அதிர்ச்சியடைய வைத்த தனுஷின் 3
ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி பிரத்தியேக தியேட்டரில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக 3 படம் சத்யம் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டை போர் பிரேம்ஸ் தியேட்டரில் நடந்த சூரிய நகரம் பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார்கள். டிக்கெட்டை ஆர்வமாக வாங்கிப் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், சத்யம் தியேட்டரில் இரவு 10.30 மணிக்கான டிக்கெட் அது. இதுவரை தமிழ் திரையுலகில் பத்திரிகையாளர்களுக்கு எந்த சிறப்புக் காட்சியும் இந்த நேரத்தில் திரையிடப்பட்டதில்லை. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிய சலிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து விசாரித்த போது, பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட முடியவில்லை என்பதால் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும், ஆனால், மத்தியானம், மாலை நேர காட்சிக்கான டிக்கெட் எதுவும் கிடைக்காததால் இரவு நேர டிக்கெட்டை மொத்தமாக புக் பண்ணி பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்... என்பது தெரியவந்தது. ஆனால், அன் டைமில் வைக்கப்பட்ட இந்த பத்திரிகையாளர் காட்சியை பத்திரிகையாளர்களில் பலரும் புறக்கணித்திருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “அதிர்ச்சியடைய வைத்த தனுஷின் 3”
Post a Comment