என் பொண்ணுகளே என்னை கிண்டல் பண்றாங்க... - அதிர்ச்சியில் பிரபல நடிகர்




சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ஹீரோவாக தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடித்த படங்களை இப்போது பார்த்தால் அவருக்கே சகிக்கவில்லையாம். இவர் நடித்த பழைய படங்களை டிவியில் போட்டால் அந்த சேனல் பக்கமே ரிமோட்டைக் கொண்டு போக மாட்டாராம் அர்ஜூன். அதையும் மீறி எப்போதாவது அந்த படங்களைப் பார்த்துவிட்டால் அவரது பொண்ணுங்களே அவரை கிண்டல் பண்ணி சிரிக்கிறார்களாம். நடிக்க வந்த புதிதில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் என்ன நடிப்பது எப்படி நடிப்பது என்று தெரிந்து கொள்ளாமலே இயக்குநர்கள் சொல்வதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடும் அர்ஜூன், அதன் பிறகு படிப்படியாக நடிப்பில் தன்னை பட்டை தீட்டியிருக்கிறார்.
hotlinksin

0 Responses to “என் பொண்ணுகளே என்னை கிண்டல் பண்றாங்க... - அதிர்ச்சியில் பிரபல நடிகர்”

Post a Comment