சமூகத்தை சீரழிக்கும் விகடனின் டிவி சீரியல்கள்...



சமீபகாலமாக கொஞ்சம் விரும்பிப் பார்க்கும் டிவி சீரியல்கள் என்றால் அது விகடன் தயாரிக்கும் டிவி சீரியல்கள் என்றே சொல்லலாம். ஆனால் இப்போது அதுவும் தலைகீழாகிவிட்டது. காறித்துப்புகிற வகையில் டிவி சீரியல்களைத் தயாரிப்பதில் விகடனே முன்னிலை வகிக்கிறது. இவர்கள் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் தென்றல், திருமதி செல்வம், அழகி போன்ற சீரியல்கள். ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருவன் டாவக்கிறது. ஒருத்தி புருஷனை இன்னொருத்தி டாவடிப்பதையும் அழகாகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.



திருமதி செல்வம் டிவி தொடரில் ஒரு காட்சி, கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறான், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாள். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்கள். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக உட்கார்ந்திருக்கிறாள். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாள். இப்படியாகப் போகிறது ஒரு காட்சி. இந்த டிவி தொடரின் காட்சிகள் ஏற்கனவே உழுத்துப் போயிருக்கும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

தென்றல் என்றொரு டிவி தொடர். அதில், கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் தொடரின் இயக்குநர்.

இது போன்றுதான் பெரும்பாலான டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் இருக்கின்றன. இந்த தொடர்களை இயக்கும் இயக்குநர்களை எதை வைத்து அடித்தால் திருந்துவார்கள்...?
hotlinksin

0 Responses to “சமூகத்தை சீரழிக்கும் விகடனின் டிவி சீரியல்கள்...”

Post a Comment