ஊர்வசி... லதா... லலிதா... லாவண்யா - ஊலலலா விமர்சனம்


உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை ஜோதி கிருஷ்ணா இயக்கிய போது அடடே... ஷங்கருக்கு அடுத்த பிரமாண்ட இயக்குநர் இடத்தை இவர்தான் பிடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. த்ரிஷா, இலியானா போன்றவர்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர். இப்போது ஊலலலா படத்தின் மூலம் ஹீரோ கம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.



சின்ன வயதில் இருந்தே கேர்ள் ப்ரெண்டுக்காக அலையும் சூர்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது ப்ரீத்தி கேர்ள் ப்ரண்டாக கிடைக்கிறார். ப்ரீத்தியை பகடைக்காயாக பயன்படுத்தி வேறு பல பெண்களுடன் பழக ஆரம்பிக்கிறார் சூர்யா. ஆனால் சூர்யாவை உண்மையிலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார் ப்ரீத்தி. ப்ரீத்தியின் காதலை புரிந்து கொள்ளாத சூர்யா கடைசியில் அவள் காதலை புரிந்து கொண்டு வந்த போது அவளோ ஊரைவிட்டு புறப்படுகிறாள். வில்லனும் சூர்யாவை கொல்ல துரத்துகிறான். இந்நிலையில் வில்லனை வெற்றி கொண்டு ப்ரீத்தியுடன் சூர்யா இணைந்தானா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

சூர்யாவாக நடித்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. ப்ளே பாய் ரேஞ்சுக்கு அலையும் இவர் கடைசியில் தன் காதலியின் அன்பைத் தேடி வருகிற இடத்தில் உச்.. கொட்ட வைக்கிறார். படம் துவக்கம் முதல் ஆரம்பிக்கிற கலகலப்பு படம் முழுக்க தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜோதிகிருஷ்ணாவுக்கு தம்பியாக நடித்திருக்கும் பையன் அடிக்கிற லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது. ஜோதி கிருஷ்ணாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் ரொம்பவே கண்டிப்பான அப்பாவாக வருகிறார். இவரது கண்டிப்பை ஜோதிகிருஷ்ணாவும் அவர் தம்பியும் அடிக்கடி டேமேஜ் செய்வது வெடி சிரிப்பு. கஞ்சாகருப்பு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இவரது உதவியாளராக வரும் பக்கோடா பாண்டி அடிக்கடி காதலையும் காதலிப்பவர்களையும் பற்றி அடிக்கிற கமென்ட்டுக்கு ரசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு.

ப்ரீத்தியாக நடித்திருக்கும் திவ்யா பண்டாரி ஸ்லீவ்லெஸ் டிரஸ் போட்டுக் கொண்டு அலையும் போது நமது பல்ஸ் ரேட்டையும் எகிற வைக்கிறார். நடிப்பிலும் நன்றாகவே தேறுகிறார் திவ்யா பண்டாரி. இலியானாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தாலும் பிடிப்பார். குடும்பத்தின் மீது பாசத்தைக் கொட்டும் அம்மாவாக நடித்திருக்கிறார் ராணி.

சேகர் சந்திரா இசையில் இரண்டு பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.

ஊலலலா - கலகலப்பு

tamil.hotlinksin.com திரட்டியில் இணைந்துவிட்டீர்களா நண்பர்களே...

tamil.hotlinksin.com திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி. திரட்டியில் உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பதிவுகளை இணைக்கும் போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் தயவு செய்து hotlinksin@gmail.com மெயில் ஐடிக்கு தெரியப்படுத்துங்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் ஒவ்வொரு வாரமும் வாசகர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் நண்பர்களையும் tamil.hotlinksin.com திரட்டியில் பதிவு செய்து பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்.
hotlinksin

0 Responses to “ஊர்வசி... லதா... லலிதா... லாவண்யா - ஊலலலா விமர்சனம்”

Post a Comment