சிம்புவின் சம்பளம் குறைப்பு - அதிர்ச்சியில் சிம்பு
படங்களில் விரலை ஆட்டி ஆட்டி பஞ்ச் டயலாக்களை அள்ளி வீசுவார் சிம்பு. இவரது தோல்விப் படங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் எல்லாம் இப்படிப்பட்ட பிஞ்சு போன டயலாக்களைப் பேசி பேசியே மனுஷன் ரசிகர்களை சாகடிச்சிருப்பாரு. இப்போ லேட்டஸ்டா இவர் நடித்து தரணி இயக்கத்தில் வெளியான ஒஸ்தி குஸ்தியில் பின்வாங்கிவிட சிம்பு கொஞ்சம் நொந்துதான் போய்விட்டார். ஒரு படம் வெற்றி பெற்ற உடனேயே சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள் நம்ம ஹீரோக்கள். ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். இந்த டீல்தானே காலம் காலமாக நடந்து வருகிறது. சிம்பு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சிம்புவின் அடுத்த படத்தில் கொஞ்சம் கட் போட்டிருக்கிறது படத்தின் தயாரிப்புத் தரப்பு. ஒஸ்தி தோல்விக்கு கூட இவ்வளவு ஃபீல் பண்ணியிருக்க மாட்டார் சிம்பு. சம்பளக் குறைப்புக்கு அதைவிட அதிகமாக பீல் பண்ணுகிறாராம்.

01:23 by iamvenkatesh · 0

hotlinksin

சன்டிவியில் ஆபாச டிவி தொடர்கள்சினிமா பார்த்துதான் இன்றைய சமுதாயம் கெட்டுப் போவதாக சிலர் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள். தன்னை இந்த சமுதாயத்தை காக்க வந்த மகரிஷி என்று அவர்கள் சொல்லாமல் சொல்வதாக இருக்கும் இவர்கள்து வாக்குகள் எல்லாம். சினிமா பாடல் பெண்களை இழிவு படுத்திவிட்டதாக சிலர் வானுக்கும் மண்ணுக்குமாக குதிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சினிமாவை எதிர்த்து கிடைக்கும் பப்ளிசிட்டிக்காகதான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது எனக்கு புரிந்து போயிற்று. காரணம் ஏதேச்சையாக நேன்று பார்த்த இரண்டு டிவி சீரியல்கள். டிவி சீரியல்கள் எப்படி மக்களை கெடுக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு சீரியல்களுமே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 


ஒன்று தென்றல், இன்னென்று செல்லமே. ஒரு தொடரில் இன்னொருத்தியின் கணவனை அடைய நினைக்கிறாள் ஒருத்தி. மற்றொரு தொடரிலோ அடுத்தவன் பொண்டாட்டியை அடைய நினைக்கிறான் ஒருத்தன். இந்த ஆபாச டிவி தொடர்களை ஒளிபரப்பி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள் தொலைக்காட்சியினர். இந்த இரண்டு தொடர்கள்தான் இப்படி என்று பார்த்தால் வருகிற பெரும்பாலான தொடர்கள் எல்லாம் இப்படித்தான் வந்து தொலைக்கிறது என்றார் நண்பர். அவர் வீட்டிலோ எல்லோரும் உட்கார்ந்து பார்க்கிறார்கள். யாருக்கும் இப்படி ஒரு அசிங்கத்தைப் பார்த்துத் தொலைக்கிறோமே என்ற வெட்கமும் இல்லை. 

சில வருடங்களுக்கு முன்பு வட இந்திய சேனல்களில்தான் இது போன்ற தொடர்கள் அதிகம் வெளியாகிக் கொண்டிருந்தன. இப்போது அதையே நம்ம ஊர் சின்னத்திரைக்கார்கள் காப்பி அடித்து போட்டு தாக்குகிறார்கள். தொடரில் இவர்கள் வைக்கும் பரபரப்பு மக்களை இதில் லயித்து போக செய்துவிடுகிறது. இது போன்ற தொடர்கள் மக்கள் மனதில் குறிப்பாக இளம் வயதினரிடையே நஞ்சை விதைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யார் எக்கேடு கெட்டு போனால் என்ன...? அவர்களைப் பொறுத்தவரை பணம் வந்தால் சரி. பார்த்து பார்த்து நாசமாக போவது மக்கள்தான்.

01:06 by iamvenkatesh · 0

hotlinksin