இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...



"அரசுப் பள்ளி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் பள்ளியாக இருந்து வருகிறது..." - கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.



 கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.  இந்த ஆரம்ப பள்ளி 1930 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இராமபாளையம் மட்டுமில்லாமல் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த  34 குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியானது ஒரு தரம் வாய்ந்த ஆங்கில பள்ளிக்கு இணையாக இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற இயல்பான கிராம சூழல், போதுமான கட்டிட அமைப்பு, நவீன பளிங்கு கல்லால் ஆன மாதிரி வகுப்பறைகள்.  இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அவசியமான கணினி பயிற்சி வகுப்புகள்.  குழந்தைகள் குழுவாக அமர்ந்து உரையாட வட்ட மேஜை வசதிகள்.  குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள ஆங்கில, தமிழ் நாளிதழின் தினசரி வாசிப்புகள்.  மாணவ மாணவியரை பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள், வண்ண சீருடைகள், கழுத்தணி அடையாள அட்டை என எதை எடுத்தாலும் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் வியப்பான சங்கதிகளே !
நூலகத்தில் ஆரம்ப பள்ளி கல்வியிலிருந்தே கற்ற நவீன மின்னணு வசதியுடன் கூடிய நூலக வசதி, கணினி தொலைக்காட்சி, அறிவியல் ஆய்வு உபகரணங்கள், செய்வழி கற்றல், அட்டைகளை சிறப்பாக வைக்க வடிவமைக்கப்பட்ட பலகைகள் என பார்த்தாலே பரவசமூட்டுகிறது.

இப்பள்ளியில் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர், குடிநீர், காற்று, மாசுக்களை தடுத்து குழந்தை நோயிலிருந்து காக்கும் பொருட்டு தடுப்பு கண்ணாடி ஜன்னல்கள்.  இந்தபள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில், சிறந்த கல்வியினை கற்கின்றனர்.  விரும்பி வந்தும் சேருகிறார்கள்.  சென்ற ஆண்டு மெட்ரிக் பள்ளியிலிருந்து 4 குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வியினை வரமாய், தவமாய் போதித்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பள்ளி சிறந்து வளர்ச்சியடைய பொதுமக்கள் தாராளமாய் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.  அந்த நன்கொடைகளை ஆசிரியர்கள் சரியாய் பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த பள்ளியின் ஆசிரியர் கூறும்போது "தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி இது மட்டுமே என்று சொல்லலாம் சார்.  தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசுப் பள்ளியும் பிறர் உதவியை நம்பாமல் மக்கள் உதவியை மட்டுமே நம்பினால் சிறப்பாய் வளரும்" என்கிறார்.

னியார் பள்ளிகளை நோக்கி ஓடும் பெற்றோர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளையும் இது போன்று தத்தெடுத்து மேம்படுத்தினால் எல்லா அரசு பள்ளிகளும் இந்த பள்ளி போன்று சிறப்புடன் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்...
hotlinksin

0 Responses to “இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...”

Post a Comment