சரவணபவன் சர்வரை காதலிக்கும் நடிகை!




பொதுவாக நடிகைகளிடம் ‘யாரையாவது காதலிக்கிறீர்களா?’ என்று கேட்டால், படத்தில் மட்டும்தான் காதலித்திருக்கிறேன்... என்று பூசி மெழுகுவார்கள். ‘படத்தில நடிக்க வருவதற்கு முன்பு படிக்கும் போது யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று கேட்டால், ‘இடத்தை கொஞ்சம் காலி பண்ணுறீங்களா?’ என்பது போல் இருக்கும் அவர்களது பார்வைகள். இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் காதல் சரண்யா. காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர், இப்போது மழைக்காலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

இவரிடம் காதல் அனுபவம் பற்றி கேட்டால், இவரிடம் இதுவரை இரண்டுபேர் மட்டுமே காதலை சொல்லியிருக்கிறார்களாம். ஒருவர் சரவணபவன் சர்வர். அடிக்கடி சரவணபவனுக்கு போகும் இடத்தில் அவர் சந்தியாவிடம் காதலை ஓப்பன் பண்ணியிருக்கிறார். அதற்கு ஒரு ரிப்ளை கூட பண்ண முடியவில்லையாம் சரண்யாவால். 

படிக்கும்போது தனது சீனியர் ஒருவரை காதலித்திருக்கிறார் சரண்யா. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்ததும் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனாலேயே காதல் பாதியில புட்டுக்கிச்சாம். ‘யாரு வேணும்னாலும் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்...’ என்று ஓப்பனாகவே பேசுகிறார் சரண்யா.
hotlinksin

0 Responses to “சரவணபவன் சர்வரை காதலிக்கும் நடிகை!”

Post a Comment