தினத்தந்தியும் வழக்கு எண் 18/9 விமர்சனமும்...



பிரசன்னா ஸ்நேகா தங்களது திருமணத்திற்கு பத்திரிகையாளர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த உடனேயே அவசர அவசரமாக வழக்கு எண் 18/9 படத்திற்கான பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. படத்தைத் திரையிடும் முன்பு படத்திற்கான விமர்சனங்களை வெள்ளிக்கிழமைக்கு மேல் வெளியிட்டால் போதும் என்று வேண்டுகோள் வைத்தனர் படத் தயாரிப்பு டீமினர். எந்த மீடியாவும் படத்தின் விமர்சனத்தை வெளியிடாத நிலையில் இந்த வேண்டுகோளை உடைத்து நேற்றே படத்திற்கான விமர்சனத்தை வெளியிட்டது தினத்தந்தி.

பொதுவாக தினத்தந்தியில் படத்திற்கான விமர்சனத்தை படம் ரிலீசான நாளில் இருந்து சில நாட்கள் கழித்தே எழுதுவார்கள். இது காலா காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பாருங்கள், அன்று 100 நாட்கள் ஓடுகிற படத்திற்கும் படம் ரிலீஸ் ஆகி நான்கைந்து நாட்களுக்கு பிறகு தான் விமர்சனம் வெளியிட்டது இந்த நாளிதழ். அதே முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது. ஆனால் என்ன, அன்று படம் குறைந்தது பத்து இருவது நாட்களாவது ஓடும். ஆனால் இன்றோ பத்து இருபது காட்சிகள் கூட ஓடமாட்டேன் என்கிறது. ஆனாலும் தனது கொள்கைப் பிடியில் இருக்கும் நாளிதழுக்கு வாழ்த்துகள்.

சில சமயங்களில் இவர்கள் விமர்சனம் எழுதி வெளியிடுவதற்கு முன்பே படங்கள் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட விடும். ஒருவேளை பத்திரிகை விமர்சனத்தைப் படித்து விட்டு யாரும் இன்று படம் பார்க்கப் போவதில்லை என்பது தெரிந்தே ஒருவேளை நாளிதழ் இப்படி செய்கிறதோ என்னவோ...!

பதிவை இணைத்தால் பரிசு...

பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.





hotlinksin

0 Responses to “தினத்தந்தியும் வழக்கு எண் 18/9 விமர்சனமும்...”

Post a Comment