கடலை போட பிகரு வேணுமா...? ஆசை காட்டி மோசம் பண்ணும்... - ஒரு உஷார் ரிப்போர்ட்




கடந்த வாரத்தில் ஒருநாள் அவசரமாக வெளியே போக தயாராகிக் கொண்டிருந்தேன். திடீரென மொபைலுக்கு வந்தது ஒரு மெசேஜ். உங்கள் சந்தோஷமோ சோகமோ எதுவானாலும் பரவாயில்லை உங்கள் தோழி என்னிடம் ஷேர் பண்ணிக்குங்க... என்று போடப்பட்டிருந்தது அந்த மெசேஜில். அதை அனுப்பிருந்தது வோடபோன். இது என்னடா புதுசா இருக்கே... என ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அப்போதைக்கு நேரம் இல்லை அதைப் பற்றி யோசிக்க. அவசரமாக கிளம்பி நண்பரைப் பார்க்க போன இடத்தில் கொஞ்சம் வெயிட் பண்ணு இதோ வந்திடுறேன்... என்று சொல்லிவிட்டார் நண்பர். வேற வழி... அவருக்காக காத்திருந்த போது அந்த வோடவோன் மெசேஜ் நினைவுக்கு வந்தது. மொபைலை எடுத்து பார்த்தேன். ஒரு நிமிடம் தோழியிடம் பேச ரூ. 10 என்று போடப்பட்டிருந்தது. நாம என்னத்தைப் பேச, என்று மனம் சொன்னாலும் அப்படி என்னதான் பேசறாங்க பார்க்கலாம்... எழுதுறதுக்கு ஏதாவது ஒரு விஷயம் தேறுமே என்கிற எண்ணத்தில், நம்பரை அழுத்தினேன்.

எதிரில் போன் எடுத்தார்கள். கேட்டது ஒரு பெண்ணின் குரல்தான். ஆனால் ஆட்டோமேட்டிக்காக பதிவு செய்யப்பட்ட குரல். கால் எடுத்ததும் ஏதோ பெண் பேசுவார் என்று நினைத்த எனக்கு ஆட்டோ மேடிக் ரிப்ளை வந்தது தூக்கி வாரிப் போட்டது. உங்கள் அன்புத் தோழியிடம் பேச வேண்டுமா...? உங்கள் மனதில் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அனைத்தையும் பேசுங்கள்... கொஞ்சநேரம் காத்திருங்கள்... என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது. 5 நிமிடங்கள் ஆகியிருந்தன. சரி 50 ரூபாய் இந்நேரம் உருவிருப்பானுக... ஆனாலும் இதன் க்ளேமேக்ஸ் என்ன என்று பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன். 10 நிமிடங்களும் கழிந்து விட்ட நிலையில் அதே ஆட்டோமேட்டிக் ரிப்ளைதான் வந்து கொண்டே இருந்தது.

எவ்வளவு நேரம்தான் பேசாமலேயே போனை காதில் வைத்துக் கொண்டிருப்பது... அதற்கு மேலும்  பொறுமை இல்லாமால் அழைப்பை துண்டித்தேன். 100 ரூபாய் துண்டாக போயிருந்தது. இதன் பின்னணி என்ன என்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் போன் செய்த நமக்கே ஒரே நேரத்தில் இவ்வளவு பணம் இழப்பு என்றால் ஒரு வேளை கடலை போட பிகரு கிடைக்குமோ என்ற எண்ணத்தில் எத்தனை பேர் போன் செய்திருப்பார்கள். இப்படி ஏன் இந்த நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்வது போல் பண்ணுகின்றன. ஆண்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு மொபைல் நிறுவனங்கள் நடத்தும் இந்த கூத்து விரைவில் முடிவுக்கு வந்தால் சரி. இல்லையென்றால் என்னைப் போல எத்தனையோ பேர் தினம் தினம் பணத்தை இழந்து கொண்டுதான் இருப்பார்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் இணைந்துவிட்டீர்களா நண்பர்களே...

tamil.hotlinksin.com திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி. திரட்டியில் உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பதிவுகளை இணைக்கும் போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் தயவு செய்து hotlinksin@gmail.com மெயில் ஐடிக்கு தெரியப்படுத்துங்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் ஒவ்வொரு வாரமும் வாசகர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் நண்பர்களையும் tamil.hotlinksin.com திரட்டியில் பதிவு செய்து பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்.

hotlinksin

7 comments:

  1. ஜொள்ளு பார்ட்டிகளுக்கு ஒரு ஆப்பு !

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி... ஆமா... ஆமா...

      Delete
  2. நிஜமாவே இந்த மாதிரி கடலை போடுற பொண்ணுங்க இருந்த மறக்காம சொல்லுங்க வெங்கடேசு. எனக்கு 70 வயசாச்சு. பொழுதே போகமட்டேங்குது!

    ReplyDelete
    Replies
    1. ஐயா... வெயிட் பண்ணுங்க... உங்களுக்கும் இந்த மாதிரி மெசேஜ் வரும்... அந்த நம்பருக்கு ட்ரை பண்ணுங்க... கண்டிப்பா நிறைய ரீசார்ஜ் பண்ணி வெச்சுக்குங்க... ஆட்டோமேடிக் இல்லையா... அதனால அவங்கதான் பேசிட்டே இருப்பாங்க... நீங்க ஒன்லி கேட்டுக்கத்தான் வேணும்...

      Delete
  3. அந்த வோடோபோன் நம்பரை வெளியிட வேண்டுகிறேன். மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்குமல்லவா ??

    ReplyDelete
    Replies
    1. நல்லது நண்பரே... ஆனால் VT-611112 என்ற எண்ணில் இருந்து மேசேஜ் வந்தது. உள்ளே ஏதோ 5 இலக்க எண்களைக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அது மொபைல் எண் அல்ல...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete