இடியே வந்து இறங்கியிருக்கிறது. அவள் கணவன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து போனான். இது நடந்த 6 மாதத்தில் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

http://bit.ly/xybVma

00:21 by iamvenkatesh · 0

hotlinksin

கிசுகிசுவை விரும்பும் நடிகைகொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவுக்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

http://bit.ly/AxRBId

23:38 by iamvenkatesh · 0

hotlinksin

ரசிகர்களை ஏமாற்றிய ஒரு நடிகையின் வாக்குமூலம்


சினிமாவில் சம்பாதிக்கவேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதுதான் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் கதையாக எடுத்துக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். படம் உண்மையிலேயே ஒரு நடிகையின் வாக்குமூலமாக இருந்ததா என்பதைப் பார்ப்போம்.


எஸ்.ஜி. தொலைக்காட்சி தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கும் பொருட்டு வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்கிறது. அந்த தொலைக்காட்சியின் உரிமையாளரின் மகள் (புன்னகைபூ கீதா) பிஸியாக இருந்த நடிகை அஞ்சலி திடீரென காணாமல் போனதும்… அவரைக் கண்டுபிடிப்பிடித்து அவர் பற்றிய வாழ்க்கையை பதிவு செய்யப் போவதாக தெரிவிக்கிறார். இந்த நிகழ்ச்சி டிவியில் வந்தால் அனைவரது பாராட்டையும் பெறும் என்று அனைவரும் இதை வரவேற்கின்றனர். இதைத் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 

15:15 by iamvenkatesh · 0

hotlinksin