Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
இளம் இயக்குநர்களை வியக்க வைத்த ஆன்டி நடிகை!
படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் குணசித்திர வேடத்தில் நடிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். நடித்தோமா எஸ்கேப் ஆனோமா என்றுதானே இருப்பார்கள்? ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். பல படங்களில் அழகான அம்மாவாக நடித்தவர். யுத்தம் செய் படத்துக்காக மொட்டையும் போட்டு நடித்தார். லஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஆரோகணம். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த், மிஸ்கின் ஆகியோர் படத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். ‘லஷ்மியால இப்படியும் படம் எடுக்க முடியுமா?’ என்று வியந்து போய் இரண்டுபேருமே ஆரோகணத்தை இயக்கிய ஆன்டி நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
00:25 by iamvenkatesh · 0
நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்
நடிகை ரேஷ்மா, சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல் சும்மாவே இருந்தார். சுவராஞ்சலி என்னும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு இவரை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் செய்தார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தனது சம்பளப் பாக்கியைத் தருமாறு ரேஷ்மா தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். பணம் கேட்டதும் கடுப்பான தயாரிப்பாளர் ரேஷ்மாவை ஆபாச வார்த்தைகளால் அசிங்கமாக திட்டியிருக்கிறார். இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.
11:38 by iamvenkatesh · 0
தனியார் பள்ளிகளின் நாறப் பொழப்பு...
தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் பலத்த போட்டிகள் காரணமாக ஒவ்வொரு பள்ளியும் ஏராளமான விளம்பரங்களை செய்து வருகிறது. சில பள்ளிகள் தங்கள் விளம்பரங்களில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களையும் இடம் பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த விளம்பரம். நீங்களும் பார்த்து காறித் துப்பிட்டு போங்க சாமிகளா..
18:39 by iamvenkatesh · 0
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்
02:10 by iamvenkatesh · 0
குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!
நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை பற்றி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் சட்டையை வீசும் விதமாக தன் உள்ளத்தில் தோன்றியதை பகிர்ந்து இருந்தார். அதை உங்கள் பார்வைக்காக அறியத் தருகிறேன்.
Saravanan Poongavanam பூ.கொ.சரவணன்
நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை மனதை என்னவோ செய்கிறது !அதில் அவர்களின் ஆசிரியர்கள் உடன் தங்கி இருப்பத்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்கிற மாதிரியான தோற்றம் ஏற்ப்பட்டு இருக்கிறது !ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா ?இதன் வரலாறு என்ன தெரியுமா ?முதன்முதலில் வெறும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் தொடங்குகிறது இதற்கான விதை !பதினோராம் வகுப்பை அரக்கபரக்க முடித்து விட்டு பிளஸ் டூ வகுப்பை ஆரம்பித்து அதில் பக்கம் பக்கமாக வரிக்கு வரி தேர்வெழுத வைத்து அதை மீண்டும் நான்கு முதல் ஐந்து திருப்புதல் தேர்வுகள் வைத்து ,நான்கு மணிநேரம் எழுத வேண்டிய வினாத்தாளை மூன்று மணி நேரத்தில் எழுத வைப்பது ,விடுமுறைகள் தராமல் இருப்பது,விளையாட விடாமல் இருப்பது என பல்வேறு வகையான கூறுகளோடு உச்சபட்சமாக அரசு நிர்ணயிக்கும் விலையை விட அதிகமான கட்டண வசூல் செய்தல் இவை அனைத்தையும் செய்து பப்ளிக்குக்கு பிள்ளைகளை அனுப்பி அவர்களை மாநில இடம் பெற்றவர்களாக ஆக்கி விட்டதாக கொக்கரிக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது !ரேசில் அரை நாள் முன்னமே ஓடி ஜெயிக்கிறார்கள் என்பது முதல் வருத்தம் !அடுத்தது இதைப்பற்றி பேச வேண்டிய பல படைப்பாளிகள் பேசுவதில்லை !இப்படிப்பட்ட முறையில் பிள்ளைகளை மிகப்பெரிய மன மட்டும் உடல் ரீதியான மன அழுத்ததிற்கு ஆளாகும் சூழலை ,ஒரு மிகப்பெரும் பொருளாதார சுரண்டலை நடுத்தர வர்க்கத்தின் மீது செலுத்தும் பள்ளிகளின் செயலை கண்டிக்க வேண்டிய பிரபலமான பதிப்பாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் ,எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்,விமர்சகர்கள் ,படைப்பாளிகள் -பல பேர் இந்த பள்ளிகளின் விழாக்களில் பணம் வாங்கிக்கொண்டோ அல்லது விருது பெற்றோ கலந்துகொள்வது வருத்தத்தை தருகிறது !ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பேசவே எழுதவோ இவர்கள் செய்வது இல்லை !தெரியாது எங்களுக்கு இதெல்லாம் என்றால் நல்ல நகைமுரண் தான் !இதைப்பற்றி தைரியமாக எழுதுங்கள் அய்யா !காரணம் இதோ வருகிற திங்கள் கிழமை ஒவ்வொரு பெற்றோரும் லட்சங்களை கட்டிக்கொண்டு கனவுகளோடு இந்தப்பள்ளிகளின் வாசலில் நிற்க நீங்கள் மறைமுக உதவி செய்து இருகிறீர்கள் !நல்ல வருவீங்க !
00:35 by iamvenkatesh · 0
கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!
வீட்டில் இணைய இணைப்பு இருந்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று இன்றும் பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பை வாங்கமலே இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டும்தானா கெட்டுப் போகிறார்கள். இண்டர்நெட்டில் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் சில அப்பாவி பெண்களும் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கள்ளக்காதலை வளர்ப்பதில் மொபைல்போன் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால் அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது பேஸ்புக் இணையதளம். இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அடுக்கடுக்காக அரங்கேறி வருகின்றன. அதிலிருந்து பெண்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதற்காக ஒரேயடியாக பேஸ்புக் இணையதளத்தை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னும் சில காலங்களில் பேஸ்புக்கை தடை செய்யக் கோரி சில அவலக் குரல்கள் ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இணையதளத்தில் நேற்று ஒரு பெண் எம்.எல்.ஏ. தனது கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்துவிட்டது பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த எம்.எல்.ஏ.க்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இருந்த போதிலும் கணவரையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு பேஸ் புக் மூலம் அறிமுகமான ஒருவனுடன் ஓடிப் போய் திருமணமும் செய்து கொண்டாராம். தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய எந்த வித எண்ணமும் இல்லாமல் ஓடிப் போன அந்த பெண்ணை என்னவென்று சொல்வது. இது போன்ற பல ஓட்டங்களுக்கு பேஸ்புக் என்னும் இணையதளம் சமீபகாலமாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
பேஸ் புக் இணையதளத்தை நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் எத்தனையோபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். கள்ளக் காதலை வளர்க்கவும் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பேஸ்புக்கை குறை சொல்ல முடியாது. அதை பயன்படுத்தும் அரைகுறைகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டி இருக்கிறது.
எது எப்படியோ, பேஸ்புக் இணையதளத்தை வீட்டிலும் அலுவலகத்திலும் தடை செய்தால்தான் சிலரது குடும்ப வாழ்வும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் போலிருக்கிறது.
01:20 by iamvenkatesh · 0
நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்
நேற்றைய நீயா நானாவில், போலி கவுரவத்தை விரும்புகிறவர்கள் அதை விரும்பாதவர்கள் என இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரிடம் சில கேள்விகள் கேட்பதாக ஆரம்பித்த கோபிநாத் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டார். அதுவும் பவர் ஸ்டார் போலி கவுரவத்தை விரும்புகிறவர் என்கிற ரீதியில். நடுத்தர குடும்பத்தின் மக்களே போலி கவுரவத்திற்காக பல செயல்களைச் செய்து கொண்டிருக்கும் போது பவர் ஸ்டார் ஒரு சினிமா நடிகர் போலி கவுரவத்தை மெயின்டெயின் செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே.
‘எந்த ஒரு பேட்டியிலும் சரி நீங்கள் ஏன் சீரியசாக இருப்பதில்லை... எல்லா விஷயங்களையும் ஏன் நீங்கள் காமெடியாக... சீரியஸ் இல்லாமல் எடுத்துக் கொள்கிறீர்கள்...?’ என்பதுதான் கோபிநாத் அவரிடம் தொடர்ந்து பல முறை கேட்ட கேள்வி. இதே கேள்வியை கோபிநாத் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘ஒருவர் எல்லா விஷயங்களையும் சீரியசாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா...? காமெடியாக எடுத்துக் கொள்ளக் கூடாதா...?’ என்னும் பதிலை திரும்ப கோபிநாத்தைப் பார்த்து வைத்தார். அதற்கு கோபிநாத்தோ உங்கள் நிஜ முகத்தை வெளிக் கொண்டு வருவதற்காகத்தான் நான் அப்படி திரும்ப திரும்ப கேட்டேன் என்றார்.
கோபிநாத் உண்மை முகத்தை கொண்டு வருகிறாரோ இல்லையோ தொடர்ந்து இதே கேள்வியை அப்படிக் கேட்பது ஒருவரை குற்றவாளி மனநிலையில் நிச்சயம் தள்ளிவிடும். அது மட்டுமின்றி வழக்கறிஞரைப் போன்று குறுக்கு கேள்வி கேட்பது கோபிநாத்துக்கு ஆதரவாக இருக்காமல் நிகழ்ச்சி மேலேயே வெறுப்பு வர வைத்துவிடும் வாய்ப்பு உள்ளது.
பவர் ஸ்டாரிடம் என்று இல்லை.. பேச வருபவர்களிடமும் சில நேரங்களில் இது போன்று கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடுவதும் உண்டு.
நல்ல வேளை கோபிநாத் கேட்ட கேள்விகளுக்கு உள்ளே கோபம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டே பதில் சொன்னார் பவர் ஸ்டார்.
00:56 by iamvenkatesh · 0
புதிய தலைமுறை சரண்யாவும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகையும்..
கொஞ்ச நாட்களாகவே எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அதாவது புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கிற சரண்யாவும், ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி படத்தில் நடித்த நடிகை அக்க்ஷராவும் ஒருத்தர்தான்னு நான் சொல்கிறேன். ஆனால் என் நண்பரோ அது வேற இது வேற... என்கிறார். என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க சாமிகளா...
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகை அக்க்ஷரா
புதிய தலைமுறை சரண்யா
01:42 by iamvenkatesh · 0
இங்கே யாருக்கும் வெட்கமில்லை…!
துடிதுடித்தபடி உள்ள ஒருவனைப் பார்த்து விட்டு கடந்து போகாதே! அவனுக்கு உதவு என்கிறது வைணவம்.
நீ லாபம் சம்பாதித்து ஈட்டிய பொருளில் உன் அருகில் வாழும் ஏழையின் பங்கும் உள்ளது அவனுக்குப் பகிர்ந்து கொடு என ஜக்காத்தை ஒரு சமூக சட்டமாகவே ஆக்கியுள்ளது இஸ்லாம்.
ஏழைகள் இருக்கும் இடத்தில் நானிருப்பேன் இயேசு பிரான். இப்படி சமயம்தோறும் நன்னெறி ஊட்டப்பட்டு, அதனை விளங்காமல் சமூகம் துப்பி விட்டதோ என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி நிற்கின்றது. ஏனெனில்,
சமயங்கள் எனும் அன்னை தன் பிள்ளைகளுக்கு அமுதூட்ட அன்பை மட்டுமே காட்டி சோறூட்டியதால் துப்பிவிட்ட குழந்தைகளாய் சமூகம் உள்ளது. அதட்டல், உருட்டல், பூச்சாண்டியைக் காட்டி இருந்தால் ஒருவேளை விழுங்கி இருப்பார்களோ என்னவோ?
உணவு ஊட்டச்சத்து குறைபாடு ஏன் ஏற்பட்டது. நோஞ்சான்கள் ஏன் பெருகி விட்டனர். குழந்தைகள் மட்டுமா? நோஞ்சான் பெண்கள், ஆண்கள் என குறிப்பிட்ட அளவுக்கு ஊட்டக் குறைபாடுள்ளவர்கள் இருப்பதால்தானே கிராமம் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படுகிறது.
இதில் பெருமையாகப் பலரும் எங்கள் ஆட்சியில்தான் மருத்துவ வசதிகளை விரிவாக்க அதிக அளவு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கினோம் என்கின்றனர் வெட்கமில்லாதவர்கள்! நல்ல உணவு, நல்ல சூழல், போதிய வருவாய் இருந்தால் நோய் ஏன் வருகிறது உடல் நலம் தான் கெடுமா? இதை இந்த கோணத்தில் யார்தான் சிந்திப்பது?
ஊட்டச்சத்து குறைபாடு உணவில் மட்டுமா உள்ளது? எல்லாவற்றிலும் தானே உள்ளது MAL ADMINISRATION என்ற மோசமான நிர்வாகச் சூழலுக்குள் தானே பல சமயக் கருத்தை அறிந்த பல சமூகத்தவர்களும் அதிகாரப் பொறுப்பில் உள்ளனர்? இவர்களால் தானே MAL PRACTICE கள் பெருகி நிர்வாகக் கோளாறுகள் ஊழல்கள் ஏற்பட்டு சமூகத்தின் அனைத்திலும் சட்டதிட்டங்களில் MAL NUTRITION குறைபாடு ஏற்பட்டுள்ளது. உணவில் மட்டுமல்ல குறைபாடு சகலத்திலும் சத்துக் குறைபாடு நிலவத்தானே செய்கிறது.
விடுதலை பெற்று 12 ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டுள்ளன. ஏகப்பட்ட நிதிகள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் பலன் முழுமையாக மக்களுக்கு கிடைத்ததா? சத்துக் குறைவான சோற்றை விருந்தாகப் போட்டது போல்தானே திடடங்கள் இருந்தன இதன் சத்தை, சாரத்தை ஊட்டத்தை மட்டும் உறிஞ்சியது யார்?
சமூக நீதி நிலவ வேண்டும் என்பதற்குத்தானே சாசனச்சட்டம் உருவானது. அந்தச் சாசனத்தின் ஊட்டமிக்க சாரங்கள் நீக்கப்பட்டு சக்கைதானே நடைமுறையாகிறது. அதனால்தானே சாசனச்சட்டம் தங்களுக்கு முறையாக வேண்டும் என்று நீதிமன்ற வாசலுக்குச் சென்று முறையீடுகள் செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தேங்குவதற்கு என்ன காரணம்? சட்டத்தின் ஆட்சி என்கிற சத்துக்கள் இல்லாமை தானே?
ஜனநாயக மக்களாட்சியில் சாசனச்சட்டமும் வழிகாட்டும் நெறிகள் தானே ஊட்டச்சத்து. இந்த ஊட்டச் சத்துக் குறைந்தால் மக்களாட்சியே நோஞ்சானாகவே தான் மாறும் எப்படி வலுவோடு விளங்கும் இதுதானே நிஜமான தேசிய அவமானம்!
எங்கு பார்த்தாலும் முறைகேடுகள். லஞ்சங்கள், ஊழல்கள் இதைத் தடுக்க லோக்பால்கள். அதை விவாதிக்க ஆயிரம் தடங்கல்கள் ஏன்? ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை வலுவான பொருளாதாரத்தை உறிஞ்சும் ஆக்டோபஸ் உறிஞ்சிக் கண்கள் நிறுவனங்களாக, விலங்குகளாக, மாஃபியாக்களாக மாறிப்போனதால் அவர்களின் கண் அசைவுக்கு ஏற்ப ஆடும் நிர்வாகங்களால் MAL ADMINISTRATION ஏற்பட்டு தாராள கொள்கையாக MAL PRACTICE வளர்ந்து விட்டதால் தானே MAL NUTRITIONஅதிகரித்தது.
உணவில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய சரிவிகித விதிகளும், சட்டங்களும் குறைந்து நாடே நோஞ்சானாக மாறிவிட்டது! அதனால்தான் பிரதமரே தன்னை அறியாமல் தேசிய அவமானம் என ஒப்புதல் வாக்கு மூலம் தந்தாரோ!!
கிழக்குக் கடலோர மாநிலங்களில் வயிற்றுப் பாட்டுக்கு ஏழைகள் படும்பாடு சொல்லில் வடிக்க இயலாது. மாங்கொட்டைப் பருப்புக் கஞ்சி, கிழங்குகளைத் தேடி காட்டில் அலைவது போலவே மேற்குக் கடற்கரைப் பக்கமும் விவசாயிகள் வறுமைச் சாவு, கடன் சாவு, நோஞ்சான் குழந்தை, நாட்டின் நடுப்பகுதி கிராமங்கள் வறட்சி காரணமாக மூன்று வேளை முறையான உணவுக்கு அலையும் ஏழைகள். மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் வறுமைச் சூழல், இன்னொரு பக்கம் பங்கு வணிகத்தில் வரலாறு காணாத புள்ளி விலை ஏற்றம்! என்னே முரண்பாடு.
உணவு தானிய விலை ஏற்றம்! வணிகத்தில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு லாபம் அதிகம்! உழைக்கும் ஆலைத் தொழிலாளிகள் சம்பளப் பேச்சு வார்த்தை தோல்வி, உற்பத்தி இலக்கை தொட்டு விட்டதாக வர்த்தக கழகங்கள் பெருமிதம். ஒரேநாடு ஒரே மக்கள் இருவேறு வர்கங்கள். இந்த முரண்பாடுகளைத்தான் சுதந்திரம் பரிசாகத் தந்துள்ளது போலும். அதனால் தான் ஊட்டம் குறைந்து விட்டது.
32 ரூபாய் சம்பாதிப்பவர் வருவாய் ஈட்டுபவர்! 31 ரூபாய் சம்பாதிப்பவர் வறுமைக்கோட்டுக்கு உள்ளே இருப்பவர் நல்லதொரு பொருளாதார திட்டமிடல் சடுகுடு ஆட்ட நடுவர்களாய் மத்திய திட்டக் குழு உறுப்பினர்கள்.
ஐ. மு. கூ. வின் முதல் கட்ட கூட்டணியில் காதலர்களாய் காங்கிரசுடன் உறவாடிய கம்யூனிஸ்டுகள் சுட்டிக் காட்டிய வேலைத் திட்டம் தான் உணவுக்குப் பாதுகாப்பு, வேலைக்கு உத்தரவாதம் என்பது. இதை காதலர்கள் கழண்ட பின்னரும் அவர்கள் சொன்னதை இப்போது செய்ய முயற்சிகள். இதற்கும் எதிர்ப்புகள். இன்னொரு புறம் உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட பன்னாட்டு நிறுவன அனுமதிகள் முயற்சிகள், தோல்விகள்.
மொத்தத்தில் எல்லாவற்றிலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இடுப்பில் ஆடை கட்டவும் வலுவில்லாமல் வெட்கமறியாமல் நிர்வாணமாக தேசம்!
சோமாலியாவின் உணவுப் பஞ்சம் போலவே. நிர்வாக ஊட்டங் குறைந்த நோஞ்சான்களிடம் நாடே சிக்கித் தவிக்கிறது. இத்தனைக் குடியரசு கன்டபின்னரும். நாம் கன்ட பலன் இதுதான். வாழ்க நம் ஜனநாயகம்.
11:58 by iamvenkatesh · 0
சமூகத்தை சீரழிக்கும் விகடனின் டிவி சீரியல்கள்...
சமீபகாலமாக கொஞ்சம் விரும்பிப் பார்க்கும் டிவி சீரியல்கள் என்றால் அது விகடன் தயாரிக்கும் டிவி சீரியல்கள் என்றே சொல்லலாம். ஆனால் இப்போது அதுவும் தலைகீழாகிவிட்டது. காறித்துப்புகிற வகையில் டிவி சீரியல்களைத் தயாரிப்பதில் விகடனே முன்னிலை வகிக்கிறது. இவர்கள் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் தென்றல், திருமதி செல்வம், அழகி போன்ற சீரியல்கள். ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருவன் டாவக்கிறது. ஒருத்தி புருஷனை இன்னொருத்தி டாவடிப்பதையும் அழகாகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
திருமதி செல்வம் டிவி தொடரில் ஒரு காட்சி, கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறான், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாள். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்கள். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக உட்கார்ந்திருக்கிறாள். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாள். இப்படியாகப் போகிறது ஒரு காட்சி. இந்த டிவி தொடரின் காட்சிகள் ஏற்கனவே உழுத்துப் போயிருக்கும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
தென்றல் என்றொரு டிவி தொடர். அதில், கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் தொடரின் இயக்குநர்.
இது போன்றுதான் பெரும்பாலான டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் இருக்கின்றன. இந்த தொடர்களை இயக்கும் இயக்குநர்களை எதை வைத்து அடித்தால் திருந்துவார்கள்...?
00:56 by iamvenkatesh · 0
மசாஜ் பாதி... மஜாய் மீதி... - கிறங்க வைக்கும் பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி என்றாலே பாட்டில் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்த வியத்தில் பக்குவப் பட்ட பலருக்கும் பலான இடங்கள் தான் நினைவுக்கு வருகிறதாம். பாண்டிச்சேரி அருகில் அந்த அளவுக்கு, மலிவு விலையில் மதுவோடு. சிறிதளவு தூரத்தில் தமிழக எல்லையில் மதுவும் மாதுவும் கிடைக்கிற காரணத்தினால், இளைஞர்கள் கூட்டம் ஈக்களாய் மொய்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிற போது வேதனையாகத்தான் இருக்கிறது நமக்கு.
கண்களை பறித்து காந்தமாய் இழுக்கச் செய்யும் அளவுக்கு அழகுடைய பெண்கள் பலரும் இந்த வேலையில் இறங்கி இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், சும்மா ஜில்னு சுன்டி இழுக்க வைக்கிற இளசுகள், அதுவும் கேரள கிளிகள், ஆந்திரா ஆன்டிகள், கர்நாடகா கட்டழகிகள் என இவர்கள் கையால் மசாஜ் பன்னிக்கனும் என்றால் எவருக்குத்தான் ஆசை வராது? அதனால் தான் ஆயுர்வேதிக் என்கிற பெயரில் இந்த அசிங்கத்தை அரங்ககேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரே ஆள் மூன்று இடங்களில் நடத்துகிறார் என்றால், எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இதில் மிக மிக வெட்க கேடான செய்தி என்னவென்றால், மாதா மாதம் 25,000 ரூ மாமூலாக கோட்டக்குப்பம் போலிசார் பெற்றுக் கொள்வதுதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்மட்டும் இல்லாமல் இந்த ஈனதனம் நடத்திவரும் உரிமையாளரே ஒப்புகொள்கிறார் கோட்டக் குப்பத்திலுள்ள ஆரோக்கியா ஆயுர்வேதிக், குயிலா பாளையம், ஆரோவில், பெரிய முதலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி என இவர்களின் எந்த சென்டருக்கு சென்றாலும் எடுத்த வேகத்தில் 1500 ரூ செலுத்தி விட வேண்டுமாம். ஆளுக்கு ஏத்த விலை என்கிற ரீதியில் தேர்ந்தெடுத்து இதமாக தேகத்தை வருடிக் கொடுக்கும் அந்த இளசுகள், அங்கே... இங்கே... என தடவி, வருடி, கிள்ளி சூடேற்றி கண்கள் சொருக்கும் நிலைக்கு போகும் நேரத்தில் சமயம் பார்த்து சேட்டையை துவங்கி விடுகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், ரெகுலர் வாடிக்கையாளர்கள் கசந்து போய் விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மட்டும் புதுசு புதுசு ஆளை மாற்றிக்கொள்கிறார்களாம்.
செய்தியை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட சென்டருக்கு போன் செய்து, ஹலோ.. நான் ரெகுலர் கஸ்டமர் பேசுறேன்... புதுசா எதுவும் இல்லையா? என்று கேட்டதற்கு, கேரளா பீஸ் மூனு புதுசா இருக்கு... உடனே வாங்க என்றார், எதிர்முனையில் பேசிய அந்த பெண்மனி. மேலும், ரேட் எப்படி? என்று துருவ ... அதெல்லாம் ஆள பார்த்து பேசிக்கலாம் என்று முடித்துக்கொண்டார். இதெல்லாம் நம்மிடம் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக இருந்தாலும், இன்னும் சந்தேகம் தீராமல் நண்பர் ஒருவரிடம் போன் செய்து இதுபற்றி கேட்டோம். நீங்க சொல்றதெல்லாம் அத்தனையும் உண்மைதாங்க... நேற்று கூட எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மசாஜ் பண்ணிக்க போய் இருக்கார். அப்படி இப்படின்னு நல்லாத்தான் போயிட்டு இருந்துருக்கு. திடீரென கையை அங்க விட்டிருச்சாம் அந்த பொண்ணு. அலறி அடிச்சு ஓடி வந்திருக்கார் நம்ம ஆளு என்ற அவர் கூட ஒரு பத்திரிக்கை நிருபர் என்கிற போது, வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை என்று தான் எண்ண தோன்றுகிறது. இந்த ஒரு இடத்திலேயே இப்படி என்றால், மற்ற மற்ற இடங்களில் எப்படி இருக்கும்? என்பதுதான் நம் கேள்வி.
- கே.எஸ். நாராயணன்.
01:21 by iamvenkatesh · 0
பத்திரிகையாளர்களைத் ஓட ஓட துரத்தியடிக்கும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்
சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டாருன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இந்த சினிமா பிஆர்ஓ உதவியாளருக்கு நல்லாவே பொருந்தும். தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவர்தான் ஜாண்மகன். சொத்தை பி.ஆர்.ஓ.க்களே நாலு உதவியாளர்களை வைத்திருக்கும் போது ஐடி கம்பெனி டிப்டாப் ஆசாமி போன்று இருக்கும் இவரோ ஒரே ஒரு குமாரமான உதவியாளரை வைத்திருக்கிறார். தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கோ தலை கம்முன்னு இருக்க வாலோ போடாத ஆட்டம் எல்லாம் போடுது.
பத்திரிகையாளர் சந்திப்பை வைப்பதற்கு முன்பே, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாம் பி.ஆர்.ஓ.விடம் நாலு பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டாலே போதும் என்று சொல்லி விடுகிறார்கள். எதற்கு செலவு செய்து அப்படி ஒரு சந்திப்பை நடத்துவானேன் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ எதையும் கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே மீடியாக்கள்தான். எனவே எல்லா மீடியாக்களையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்துவிடுவார்கள். இந்த முன்னணி பி.ஆர்.ஓ. பண்ணுவது எல்லாமே பெரிய நிறுவனங்களுக்கான படங்கள் என்பதால் பெரும்பாலான மீடியாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்கும்.
வருகிற பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை ஆட்டையப் போட்டுவிடுகிறாராம் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர். ஏதோ ஆசைப்பட்டு பண்ணுறான்பா... விட்டுரலாம் என்று நினைத்தால் இவர் பத்திரிகையாளர்களை சரிவர மதிப்பதே இல்லை. பத்திரிகையாளர்களை வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்... என்று இவர் மீது குற்றம் வாசிக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.
பெரிய பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள் வந்துவிட்டால் சாஷ்டாங்கமாக வணக்கம் சொல்லும் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர், நடுத்தரமான சிறிய பத்திரிகையாளர்கள் வந்தால் கண்டு கொள்வதே இல்லை. அதே போல பெரிய பத்திரிகை ஆட்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கோ, பத்திரிகையாளர் காட்சிக்கோ தொடர்ந்து அழைப்பு கொடுத்து அழைப்பாராம். அதுவே சிறிய பத்திரிகை என்றால் கண்டு கொள்வதே இல்லையாம்.
வழக்கு எண் 18/9 படத்தின் பத்திரிகையாளர் காட்சியிலும் இது போல சில மீடியாக்களிடம் ’படம் இருக்கு வந்தா வாங்க...’ என்று வேண்டா வெறுப்பாக அழைக்க அவர்கள் பத்திரிகையாளர் காட்சிக்கு போகாமல் படத்தைப் பற்றி எழுதாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். வர வர இவனுக்கு கொழுப்பு அதிகமாகிப் போச்சு... மதிக்கிறதே இல்லை என்று உள்ளூர அழுது புலம்பும் இவர்கள் வாலைப் பற்றி தலையிடம் புகார் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
வாலே இப்படி இருந்தா தலை எப்படி இருக்கும்..? யார் போன் செய்தாலும் எடுக்கவே மாட்டாராம் இந்த தலை. (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குப்பா போனு. பேசாம தலையச் சுத்தி தூர எறியலாம்ல...) அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படித்தான் புகார் வாசிப்பதாம்...? வெலவெலத்துப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
தயாரிப்பாளர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும் இவர்களே வேண்டிய மீடியாக்களை மட்டும் கூப்பிடுகிறார்கள். பி.ஆர்.ஓ. 100 பத்திரிகையாளர்களை கூப்பிட சொன்னால் உதவியாளர் வெறும் 50 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கிறாராம். மற்றவர்களை கொஞ்சம் கொஞ்சம் ஓரம் கட்டி விடுகிறார்கள் என்று எக்கச்சக்கமாகக் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.
வால் இப்படியே ஓவரா ஆட்டம் போட்டா எப்படி அதன் கொட்டத்தை அடக்குறதுன்னு தீவிரமாக யோசிச்சுக்கிட்டு இருக்கிறார்களாம் இந்த பத்திரிகையாளர்கள். இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில்
உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப்
பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும்
தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
01:32 by iamvenkatesh · 0
அடேங்கப்பா... வழக்கு எண் 18/9 க்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா...? வியப்பில் தமிழ் திரையுலகம்
புதுமுகங்கள் நடித்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா என ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது வழக்கு எண் 18/9. பாலாஜி சக்திவேல் இயக்கம் லிங்குசாமி தயாரிப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை. நடித்த எல்லாருமே புதுமுகங்கள்தான். முதல் நாள் முதல் காட்சியே அரங்கு நிறைந்த காட்சியைத் தொட்டிருக்கிறது வழக்கு எண் 18/9. புதுமுகங்கள் நடித்த படத்திற்கு ஒரு தியேட்டரில் 40 பேர் 50 பேர் ஒரு காட்சிக்கு உட்கார்ந்தாலே மிகப்பெரிய விஷயம். அந்த அளவுக்குதான் இருந்தது சமீபத்திய புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படங்களின் ரிசல்ட். ஆனால் வழக்கு எண் 18/9 க்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங் தமிழ் பட தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
இந்த படம் வெளியான சாந்தி திரையரங்கில் சமீபகாலத்தில் கர்ணன் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குதான் இவ்வளவு கூட்டம் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்திற்குதான் அப்படி ஒரு கூட்டம். சென்னை நகரின் பெரும்பாலான தியேட்டர்களில் காலை முதலே குறைந்த அளவு எண்ணிக்கையில்தான் டிக்கெட்டுகள் இருந்தன. படம் துவங்கும் நேரத்தில் எல்லா டிக்கெட்டுகளுமே விற்றுத் தீர்ந்திருக்கின்றன. சத்யம் தியேட்டரில் டிக்கெட்டே இல்லை. பெரும்பாலான திரையரங்குகளில் இதுதான் நிலை. இந்தப் படத்திற்கு அப்படி ஒரு மாஸ் உருவாக காரணம் என்ன...? பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு வருவது போன்ற ஒரு ரசிகர்கள் கூட்டம் இந்தப் படத்திற்கு வரக் காரணம் என்ன... இதையெல்லாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து புதிதாக படம் எடுப்பவர்கள் அந்த காரணங்களை தங்கள் படத்திலும் பயன்படுத்தினால், எல்லாப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான்.
பதிவை இணைத்தால் பரிசு...
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
19:43 by iamvenkatesh · 0
தினத்தந்தியும் வழக்கு எண் 18/9 விமர்சனமும்...
பிரசன்னா ஸ்நேகா தங்களது திருமணத்திற்கு பத்திரிகையாளர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த உடனேயே அவசர அவசரமாக வழக்கு எண் 18/9 படத்திற்கான பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. படத்தைத் திரையிடும் முன்பு படத்திற்கான விமர்சனங்களை வெள்ளிக்கிழமைக்கு மேல் வெளியிட்டால் போதும் என்று வேண்டுகோள் வைத்தனர் படத் தயாரிப்பு டீமினர். எந்த மீடியாவும் படத்தின் விமர்சனத்தை வெளியிடாத நிலையில் இந்த வேண்டுகோளை உடைத்து நேற்றே படத்திற்கான விமர்சனத்தை வெளியிட்டது தினத்தந்தி.
பொதுவாக தினத்தந்தியில் படத்திற்கான விமர்சனத்தை படம் ரிலீசான நாளில் இருந்து சில நாட்கள் கழித்தே எழுதுவார்கள். இது காலா காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பாருங்கள், அன்று 100 நாட்கள் ஓடுகிற படத்திற்கும் படம் ரிலீஸ் ஆகி நான்கைந்து நாட்களுக்கு பிறகு தான் விமர்சனம் வெளியிட்டது இந்த நாளிதழ். அதே முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது. ஆனால் என்ன, அன்று படம் குறைந்தது பத்து இருவது நாட்களாவது ஓடும். ஆனால் இன்றோ பத்து இருபது காட்சிகள் கூட ஓடமாட்டேன் என்கிறது. ஆனாலும் தனது கொள்கைப் பிடியில் இருக்கும் நாளிதழுக்கு வாழ்த்துகள்.
சில சமயங்களில் இவர்கள் விமர்சனம் எழுதி வெளியிடுவதற்கு முன்பே படங்கள் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட விடும். ஒருவேளை பத்திரிகை விமர்சனத்தைப் படித்து விட்டு யாரும் இன்று படம் பார்க்கப் போவதில்லை என்பது தெரிந்தே ஒருவேளை நாளிதழ் இப்படி செய்கிறதோ என்னவோ...!
பதிவை இணைத்தால் பரிசு...
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
12:22 by iamvenkatesh · 0
கோவிலில் வரம்பு மீறும் காதலர்கள்... - நொந்து போன பக்தர்கள்...
வேலூர் என்று சொன்னால் கோட்டையும் பொற்கோவிலும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அதைவிட இன்னும் கூடுதலாக, சிறப்பானவை நிறைய இருக்கின்றன. என்ன என்று கேட்கிறீர்களா?
வேலூர் நகரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் அச்சு அசலான கிராமத்திற்கான அடையாளங்களோடு விளங்குகிறது பாலமதி கிராமம். சுமார் 2200 பேர் வசிக்கும் இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் மற்றும் முருகன் கோயில்கள். இருப்பதும் வேலூருக்கே தனிச்சிறப்பு என்றுதான் கூறவேண்டும். இந்த கோயில்களை காண அன்றாடம் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு வாகனங்களில் வந்த வன்னம் இருந்தாலும், அதன் சிறப்புக்கு குறைவு எதுவும் இல்லாத காரணத்தினால் தான், இன்றைக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த இடமாக மாறி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.
மலைமீது அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கோயில்களுக்கு செல்ல வேண்டுமானால் நான்கு கொண்டை ஊசி வளைவுகளும் நான்கு நேர்முக வளைவுகளும் அமைந்திருக்கின்றன. பார்க்கிற வேகத்தில் பிரமிக்கவும் மிரளமாகவும் வைக்கும் அளவுக்கு அடர்ந்த காடுகளையும் குன்றுகளையும் கொண்டிருக்கும் இந்த மலைவழி பாதைகளின் இருபுறங்களிலும் புதர் மறைவுகளிலும் கள்ள காதலர்கள் தொல்லை அதிகரித்து வேலூர் புண்ணிய பூமி அதன் புனிதத்தன்மையை இழந்து வருவது வேதனைப்பட வேண்டிய ஒன்றுதான். இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சமூக விரோதிகள் பலரும் இந்த இடத்தை தங்கள் புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளதால் பொதுமக்களும் சுற்றுலா பயனிகளும் பெரிதும் பாதிப்பிற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர்.
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
வழக்கு எண் 18/9 விமர்சனம்
விஜய்யை பின்னுக்குத்தள்ளிய விஜயகாந்த் மகன்!
இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை!
பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் விபச்சாரம் :பிரபல பாலிவூட் நடிகை கைது!
01:36 by iamvenkatesh · 0
Subscribe to:
Posts (Atom)




























