கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்
திறமைசாலிகள் வாய்ப்புகளை தேடிப் போகவேண்டியதில்லை. வாய்ப்புகளே அவர்களை துரத்திப் போய் பிடித்துக் கொள்ளும் என்பதற்கு கேபிள் சங்கரை ஒரு உதாரணமாக சொல்லாம். தமிழ் பிளாக்கர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் கேபிள் சங்கர் படம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் இவரை துரத்திப் பிடித்த வாய்ப்பு, படத்திற்கு வசனம் எழுதுவது. சுந்தர் சி இயக்கத்தில் படப்பிடிப்பில் இருக்கும் மசலா கேஃப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் கேபிள் சங்கர். இந்த வாய்ப்பு அவருக்கு தானாக போய் சேர்ந்திருக்கிறது. இயக்குனர் பத்ரி அவருடன் சேர்ந்து வசனமெழுத அழைத்ததன் பேரில் சுந்தர்சி படத்திற்கு வசனகர்த்தாவாக மாறிவிட்டார் கேபிள்சங்கர். படத்தின் காட்சிகளில் நிறையோ குறையோ மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடும் கேபிள் சங்கருக்கு முன்னணி இயக்குநர் சிலர் இப்போது வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம். ‘என் பட டிஸ்கஸனில் வந்து கலந்துக்குங்க…’ என்பதுதான் அந்த இயக்குநர்களி தற்போதைய கோரிக்கையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்”
Post a Comment