சென்சார் போர்டை அதிர்ச்சியடைய வைத்த படம்

நிதின்சத்யா- திஷாபாண்டே நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது மயங்கினேன் தயங்கினேன். பெண்கள் நல விடுதியில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.டி.வேந்தன். இப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், படத்தை பார்த்த அதிகாரிகள், அதிர்ந்தே போய்விட்டார்களாம். காரணம் பல இடங்களில் ஆபாச வார்த்தைகளும், ஆபாச வசனங்களும் படம் முழுக்க இருந்தனவாம். இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் காட்சிகளை கட் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதை கட் செய்து விட்டு மீண்டும் கொடுத்த பிறகே படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுத்ததாம் சென்சார் போர்டு.

01:14 by iamvenkatesh · 0

hotlinksin

கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க – பவர்ஸ்டார் சீனிவாசன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து கோபிநாத் பவர்ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் கோபிநாத். இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் எரிச்சலை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இன்னொருவர் பவர் ஸ்டாரை பார்த்து ‘சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் சினிமா எடுக்க நடிக்க வந்துவிட்டார்’ என்று பேசினார். கோபிநாத்தின் கேள்விகளும்… சிறப்பு விருந்தினரின் இந்த கமென்டும் பவர் ஸ்டாரை ரொம்பவே பாதித்திருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக ‘வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது…’ என்று அமைதியாகவே பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்ட போதிலும் பவர் ஸ்டாரின் மீது இருந்த மதிப்பை மேலும் அதிகரித்துவிட்டிருக்கிறது இந்த நீயா நானா நிகழ்ச்சி. இது குறித்து பவர் ஸ்டாரிடம் கேட்ட போது, ‘என்னை கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… இரவு நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று கூப்பிட்டிருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் பங்கு பெற போனேன். போன இடத்தில் என்னை அவமானப்படுத்தும் விதமாக கேள்விகளைக் கேட்டார் கோபிநாத். இன்னொருவர் நடிப்பு அறிவே இல்லாமல் நடிக்க வந்துவிட்டார் என்று பேசினார்… இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது… இது போன்று மற்றவர்களை அவமானப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் விட்டுவிட வேண்டும்…’ என்கிறார் பவர் ஸ்டார் கொஞ்சம் வருத்தம் கலந்த ஆதங்கத்துடன்.

23:46 by iamvenkatesh · 0

hotlinksin

பேச்சுலர்ஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போடும் பத்மப்ரியா
தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. எனினும் அவரால் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ முடியவில்லை. சமீபகாலமாக அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்தார். கடைசியாக மலையாளத்தில் பத்மப்ரியா நடித்த படம் பழசிராஜா. இந்தப் படத்திற்குப் பிறகு மலையாளத்திலும் சரியான வாய்ப்பு ஏதும் பத்மப்ரியாவுக்கு கிடைக்கவில்லை. இனிமேலும் இப்படியே இருக்க முடியாது என்று நினைத்தவர் இப்போது ஒற்றை பாடலுக்கு குத்தாட்டம் போடுவது என்று முடிவு செய்துள்ளார். பேச்சுலர்ஸ் பார்ட்டி என்ற தலைப்பில் உருவாகிவரும் படத்தில்தான் பத்மா குத்தாட்டத்தில் பட்டையக் கிளப்பப் போகிறாராம். இதைத் தொடர்ந்து ஒற்றை பாடலுக்கு ஆடும் வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பத்மப்ரியா.

01:45 by iamvenkatesh · 0

hotlinksin

கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!
வீட்டில் இணைய இணைப்பு இருந்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று இன்றும் பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பை வாங்கமலே இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டும்தானா கெட்டுப் போகிறார்கள். இண்டர்நெட்டில் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் சில அப்பாவி பெண்களும் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை கள்ளக்காதலை வளர்ப்பதில் மொபைல்போன் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால் அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது பேஸ்புக் இணையதளம். இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அடுக்கடுக்காக அரங்கேறி வருகின்றன. அதிலிருந்து பெண்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதற்காக ஒரேயடியாக பேஸ்புக் இணையதளத்தை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னும் சில காலங்களில் பேஸ்புக்கை தடை செய்யக் கோரி சில அவலக் குரல்கள் ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இணையதளத்தில் நேற்று ஒரு பெண் எம்.எல்.ஏ. தனது கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்துவிட்டது பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த எம்.எல்.ஏ.க்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இருந்த போதிலும் கணவரையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு பேஸ் புக் மூலம் அறிமுகமான ஒருவனுடன் ஓடிப் போய் திருமணமும் செய்து கொண்டாராம். தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய எந்த வித எண்ணமும் இல்லாமல் ஓடிப் போன அந்த பெண்ணை என்னவென்று சொல்வது. இது போன்ற பல ஓட்டங்களுக்கு பேஸ்புக் என்னும் இணையதளம் சமீபகாலமாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ் புக் இணையதளத்தை நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் எத்தனையோபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். கள்ளக் காதலை வளர்க்கவும் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பேஸ்புக்கை குறை சொல்ல முடியாது. அதை பயன்படுத்தும் அரைகுறைகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டி இருக்கிறது.

எது எப்படியோ, பேஸ்புக் இணையதளத்தை வீட்டிலும் அலுவலகத்திலும் தடை செய்தால்தான் சிலரது குடும்ப வாழ்வும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் போலிருக்கிறது.

01:20 by iamvenkatesh · 0

hotlinksin

நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்
நேற்றைய நீயா நானாவில், போலி கவுரவத்தை விரும்புகிறவர்கள் அதை விரும்பாதவர்கள் என இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரிடம் சில கேள்விகள் கேட்பதாக ஆரம்பித்த கோபிநாத் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டார். அதுவும் பவர் ஸ்டார் போலி கவுரவத்தை விரும்புகிறவர் என்கிற ரீதியில். நடுத்தர குடும்பத்தின் மக்களே போலி கவுரவத்திற்காக பல செயல்களைச் செய்து கொண்டிருக்கும் போது பவர் ஸ்டார் ஒரு சினிமா நடிகர் போலி கவுரவத்தை மெயின்டெயின் செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே. 

‘எந்த ஒரு பேட்டியிலும் சரி நீங்கள் ஏன் சீரியசாக இருப்பதில்லை... எல்லா விஷயங்களையும் ஏன் நீங்கள் காமெடியாக... சீரியஸ் இல்லாமல் எடுத்துக் கொள்கிறீர்கள்...?’ என்பதுதான் கோபிநாத் அவரிடம் தொடர்ந்து பல முறை கேட்ட கேள்வி. இதே கேள்வியை கோபிநாத் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘ஒருவர் எல்லா விஷயங்களையும் சீரியசாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா...? காமெடியாக எடுத்துக் கொள்ளக் கூடாதா...?’ என்னும் பதிலை திரும்ப கோபிநாத்தைப் பார்த்து வைத்தார். அதற்கு கோபிநாத்தோ உங்கள் நிஜ முகத்தை வெளிக் கொண்டு வருவதற்காகத்தான் நான் அப்படி திரும்ப திரும்ப கேட்டேன் என்றார்.

கோபிநாத் உண்மை முகத்தை கொண்டு வருகிறாரோ இல்லையோ தொடர்ந்து இதே கேள்வியை அப்படிக் கேட்பது ஒருவரை குற்றவாளி மனநிலையில் நிச்சயம் தள்ளிவிடும். அது மட்டுமின்றி வழக்கறிஞரைப் போன்று குறுக்கு கேள்வி கேட்பது கோபிநாத்துக்கு ஆதரவாக இருக்காமல் நிகழ்ச்சி மேலேயே வெறுப்பு வர வைத்துவிடும் வாய்ப்பு உள்ளது.

பவர் ஸ்டாரிடம் என்று இல்லை.. பேச வருபவர்களிடமும் சில நேரங்களில் இது போன்று கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடுவதும் உண்டு.

நல்ல வேளை கோபிநாத் கேட்ட கேள்விகளுக்கு உள்ளே கோபம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டே பதில் சொன்னார் பவர் ஸ்டார்.

00:56 by iamvenkatesh · 0

hotlinksin

மதுபானக்கடை – கதையே இல்லாத படம்மதுபானக்கடை படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன். புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள் போட்ட மதுபானக்கடை செட்டைப் பார்த்து நிறைய பேர் அங்கு மது வாங்க வந்திருக்கிறார்கள். அவர்கள் பாட்டில் கேட்ட போது படக்குழுவினரோ இது ‘படப்பிடிப்பு நடக்கிற இடம்…’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் நம்ப மறுத்துவிட்டார்களாம் அந்த பகுதி குடிமகன்கள். சில குடிமக்களோ மதுபானக்கடை பார் செட்டின் உள்ளே உட்கார்ந்து நன்றாக தண்ணி அடித்துவிட்டு போனார்களாம். நிஜ டாஸ்மாக் கடை என்று எண்ணி குடிமகன்கள் வந்து போனதில் மதுபானக்கடை டீமினர்க்கு ரொம்பவே சந்தோசம். பட்ஜெட் படமாக இருந்தாலும் படம் பேசப்படுகிற அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது என்கிறது மதுபானக்கடை படக்குழு.

19:10 by iamvenkatesh · 0

hotlinksin

இஷ்டம் - விமர்சனம்பார்த்த உடனே வரும் காதல்... கொஞ்ச நாள் பழகிய பின்பு பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலேயே  நடக்கும் கல்யாணம். அதன்பிறகு ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் வருகிறது சண்டை... கடைசியில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள் தம்பதிகள். சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகிவரும் இத்தகைய காதல் திருமணம் + விவாகரத்து சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இஷ்டம் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம் நிஸார்.விமல் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்க்கிறார். மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். வீடு வசதி வாய்ப்புகளுடன் வாழும் இவருக்கு நிஷா அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணமும் பண்ணிக் கொள்கிறார்கள். சில நாட்களிலேயே வரும் சின்ன சண்டை பெரிதாக வெடிக்கிறது. கடைசியில் விவாகரத்து வரைக்கும் போய்விடுகிறார்கள். கேட்ட உடனேயே விவாகரத்தும் கிடைத்துவிட, பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர் இருவரும். விமலுக்கு ஒரு பெண்ணை பார்க்கிறார் அவர் அப்பா. நிஷாவுக்கும் அவர்கள் வீட்டில் ஒரு பையனைப் பார்க்கிறார்கள். பார்த்த வரன்கள் இருவருக்கும் பிடித்துவிட திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். இரண்டாம் திருமணம் நடந்ததா? இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

விமலுக்கு ஐடியில் வேலை பார்க்கும் இளைஞன் கேரக்டர் என்பதால் படம் முழுக்க தாடி மீசை இல்லாத விமலை பார்க்க முடிகிறது. நிஷா அகர்வாலுடனான ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கிறார் விமல். 
விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். பார்ப்பதற்கு காஜல் அகர்வால் மாதிரியே இருக்கிறார். காஜல் ஏற்கனவே செம பிஸியாகிவிட்டதால் அவரது கால்ஷீட் கிடைக்காதவர்கள் நிஷா அகர்வாலை தைரியமாக நடிக்க வைக்கலாம். 

விமலுக்கு நண்பனாக வரும் சந்தானம் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி செல்கிறார். ஹீரோ விமலில் துவங்கி அவரது அப்பா நிஷாவின் தோழிகள், அத்தை என ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கலாய்த்து தாக்குகிறார் சந்தானம்.

ஹீரோயினின் அம்மாவாக உமா பத்மநாபன், அத்தையாக யுவராணி, விமலின் அம்மாவாக பிரகதி, வாட்ச்மேனாக சார்லி, மொபைல் ரீசார்ஜ் கடை உரிமையாளராக வரும் கராத்தே ராஜா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஒரு துணை நடிகர் செய்ய வேண்டிய கேரக்டரை சார்லியை பண்ண வைத்துவிட்டார் இயக்குநர். வாய்ப்பு இல்லை என்பதற்காக இரண்டே இரண்டு காட்சிகளில் வருகிற ஒரு கேரக்டரிலா சார்லி நடிக்க வேண்டும்.

தமன் இசையில் இரண்டு பாடல்கள் மெலடி ரகம். 

திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம் நிஸார். இன்று சமுதாயத்தில் பெருகி வரும் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் எடுத்ததெற்க்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு அவசரப்பட்டு விவாகரத்து வரைக்கும் போய்விடக் கூடாது என்கிற மெசேஜை படம் சொல்வதற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

02:16 by iamvenkatesh · 0

hotlinksin

பள்ளி மாணவியாக நடிக்கும் ஆன்டி நடிகை
அக்கா, அண்ணி கேரக்டர்களை விட அம்மா வேடம்தான் ஹன்ஸிகாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு உடம்பை இஷ்டத்திற்கு ஏற்றி வைத்திருப்பவர் ஹன்ஸிகா. அநேகமாக நமீதாவும் ஹன்ஸிகாவும் ஒரே எடைதான் இருப்பார்கள் போலும். ஓ.கே.ஓ.கே. படத்தின் வெற்றிக்குப் பிறகு வேட்டை மன்னன் படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். சிங்கம் 2வில் பள்ளி மாணவி வேடத்தில் ஹன்ஸிகாவை நடிக்க வைக்கிறார் ஹரி. ஆன்டி நடிகையாக நடிக்கத்தானே தான் லாயக்கு... தனக்கு போய் இப்படி பள்ளி மாணவி வேடத்தைக் கொடுத்துவிட்டாரே... என்ற ஆச்சரியத்தில் இருந்திருக்கிறார் ஹன்ஸிகா. அப்படியே இருந்தால் என்னாவது... அதனால் உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். சிங்கம் 2 துவங்கும் போது நிஜமான பள்ளி மாணவி மாதிரியே என் உடல் எடையைக் கொண்டு வந்துவிடுவேன்... என்று சவால் விட்டுக் கொண்டு உடற் பயிற்சி செய்கிறாராம் ஹன்ஸிகா.

01:16 by iamvenkatesh · 0

hotlinksin

கலக்கல் வடிவேலு - கலக்கத்தில் காமெடி நடிகர்கள்
தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட வடிவேலு விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இரண்டு வேடத்தில் இவர் நடிக்கும் இந்த படம் ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் புலிகேசி மாதிரியான படமாக இருக்குமாம். ஒருவேளை இரண்டாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம். சிம்புதேவனின் இரண்டாம் புலிகேசி படம் மிகப்பெரிய அளவு வெற்றி படமாக அமைந்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கிடையில் வடிவேலு காமெடியில் மறுபடியும் ஒரு காதல் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் போலி டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. போலி டாக்டராக இவர் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டர் அதிரப் போவது உறுதியாம். இந்தப் படத்திற்குப் பிறகு வடிவேலுவின் மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் வடிவேலு வந்துவிட்டால் இப்போது உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்களின் மார்க்கெட் சிதறிவிடும் என்பதால் அந்த காமெடிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

மீண்டும் நடிக்க வந்த சிநேகா - ஆடிப்போன இயக்குநர்
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்கிற கதையாக, கல்யாணம் முடிந்த கையோடு படத்தில் நடிக்க வந்துவிட்டார் சிநேகா. நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கும் படம் ஹரிதாஸ். இந்தப் படத்தில் கிஷோர் ஹீரேவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பது புதுப் பொண்ணு ஸ்நேகா. இந்த படம் இப்போது கமிட் ஆன படம் அல்ல. திருமணத்திற்கு முன்பே இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம் சிநேகா. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில இன்னும் படம் பிடிக்கப்படாமல் இருந்தனவாம். தன்னால் தயாரிப்பாளர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த சிநேகா சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருந்தாலும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாரம். தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் எடுத்துவிடுங்கள் என்று கோரிக்கையும் வைத்திருகிறாராம் சினேகா. சினேகா இப்படி வந்து வேண்டுகோள் வைத்திருப்பது ஹரிதாஸ் படக்குழுவை மட்டுமின்றி அதன் இயக்குநரையும் கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் தள்ளிவிட்டதாம். ‘இதெல்லவோ தொழில் பற்று...’ என்று சிநேகா புராணம் பாடுகிறது ஹரிதாஸ் படப்பிடிப்புக் குழு.

01:09 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் அடுத்த படம் தலைவன் - பட்டய கிளப்புமா?
காஜல் அகர்வாலுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் விஜய் துப்பாக்கி படத்திற்காக. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது முடிந்தவுடன் விஜய் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்க்ஷன் த்ரில்லர் படமான யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தெய்வத் திருமகள் படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்யுடன் இணைக்கிறார். இந்தப் படத்திற்கு தலைவன் என பெயர் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி, யோகன் அத்தியாயம் ஒன்று இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் தலைவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

00:12 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘ஈகோ’
கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் கதை பிடித்திருந்தால் மட்டுமே வசனம் எழுத ஒப்புக் கொள்ளும் கேபிள்சங்கர் இப்போது ஈகோ என்னும் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஈஸ்வர் கோமதி என்னும் பெயர்களின் சுருக்கமான ஈகோ என்பதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். நகுலை வைத்து கந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல்தான் ஈகோ படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை சக்திவேல் சொன்ன போது கேபிள்சங்கருக்கு கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இவரது வசனங்கள் இயக்குநர் சக்திவேலுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். ஈகோ படத்திற்குப் பிறகு முன்னணி வசனகர்த்தாக்களின் வரிசையில் கேபிள் சங்கர் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை என்கிறார்கள் ஈகோ பட டீமினர்.

01:42 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் விமர்சனம்
காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. அது உறவாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒரு வகையான இழப்பாக இருக்கலாம். பெத்தவங்களோட மிரட்டலுக்கு பயந்து காதலை துறப்பவர்கள்... இழப்புகள் ஏதும் இல்லாமலேயே காதலில் தோற்கிறார்கள். சிலரது காதலோ சில இழப்புகளுக்கு பின்பே வெற்றி பெறுகிறது. சில காதலோ தாங்க முடியாத இழப்புக்குப் பின்னாலும் தோற்றுப் போய்விடுகிறது.

படித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கிறார் ஜெயம் (லகுபரன்). பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனத்தின் (சுவாதி) மேல் காதல் வருகிறது. முதலில் தனலட்சுமிக்கு ஜெயத்தைப் பிடிக்காவிட்டாலும் போகப் போகப் பிடித்துவிடுகிறது. காதல் என்றாலே வில்லன் இல்லாமல் இருப்பார்களா? தனலட்சுமியின் குடும்பம் அவர்கள் காதலுக்கு குறுக்கே நிற்கிறது. அவர்களை மீறி தங்கள் காதலில் உறுதியாக நிற்கும் ஜெயமும் தனலட்சுமியும் தங்கள் காதலில் ஜெயித்தார்களா...? என்பது மனதை உருக வைக்கும் க்ளைமேக்ஸ்.

கதை என்று பார்த்தால் சாதாரண கதையாகத்தான் தெரியும். ஆனால் அதை திரைக்கதையாக்கும் போது இன்ட்ரஸ்டிங்கான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. காதல், அந்த காதலுக்கு பின்னால் எவ்வளவு இழப்புகள் வேதனைகள் என்று சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர் தங்கசாமி. படத்தின் துவக்கத்திலேயே நடக்கும் இரட்டைக் கொலைகள் அது நடக்க காரணம் என்ன... என்கிற பாணியில் கதை சொல்லியிருக்கிறார் தங்கசாமி. கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது இவர் கதை சொல்லும் பாணி.


தூத்துக்குடியில் நடக்கும் கதை என்பதால் தூத்துக்குடியில் முழுக்க முழுக்க படம் பிடித்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் நடப்பது போன்ற காட்சிகளை கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்த போதும் இவ்வளவு டீட்டெயிலான காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தூத்துக்குடி துறைமுகத்தை அங்குலம் அங்குலமாக அலசி படம் பிடித்திருக்கிறார்கள். திருச்செந்தூர் கோயில், குலசேகரன்பட்டிணம் என இவர்கள் கேமரா உள்வாங்கிய இடம் ஒவ்வொன்றும் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. தனலட்சுமி படிக்கும் பள்ளிக்கூடத்தின் பெயர் பலகையைக் காட்டிய போது பள்ளிக் கூடத்தின் பெயரை மறைத்துக் கொண்டு காட்டுவது அதே போல கதாபாத்திரங்கள் தண்ணி அடிக்கும் போது பாட்டிலை மறைப்பது, குடி உடல் நலத்திற்கு கேடு என டைட்டில் போடுவது இது போன்ற காட்சிகள் இயக்குநர் தங்கசாமிக்கு சமூகத்தின் மீது இருக்கும் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

படத்தின் முதல் பாதி ஜெயமும் தனலட்சுமிக்கும் காதல் வருவது, காதலை அவர்கள் டெவலப் பண்ணுவது என்று போகிறது. அதே நேரத்தில் ஜெயத்தின் அண்ணன் அசோக்கின் பிஸினஸ், அரசியல் பிரவேசம் குறித்தும் சொல்கிறது காட்சிகள். இடைவேளையின் போது செம பஞ்ச் வைக்கிறார் இயக்குநர். இடைவேளைக்குப் பிறகு காதலர்களுக்கு வரக் கூடிய பிரச்சினை, அதனால் ஏற்படுகிற விளைவுகள் என்று போகின்றன காட்சிகள். ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயமாக நடித்திருக்கிறார் புதுமுகம் லகுபரன். இவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். இவரை அசல் தூத்துக்குடி பையனாகவே மாற்றியிருக்கிறார்  இயக்குநர் தங்கசாமி. புதுமுகங்கள் என்று சொல்லிக் கொண்டு ‘நானும்தான் நடிக்கிறேன்’ என்று டார்ச்சர் பண்ணுகிற நடிகர்களுக்கு மத்தியில் தனித்திறமையுடன் லகுபரன் பளிச்சென மின்னுகிறார். இவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கேரக்டருக்கு என்ன தேவையோ அதற்கேற்றார் போல் இயல்பாக இருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். லகுபரரைனப் பார்க்கும் போது நம்ம பக்கத்து வீட்டு பையன் ரமேஷ், சுரேஷ் மாதிரி இருக்கிறது. படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நம்மை வெகுவாக கவர்ந்துவிடுகிறார் ஜெயம்... சாரி... லகுபரன்.

படத்தில் நம்மை வெகுவாக கவரும் இன்னொருவர் ஜெயத்தின் அண்ணனாக வரும் அசோக். இயக்குநர் தங்கசாமியே இந்த அண்ணன் கேரக்டரில் நடித்திருக்கிறார். சொல்லப் போனால் இந்த கேரக்டர்தான் படத்திற்கே ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்ம் இந்த கேரக்டர், செம ஷார்ப். ரியலாக ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் என்னும் போது அவர் எப்படி இருப்பார், என்னென்ன பிஸினஸ் பண்ணுவார்... எப்படி வலம் வருவார்... என்பதையெல்லாம் அசோக் குமார் கேரக்டர் சொல்கிறது. ஜெயத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அசோக் அவன் மீது கோபம் கொண்டு அடிக்கும் கேரக்டர், அப்போது அவன் அப்பா உள்ளே வர அடிப்பதை நிறுத்திவிட்டு போவது... என வீடுகளில் இயல்பாக நடக்கும் சம்பவங்களையே தேடிப் பிடித்து காட்சிகளில் வைத்திருக்கிறார் தங்கசாமி. இந்த இயல்பான காட்சிகளே படத்திற்கு மிகப்பெரும் வலு சேர்க்கின்றன. இவர் நடந்து போகும் போது வெளிப்படும் தோரணை, பேசுற போது இருக்கிற கெத்து... இது எல்லாமே தங்கசாமிக்கு நல்ல படம் இயக்க மட்டுமல்ல ஒரு அண்ணன் கேரக்டராகவே மாறவும் தெரியும் என்பதை காட்டுகிறது. கடைசியில் இந்த அண்ணன் கேரக்டருக்கு ஏற்படும் விபரீத முடிவு நம் கண்களை கலங்க வைத்துவிடுகிறது.

ஜெயத்திற்கு ஜோடியாக தனலட்சுமி கேரக்டரில் நடித்திருக்கிறார் சுவாதி. பொதுவா கேரள நடிகைகள் என்றாலே செமையாகத்தான் இருப்பார்கள். அப்படியிருக்கும் போது சுவாதி பற்றி சொல்லவா வேணும். அழகிலும் நடிப்பிலும் நாற்பது கேரள நடிகைகளை சேர்த்து செய்த மாதிரி தெரிகிறார் சுவாதி. தனலட்சுமி கேரக்டருக்கு நல்லாவே பொருந்தியிருக்கிறார் சுவாதி. ‘ஒரு பையன் என்னை லவ் பண்றேன்னு சொல்றாண்டி...’ என்று சொல்லும் அப்பாவி சுவாதி நம்மை அறியாமலே நம்மை தன் வசப்படுத்திக் கொள்கிறார். ‘கல்யாணம் பண்ணினா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...’ என்று இவர் துணிச்சலாக பெற்றோரிடம் பேசும் போது சபாஷ் போட வைக்கிறார்.

சுவாதிக்கு அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் எலிசபெத். தன் பொண்ணு யாரோ ஒரு பையனை லவ்வுகிறார் என்னும் போது மகளை நினைத்து பயப்படும் இவர், மகன் விபத்தில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து மகளை படாத பாடு படுத்துவது தனத்துக்காக நம்மை உச் கொட்ட வைக்கிறது. டீன் ஏஜ் மகளிடம் எப்படியெல்லாம் அணுகக் கூடாது என்பதற்கு தனத்தின் அப்பா அம்மா கேரக்டர் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தனத்தின் மாமாவாக வரும் அந்த அட்வகேட், தனத்தின் காதலை அவள் வீட்டிலும் ஜெயத்தின் வீட்டிலும் சொல்லும் போது வித்தியாசமான அப்ரோச்சில் மெச்ச வைக்கிறார்.

காமெடி நடிகர் என்று யாரும் படத்தில் இல்லாவிட்டாலும் ஜெயத்தின் நண்பன் பானை சேகராக வரும் அஜய் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவும் இவர் ஒரு பொண்ணுக்கு ரூட் விட அந்த பெண்ணோ ஜெயத்தை ரூட் விடுகிற காட்சிகள் ஏகப்பட்ட கலகலப்பு.

படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நம்மை உட்கார்ந்த இடத்திலேயே தூத்துக்குடிக்கு அழைத்துப் போய்விடுகிறது கேரமா. தொழில் நகரமான தூத்துக்குடியின் கலரான முகமும் கலங்கலான முகத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ராஜ்சுந்தரின் கேமரா.

இசையமைப்பாளர் மனு ரமேஷன் தேவையான இடத்தில் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார். ‘ஏத்து ஏத்து’ பாடல் தூத்துக்குடியின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறது. ‘அசத்தும் அழகு...’ இந்த வருடத்தின் டாப் மெலடி பாடல்களில் தனி இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘ஏலே ஏபுள்ள...’, ‘ஏனோ என் இதயம்’ பாடல்களும் ரசிக்க வைக்கும் ரகம். ‘யாக்கை சுற்றும் ராட்டினம்’ பாடல் கம்பீரம். 

ராட்டினத்தை இயக்கிருப்பவர் தங்கசாமி. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். புதுமுங்களை வைத்து இப்படி ஒரு படத்தை ஜீரணிக்கவே முடியாத ஒரு க்ளைமேகஸை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். ரியல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் திரையில் நடமாடவிட்டிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. நம் ஒவ்வொருவருக்குள் இருந்தும் ஓரிரு காட்சிகளை எடுத்து படமாக்கியிருப்பதாலோ என்னவோ படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் அசைபோட வைக்கின்றன. புதுமுகங்களை வைத்துப் படம் எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அட்டு படங்களாக எடுத்து ரசிகர்களை சாகடிக்கும் இயக்குநர்கள் ராட்டினம் இயக்குநர் தங்கசாமியிடம் கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கிட்டா பரவாயில்லை...

உங்கள் காதலுக்காக ‘போராடி’ ஒருவேளை நீங்கள் தோற்றிருந்தால் ராட்டினம் உங்கள் மனதில் இருந்து என்றுமே அகலப் போவதில்லை. ஒருவேளை காதலில் போராடி ஜெயித்திருந்தால் சில நாட்களுக்கு உங்களை இந்த ராட்டினம் தூங்கவிடாமல் செய்யும் என்பது மட்டும் உறுதி.

02:44 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் இயக்குநர் தங்கசாமி... நிஜமாகவே இவரு GOLD GODதாங்க...
பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த படத்தின் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தனுஷின் 3 துவங்கி ஏராளமான படங்களை இந்த வரிசையில் அடுக்கிக் கொண்டே போகலாம். ராட்டினம் படத்திலும் இது போன்ற ஒரு காதல்தான். ஆனால் வெறுப்பு வரவில்லை. அதற்கு பதிலாக படம் மீதும் அந்த கதாபாத்திரங்கள் மீதும் மிகப்பெரிய ஒரு மதிப்பு வருகிறது. ஹீரோ அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கும் பையன். ஹீரோயின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இப்படி ஒரு கதையென்றாலே அதற்குள் எப்படியெல்லாம் லாஜிக்கை கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுப்பார்கள் நம் இயக்குநர்கள். ஆனால் ராட்டினம் படத்தின் இயக்குநர் தங்கசாமியோ படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் மீதும் தனி மதிப்பு மரியாதையையே வர வைத்துவிடுகிறார். அறிமுக இயக்குநர்கள் வரிசையில் தங்கசாமிக்கு என ஒரு சிவப்புக் கம்பள விரிப்பே கொடுக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்த எஸ்கேப் மோஷன் பிக்சர்ஸ் மதன் அடுத்தப் படத்தை தங்கசாமியையே இயக்கச் சொல்லியிருக்கிறாராம். யு ஆர் வெரி கிரேட் தங்கசாமி. நல்ல படத்தை உருவாக்குவதில் இவரு தங்கசாமி இல்ல... goldgod. உங்ககிட்ட இருந்து ராட்டினம் மாதிரியான நல்ல படங்களை எதிர்பார்க்கிறோம். ராட்டினம் என்னும் நல்ல படத்தைக் கொடுத்ததற்காக தங்கசாமிக்கு எமது நன்றிகள்.

ராட்டினம் விமர்சனம் விரைவில்...

01:53 by iamvenkatesh · 0

hotlinksin

சேரன் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தினாரா?
சமீபத்தில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்று ஒரு படம் ரிலீசானது நினைவிருக்கிறதா. படம் தியேட்டரில் நாலு நாட்கள் கூட ஓடவில்லையே. அப்புறம் எங்க ஞாபகம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் சேரனின் உதவியாளர் ஷண்முகராஜ். புதிய முயற்சியாக முகமே தெரியாமல் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை படம் பிடித்திருந்தார்கள். முதல் இரவு பாடல் அது என்றாலும் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த சேரன் படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை படம் பார்க்க வைத்திருக்கிறார். ‘செம படம்... சூப்பரா ஓடும்...’ என உசுப்பேத்திவிட மைக்கேல் ராயப்பனும் நம்பி படத்தை வாங்கி வெளியிட்டார். ‘இந்தப் படத்தைப் பார்த்தால்தான் காதலர்கள் ஜெயிக்க முடியும், காதலில் ஜெயிக்க பாலோ பண்ண வேண்டிய 5 டி என்ன என்று இதில் சொல்லியிருக்கிறோம்...’ என்று விதவிதமாக விளம்பரம் செய்த போதும் படம் செல்ப் எடுக்கவில்லை. ‘என் கம்பெனி பேர்ல படத்தை ரிலீஸ் பண்ணித்தரேன்... கலெக்க்ஷன் ஆகஆக பணத்தை கொடுத்திடுறேன்’  என்னும் ஒப்பந்தத்துடன் படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். எனினும் இந்தப் படத்தை வெளியிட்ட வகையில் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்டம்தான் மிஞ்சியிருக்கிறது-

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

புதிய தலைமுறை சரண்யாவும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகையும்..கொஞ்ச நாட்களாகவே எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அதாவது புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கிற சரண்யாவும், ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி படத்தில் நடித்த நடிகை அக்க்ஷராவும் ஒருத்தர்தான்னு நான் சொல்கிறேன். ஆனால் என் நண்பரோ அது வேற இது வேற... என்கிறார். என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க சாமிகளா...


ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகை அக்க்ஷரா

 

புதிய தலைமுறை சரண்யா

01:42 by iamvenkatesh · 0

hotlinksin

கடுப்பில் விமல், சிவா - காரணம் ‘கலகலப்பு’
படம் பார்க்க போன ரசிகர்கள் எல்லாருமே சிரிச்சிக்கிட்டேதான் வெளிய வராங்க. நோ லாஜிக்... ஒன்லி காமெடி என்கிற பாலிசியுடன் களம் இறங்கிய கலகலப்பு கலெக்க்ஷனிலும் கொலைகுத்து குத்துதாம். இந்தப் படத்தின் வெற்றியில் சுந்தர் சி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் கடுப்பில் இருக்கிறார்கள் விமலும் சிவாவும்.

கலகலப்பு படத்தின் இடைவேளைக்குப் பிறகு வருகிறார் சந்தானம். அதுவும் அவரது காமெடி பெரிய அளவுக்கு எடுபடவில்லை என்றாலும் சிவா, மனோபாலா, இளவரசு என மிகப்பெரிய பட்டாளங்கள் இருப்பதாலேயே அவரது காமெடியும் சிரிக்கிற வகையில் இருந்தது. படத்தின் முதல் பாதியைத் தாங்கிப் பிடிப்பவர் சிவாதான். ஆனால் படத்தின் விளம்பரங்களிலோ சந்தானத்தைதான் முதன்மைப்படுத்துகிறார்களாம். போஸ்டர் டிசைன்களிலும் சந்தானத்தை நடுவில் வைத்து விமலையும் சிவாவையும் ஓரம் கட்டிவிடுகிறார்களாம். இதனால் கடுப்பான விமல், படத்தின் மெயின் ஹீரோ என்னையே இருட்டடிப்பு பண்றாங்க... என்னும் எரிச்சலில் இருக்கிறாராம். இவர் இப்படி என்றால் சிவாவோ, ‘படத்தின் முதல் பாதியை ஓட்டுறதே என்னுடைய மொக்கை காமெடிதான். அதற்குதான் ஒவ்வொரு ரசிகரும் க்ளாப்ஸ் விசில் அடிக்கிறாங்க... ஆனா, என் படத்தையும் விளம்பரங்களில் ஓரம்கட்டுறாங்க...’ என்று கடுப்புடனே பொருமுகிறார்.

கலகலப்பு படம் பார்க்கிற ரசிகர்களுக்கு மட்டும்தான் போலிருக்கு...

01:23 by iamvenkatesh · 0

hotlinksin

வழக்கு எண் 18/9 - கெட்ட வார்த்தையை ரசித்த சென்சார் போர்டு
வழக்கு எண் 18/9 படம் கடந்த வாரத்தில் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய அளவுக்கு வெற்றிப் படமாகியுள்ள இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார் முத்துராமன். படத்தில் இவர் பேசும் வசனங்களின் இடையில் வரும் வார்த்தைகளில் ஒன்று ‘தாயோளிகளா...’. இது கெட்டவார்த்தை என்பதால் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தைப் பார்த்த போது முதலில் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வார்த்தை வேண்டாம் மியூட் அடித்துவிடுங்கள் என்று பாதிபேர் சொல்லியிருக்கிறார்கள். பாதிபேர் இல்ல... இருந்துவிட்டுப் போகட்டும்... என்றிருக்கிறார்கள். இயக்குநர் பாலாஜி சக்திவேல் அந்த இடத்தில் வேறு எந்த வார்த்தையையும் போட முடியாது. அந்த வார்த்தை கிராமத்துப்புறங்களில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான். அதனால் அந்த வார்த்தையை வைப்பதில் தவறில்லையே... என்று சொல்லியிருக்கிறார். சென்சார் போர்டு உறுப்பினர்களில் இந்த வார்த்தையை கேரக்டரோடு ஆழமாக ஒன்றி ரசித்தவர்கள் மற்ற உறுப்பினர்களிடம் இந்த வார்த்தையைப் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறார்கள். பின்னரே அந்த வார்த்தை படத்தில் இடம்பெற்ற சம்பதித்தார்களாம் மற்ற சென்சார் போர்டு உறுப்பினர்கள்.

01:16 by iamvenkatesh · 0

hotlinksin

கலகலப்பு @ மசாலா கபே - சுடச்சுட விமர்சனம்படம் பார்க்க வருகிற ரசிகர்களை சிரிக்க வெச்சு அனுப்பணும்கிற பாலிசியை வைத்துக் கொண்டு இன்று வெற்றிப் பட இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் இதை சில வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவருடைய படங்களில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. படத்தில் கலகலப்பை வைக்கும் இவர் கலகலப்பு என்று படத்திற்கு டைட்டில் வைத்தால் படம் எப்படி இருக்கும்?கும்பகோணத்தில் மசாலாகபே என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் விமல். பேருதான் மசாலா கபேன்னு இருக்கே தவிர அது தலைமுறை தலைமுறையா நடத்தப்பட்டு வருகிற ஓட்டல். மூன்றாவது தலைமுறையான விமல் நடத்தும் போது மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடுகிறது. என்றாலும் பரம்பரை ஹோட்டலாச்சே என்ற எண்ணத்தில் நடத்தி வருகிறார். அங்கேயே சமையல்காரராக இருக்கிறார் தாத்தா ராகவன். அவருடைய பேத்தி ஓவியா. திடீரென இங்கு வந்து சேருகிறார் ஜெயிலில் இருந்து பரேலில் வந்து சேரும் சிவா. இவருக்கும் ஓவியாவுக்கும் காதல் பத்திக் கொள்கிறது. அதே நேரத்தில் அந்த ஊருக்கு வந்து விமலின் ஓட்டலையே மூடச் சொல்லுகிற ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலிக்கும் விமல் மீது காதல். விமல் மசாலா கபேயை நடத்தி வரும் இடத்தின் மீது தொழிலதிபர் ஒருவர் கண் வைத்துவிட, அந்த இடத்தை நைசாக சிவாவிடம் இருந்து எழுதி வாங்குகிறார் ஜான் மைக்கேல். ஏமாற்றி வாங்கிய மசாலா கபேவை திரும்ப வாங்கினார்களா...? அவர்கள் காதல் என்னவானது என்பது க்ளைமேக்ஸ்.

படம் துவங்கியதில் கொஞ்ச நேரத்திற்கு போரடிப்பது போல் மூவ் ஆனாலும், சிவா என்ட்ரி கொடுத்த பிறகுதான் படம் ஜாலி மூடுக்கு வருகிறது. அதுவும் சிவா அடிக்கும் மொக்கை கமென்ட்டுகளுக்கு பதில்களுக்கு தியேட்டரில் செம க்ளாப்ஸ்.

திடீர்ன்னு ஒரு கனவுப் பாட்டு அதில 100 பேரு ஹீரோ பின்னால ஆடுறது எல்லாம் படத்தை சில வருடங்களுக்கு முன்பு வெளியான சுந்தர் சியின் படங்களை நினைக்க வைக்கிறது.

மசாலா கபேயை நடத்தி வரும் வெள்ளந்தியான கேரக்டரில் விமல். உண்மையை மட்டுமே பேசுகிற இவர் லஞ்சம் கொடுப்பதற்கு போய் அடி வாங்கிவரும் காட்சி செம காமடி.

இவருடைய தம்பியாக வரும் சிவா காமெடியில் சந்தானத்தையே மிஞ்சுகிறார். சந்தானமாவது கொஞ்சம் ஆக்க்ஷன் கொடுத்தால்தான் சிரிப்பு வரும். ஆனால் சிவா சும்மா நின்று கொண்டு அடிக்கும் கமென்டுகளுக்கே தியேட்டர் அலப்பறை கொடுக்கிறது.

ஹெல்த் இன்ஸ்பெக்டராக வருகிற அஞ்சலி, திடீரென விமலை காதலிப்பதாக சொல்கிறார். அஞ்சலியின் மேனரிஸம் எல்லாமே எங்கேயும் எப்போதும் மணிமேகலையை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதே பாடி லாங்க்வேஜ். என்ன அதில் சுடிதர்... இதில் சேலை... அவ்ளோதான் வித்திசயாம். ரசிகர்களுக்கு அதிர்ச்சியே வருகிற வகையில் குத்தாட்டம் போடுகிறார்கள் அஞ்சலியும் ஓவியாவும். கிளாமராக பாட்டுக்கு ஆட வேண்டுமானாலும் தயார் என்று அம்மணிகள் அழைப்பு விடுப்பதாகவே இருக்கிறது இந்த நடனம்.

இடைவேளைக்குப் பிறகு வருகிறார் சந்தானம். முதல் பாதியில் சிவாவின் காமெடியில் களைகட்டுகிறது என்றால் இரண்டாவது பாதியில் சிவாவும் சந்தானமும் ஆளாளுக்கு வீடு கட்டுகிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் ஜான் மைக்கேல், வட்டி கொடுப்பவராக வரும் இளவரசு, ராகவன் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறார்கள்.

சந்தானம் டீம் காரில் விமல், மனோபாலாவை துரத்துகிற காட்சிகள் நிச்சயம் இந்த வருடத்தின் காமெடி காட்சிகளில் சிறந்த இடம் பிடிக்கும்.

மசாலா கபேவை டெவலப் பண்ண மூலிகை சம்பந்தமான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதற்காகவே இயக்குநருக்கு தனியாக சபாஷ் போடலாம்.

சுந்தர் சியின் படங்களுக்கே உரித்தான மசாலாவுடன் உருவாகியிருக்கிறது இந்த மசாலா கபே சமையல்.

15:54 by iamvenkatesh · 0

hotlinksin

கலகலப்பு - எதிர்ப்பும் இல்லை... எதிர்பார்ப்பும் இல்லை.
இன்று களம் இறங்குகிறது கலகலப்பு. மசாலா கேப் என்று முதலில் துவக்கப்பட்ட இந்த படம் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த பிறகு கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டது. சுந்தர் சி இயக்கத்தைவிட்டுவிட்டு நடிக்க வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நடிப்பில் எந்த படமும் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களே. அதனால் இயக்கத்தில் மேலும் ஒரு ரவுண்டு வரும் எண்ணத்துடன்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. குஷ்பு இந்த படத்தைத் தயாரித்தார். அவர்களோடு யுடிவி இணைந்து கொள்ள முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்து யுடிவியிடம் கொடுத்துவிட்டார் குஷ்பு. கலகலப்பு படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் ஏதும் கொடுக்கப்படவில்லை. விமலும் சிவாவும் ஹீரோக்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் அஞ்சலியும் ஓவியாவும்.

இன்று இந்த படத்திற்கு போட்டியாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை. பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பும் இல்லாமல் போட்டி படங்களின் எதிர்ப்பும் இல்லாமல் களம் இறங்கியிருக்கிறது கலகலப்பு. ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்குமா?

01:11 by iamvenkatesh · 0

hotlinksin

இங்கே யாருக்கும் வெட்கமில்லை…!
துடிதுடித்தபடி உள்ள ஒருவனைப் பார்த்து விட்டு கடந்து போகாதே! அவனுக்கு உதவு என்கிறது வைணவம்.

நீ லாபம் சம்பாதித்து ஈட்டிய பொருளில் உன் அருகில் வாழும் ஏழையின் பங்கும் உள்ளது அவனுக்குப் பகிர்ந்து கொடு என ஜக்காத்தை ஒரு சமூக சட்டமாகவே ஆக்கியுள்ளது இஸ்லாம்.

ஏழைகள் இருக்கும் இடத்தில் நானிருப்பேன் இயேசு பிரான். இப்படி சமயம்தோறும் நன்னெறி ஊட்டப்பட்டு, அதனை விளங்காமல் சமூகம் துப்பி விட்டதோ என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி நிற்கின்றது. ஏனெனில்,

சமயங்கள் எனும் அன்னை தன் பிள்ளைகளுக்கு அமுதூட்ட அன்பை மட்டுமே காட்டி சோறூட்டியதால் துப்பிவிட்ட குழந்தைகளாய் சமூகம் உள்ளது. அதட்டல், உருட்டல், பூச்சாண்டியைக் காட்டி இருந்தால் ஒருவேளை விழுங்கி இருப்பார்களோ என்னவோ?

உணவு ஊட்டச்சத்து குறைபாடு ஏன் ஏற்பட்டது. நோஞ்சான்கள் ஏன் பெருகி விட்டனர். குழந்தைகள் மட்டுமா? நோஞ்சான் பெண்கள், ஆண்கள் என குறிப்பிட்ட அளவுக்கு ஊட்டக் குறைபாடுள்ளவர்கள் இருப்பதால்தானே கிராமம் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படுகிறது.

இதில் பெருமையாகப் பலரும் எங்கள் ஆட்சியில்தான் மருத்துவ வசதிகளை விரிவாக்க அதிக அளவு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கினோம் என்கின்றனர் வெட்கமில்லாதவர்கள்! நல்ல உணவு, நல்ல சூழல், போதிய வருவாய் இருந்தால் நோய் ஏன் வருகிறது உடல் நலம் தான் கெடுமா? இதை இந்த கோணத்தில் யார்தான் சிந்திப்பது?

ஊட்டச்சத்து குறைபாடு உணவில் மட்டுமா உள்ளது? எல்லாவற்றிலும் தானே உள்ளது MAL ADMINISRATION என்ற மோசமான நிர்வாகச் சூழலுக்குள் தானே பல சமயக் கருத்தை அறிந்த பல சமூகத்தவர்களும் அதிகாரப் பொறுப்பில் உள்ளனர்? இவர்களால் தானே MAL PRACTICE கள் பெருகி நிர்வாகக் கோளாறுகள் ஊழல்கள் ஏற்பட்டு சமூகத்தின் அனைத்திலும் சட்டதிட்டங்களில் MAL NUTRITION குறைபாடு ஏற்பட்டுள்ளது. உணவில் மட்டுமல்ல குறைபாடு சகலத்திலும் சத்துக் குறைபாடு நிலவத்தானே செய்கிறது.

விடுதலை பெற்று 12 ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டுள்ளன. ஏகப்பட்ட நிதிகள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் பலன் முழுமையாக மக்களுக்கு கிடைத்ததா? சத்துக் குறைவான சோற்றை விருந்தாகப் போட்டது போல்தானே திடடங்கள் இருந்தன இதன் சத்தை, சாரத்தை ஊட்டத்தை மட்டும் உறிஞ்சியது யார்?

சமூக நீதி நிலவ வேண்டும் என்பதற்குத்தானே சாசனச்சட்டம் உருவானது. அந்தச் சாசனத்தின் ஊட்டமிக்க சாரங்கள் நீக்கப்பட்டு சக்கைதானே நடைமுறையாகிறது. அதனால்தானே சாசனச்சட்டம் தங்களுக்கு முறையாக வேண்டும் என்று நீதிமன்ற வாசலுக்குச் சென்று முறையீடுகள் செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தேங்குவதற்கு என்ன காரணம்? சட்டத்தின் ஆட்சி என்கிற  சத்துக்கள் இல்லாமை தானே?

ஜனநாயக மக்களாட்சியில் சாசனச்சட்டமும் வழிகாட்டும் நெறிகள் தானே ஊட்டச்சத்து. இந்த ஊட்டச் சத்துக் குறைந்தால் மக்களாட்சியே நோஞ்சானாகவே தான் மாறும் எப்படி வலுவோடு விளங்கும் இதுதானே நிஜமான தேசிய அவமானம்!

எங்கு பார்த்தாலும் முறைகேடுகள். லஞ்சங்கள், ஊழல்கள் இதைத் தடுக்க லோக்பால்கள். அதை விவாதிக்க ஆயிரம் தடங்கல்கள் ஏன்? ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை வலுவான பொருளாதாரத்தை உறிஞ்சும் ஆக்டோபஸ் உறிஞ்சிக் கண்கள் நிறுவனங்களாக, விலங்குகளாக, மாஃபியாக்களாக மாறிப்போனதால் அவர்களின் கண் அசைவுக்கு ஏற்ப ஆடும் நிர்வாகங்களால் MAL   ADMINISTRATION  ஏற்பட்டு தாராள கொள்கையாக   MAL  PRACTICE வளர்ந்து விட்டதால் தானே MAL NUTRITIONஅதிகரித்தது.
உணவில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய சரிவிகித விதிகளும், சட்டங்களும் குறைந்து நாடே நோஞ்சானாக மாறிவிட்டது! அதனால்தான் பிரதமரே தன்னை அறியாமல் தேசிய அவமானம் என ஒப்புதல் வாக்கு மூலம் தந்தாரோ!!

கிழக்குக் கடலோர மாநிலங்களில் வயிற்றுப் பாட்டுக்கு ஏழைகள் படும்பாடு சொல்லில் வடிக்க இயலாது. மாங்கொட்டைப் பருப்புக் கஞ்சி, கிழங்குகளைத் தேடி காட்டில் அலைவது போலவே மேற்குக் கடற்கரைப் பக்கமும் விவசாயிகள் வறுமைச் சாவு, கடன் சாவு,  நோஞ்சான் குழந்தை, நாட்டின் நடுப்பகுதி கிராமங்கள் வறட்சி காரணமாக மூன்று வேளை முறையான உணவுக்கு அலையும் ஏழைகள். மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் வறுமைச் சூழல், இன்னொரு பக்கம் பங்கு வணிகத்தில் வரலாறு காணாத புள்ளி விலை ஏற்றம்! என்னே முரண்பாடு.

உணவு தானிய விலை ஏற்றம்! வணிகத்தில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு லாபம் அதிகம்! உழைக்கும் ஆலைத் தொழிலாளிகள் சம்பளப் பேச்சு வார்த்தை தோல்வி, உற்பத்தி இலக்கை தொட்டு விட்டதாக வர்த்தக கழகங்கள் பெருமிதம். ஒரேநாடு ஒரே மக்கள் இருவேறு வர்கங்கள். இந்த முரண்பாடுகளைத்தான் சுதந்திரம் பரிசாகத் தந்துள்ளது போலும். அதனால் தான் ஊட்டம் குறைந்து விட்டது.

32 ரூபாய் சம்பாதிப்பவர் வருவாய் ஈட்டுபவர்! 31 ரூபாய் சம்பாதிப்பவர் வறுமைக்கோட்டுக்கு உள்ளே இருப்பவர் நல்லதொரு பொருளாதார திட்டமிடல் சடுகுடு ஆட்ட நடுவர்களாய் மத்திய திட்டக் குழு உறுப்பினர்கள்.

ஐ. மு. கூ. வின் முதல் கட்ட கூட்டணியில் காதலர்களாய் காங்கிரசுடன் உறவாடிய கம்யூனிஸ்டுகள் சுட்டிக் காட்டிய வேலைத் திட்டம் தான் உணவுக்குப் பாதுகாப்பு, வேலைக்கு உத்தரவாதம் என்பது. இதை காதலர்கள் கழண்ட பின்னரும் அவர்கள் சொன்னதை இப்போது செய்ய முயற்சிகள். இதற்கும் எதிர்ப்புகள். இன்னொரு புறம் உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட பன்னாட்டு நிறுவன அனுமதிகள் முயற்சிகள், தோல்விகள்.

மொத்தத்தில் எல்லாவற்றிலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இடுப்பில் ஆடை கட்டவும் வலுவில்லாமல் வெட்கமறியாமல் நிர்வாணமாக தேசம்!

சோமாலியாவின் உணவுப் பஞ்சம் போலவே. நிர்வாக ஊட்டங் குறைந்த நோஞ்சான்களிடம் நாடே சிக்கித் தவிக்கிறது. இத்தனைக் குடியரசு கன்டபின்னரும். நாம் கன்ட பலன் இதுதான். வாழ்க நம் ஜனநாயகம்.

11:58 by iamvenkatesh · 0

hotlinksin

சமூகத்தை சீரழிக்கும் விகடனின் டிவி சீரியல்கள்...சமீபகாலமாக கொஞ்சம் விரும்பிப் பார்க்கும் டிவி சீரியல்கள் என்றால் அது விகடன் தயாரிக்கும் டிவி சீரியல்கள் என்றே சொல்லலாம். ஆனால் இப்போது அதுவும் தலைகீழாகிவிட்டது. காறித்துப்புகிற வகையில் டிவி சீரியல்களைத் தயாரிப்பதில் விகடனே முன்னிலை வகிக்கிறது. இவர்கள் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் தென்றல், திருமதி செல்வம், அழகி போன்ற சீரியல்கள். ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருவன் டாவக்கிறது. ஒருத்தி புருஷனை இன்னொருத்தி டாவடிப்பதையும் அழகாகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.திருமதி செல்வம் டிவி தொடரில் ஒரு காட்சி, கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறான், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாள். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்கள். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக உட்கார்ந்திருக்கிறாள். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாள். இப்படியாகப் போகிறது ஒரு காட்சி. இந்த டிவி தொடரின் காட்சிகள் ஏற்கனவே உழுத்துப் போயிருக்கும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

தென்றல் என்றொரு டிவி தொடர். அதில், கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் தொடரின் இயக்குநர்.

இது போன்றுதான் பெரும்பாலான டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் இருக்கின்றன. இந்த தொடர்களை இயக்கும் இயக்குநர்களை எதை வைத்து அடித்தால் திருந்துவார்கள்...?

00:56 by iamvenkatesh · 0

hotlinksin

வெறிபிடித்து அலையும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்
சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டாருன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இந்த சினிமா பிஆர்ஓ உதவியாளருக்கு நல்லாவே பொருந்தும். தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவர்தான் ஜாண்மகன். சொத்தை பி.ஆர்.ஓ.க்களே நாலு உதவியாளர்களை வைத்திருக்கும் போது ஐடி கம்பெனி டிப்டாப் ஆசாமி போன்று இருக்கும் இவரோ ஒரே ஒரு குமாரமான உதவியாளரை வைத்திருக்கிறார். தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கோ தலை கம்முன்னு இருக்க வாலோ போடாத ஆட்டம் எல்லாம் போடுது.

பத்திரிகையாளர் சந்திப்பை வைப்பதற்கு முன்பே, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாம் பி.ஆர்.ஓ.விடம் நாலு பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டாலே போதும் என்று சொல்லி விடுகிறார்கள். எதற்கு செலவு செய்து அப்படி ஒரு சந்திப்பை நடத்துவானேன் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ எதையும் கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே மீடியாக்கள்தான். எனவே எல்லா மீடியாக்களையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்துவிடுவார்கள். இந்த முன்னணி பி.ஆர்.ஓ. பண்ணுவது எல்லாமே பெரிய நிறுவனங்களுக்கான படங்கள் என்பதால் பெரும்பாலான மீடியாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்கும்.

வருகிற பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை ஆட்டையப் போட்டுவிடுகிறாராம் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர். ஏதோ ஆசைப்பட்டு பண்ணுறான்பா... விட்டுரலாம் என்று நினைத்தால் இவர் பத்திரிகையாளர்களை சரிவர மதிப்பதே இல்லை. பத்திரிகையாளர்களை வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்... என்று இவர் மீது குற்றம் வாசிக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.

பெரிய பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள் வந்துவிட்டால் சாஷ்டாங்கமாக வணக்கம் சொல்லும் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர், நடுத்தரமான சிறிய பத்திரிகையாளர்கள் வந்தால் கண்டு கொள்வதே இல்லை. அதே போல பெரிய பத்திரிகை ஆட்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கோ, பத்திரிகையாளர் காட்சிக்கோ தொடர்ந்து அழைப்பு கொடுத்து அழைப்பாராம். அதுவே சிறிய பத்திரிகை என்றால் கண்டு கொள்வதே இல்லையாம்.

வழக்கு எண் 18/9 படத்தின் பத்திரிகையாளர் காட்சியிலும் இது போல சில மீடியாக்களிடம் ’படம் இருக்கு வந்தா வாங்க...’ என்று வேண்டா வெறுப்பாக அழைக்க அவர்கள் பத்திரிகையாளர் காட்சிக்கு போகாமல் படத்தைப் பற்றி எழுதாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். வர வர இவனுக்கு கொழுப்பு அதிகமாகிப் போச்சு... மதிக்கிறதே இல்லை என்று உள்ளூர அழுது புலம்பும் இவர்கள் வாலைப் பற்றி தலையிடம் புகார் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

வாலே இப்படி இருந்தா தலை எப்படி இருக்கும்..? யார் போன் செய்தாலும் எடுக்கவே மாட்டாராம் இந்த தலை. (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குப்பா போனு. பேசாம தலையச் சுத்தி தூர எறியலாம்ல...) அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படித்தான் புகார் வாசிப்பதாம்...? வெலவெலத்துப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தயாரிப்பாளர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும் இவர்களே வேண்டிய மீடியாக்களை மட்டும் கூப்பிடுகிறார்கள். பி.ஆர்.ஓ. 100 பத்திரிகையாளர்களை கூப்பிட சொன்னால் உதவியாளர் வெறும் 50 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கிறாராம். மற்றவர்களை கொஞ்சம் கொஞ்சம் ஓரம் கட்டி விடுகிறார்கள் என்று எக்கச்சக்கமாகக் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.

வால் இப்படியே ஓவரா ஆட்டம் போட்டா எப்படி அதன் கொட்டத்தை அடக்குறதுன்னு தீவிரமாக யோசிச்சுக்கிட்டு இருக்கிறார்களாம் இந்த பத்திரிகையாளர்கள். இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

00:29 by iamvenkatesh · 0

hotlinksin

வழக்கு எண் 18/9 விட ‘ராட்டினம்’ நல்ல படமா?அறிமுக இயக்குநர் தங்கசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ராட்டினம். இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லகுபரன். பேஸ்புக்கில் இவரை கண்டெடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் இந்த ஆண்டின் காதல் படங்களில் மிகவும் சிறந்த படமாக அமையும் என்று சொல்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராட்டினம்.

02:39 by iamvenkatesh · 0

hotlinksin

மசாஜ் பாதி... மஜாய் மீதி... - கிறங்க வைக்கும் பாண்டிச்சேரிபாண்டிச்சேரி என்றாலே பாட்டில் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்த வி­யத்தில் பக்குவப் பட்ட பலருக்கும் பலான இடங்கள் தான் நினைவுக்கு வருகிறதாம். பாண்டிச்சேரி அருகில் அந்த அளவுக்கு, மலிவு விலையில் மதுவோடு. சிறிதளவு தூரத்தில் தமிழக எல்லையில் மதுவும் மாதுவும் கிடைக்கிற காரணத்தினால், இளைஞர்கள் கூட்டம் ஈக்களாய் மொய்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிற போது வேதனையாகத்தான் இருக்கிறது நமக்கு.

கண்களை பறித்து காந்தமாய் இழுக்கச் செய்யும் அளவுக்கு அழகுடைய பெண்கள் பலரும் இந்த வேலையில் இறங்கி இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், சும்மா ஜில்னு சுன்டி இழுக்க வைக்கிற இளசுகள், அதுவும் கேரள கிளிகள், ஆந்திரா ஆன்டிகள், கர்நாடகா கட்டழகிகள் என இவர்கள் கையால் மசாஜ்  பன்னிக்கனும் என்றால் எவருக்குத்தான் ஆசை வராது? அதனால் தான் ஆயுர்வேதிக் என்கிற பெயரில் இந்த அசிங்கத்தை அரங்ககேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரே ஆள் மூன்று இடங்களில் நடத்துகிறார் என்றால், எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இதில் மிக மிக வெட்க கேடான செய்தி என்னவென்றால், மாதா மாதம் 25,000 ரூ மாமூலாக கோட்டக்குப்பம் போலிசார் பெற்றுக் கொள்வதுதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்மட்டும் இல்லாமல் இந்த ஈனதனம் நடத்திவரும் உரிமையாளரே ஒப்புகொள்கிறார் கோட்டக் குப்பத்திலுள்ள ஆரோக்கியா ஆயுர்வேதிக், குயிலா பாளையம், ஆரோவில், பெரிய முதலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி என இவர்களின் எந்த சென்டருக்கு சென்றாலும் எடுத்த வேகத்தில் 1500 ரூ செலுத்தி விட வேண்டுமாம். ஆளுக்கு ஏத்த விலை என்கிற ரீதியில் தேர்ந்தெடுத்து இதமாக தேகத்தை வருடிக் கொடுக்கும் அந்த இளசுகள், அங்கே... இங்கே... என தடவி, வருடி, கிள்ளி சூடேற்றி கண்கள் சொருக்கும் நிலைக்கு போகும் நேரத்தில் சமயம் பார்த்து சேட்டையை துவங்கி விடுகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், ரெகுலர் வாடிக்கையாளர்கள் கசந்து போய் விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மட்டும் புதுசு புதுசு ஆளை மாற்றிக்கொள்கிறார்களாம்.

செய்தியை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட சென்டருக்கு போன் செய்து, ஹலோ.. நான் ரெகுலர் கஸ்டமர் பேசுறேன்... புதுசா எதுவும் இல்லையா? என்று கேட்டதற்கு, கேரளா பீஸ் மூனு புதுசா இருக்கு... உடனே வாங்க என்றார், எதிர்முனையில் பேசிய அந்த பெண்மனி. மேலும், ரேட் எப்படி? என்று துருவ ... அதெல்லாம் ஆள பார்த்து பேசிக்கலாம் என்று முடித்துக்கொண்டார். இதெல்லாம் நம்மிடம் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக இருந்தாலும், இன்னும் சந்தேகம் தீராமல் நண்பர் ஒருவரிடம் போன் செய்து இதுபற்றி கேட்டோம். நீங்க சொல்றதெல்லாம் அத்தனையும் உண்மைதாங்க... நேற்று கூட எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மசாஜ் பண்ணிக்க போய் இருக்கார். அப்படி இப்படின்னு நல்லாத்தான் போயிட்டு இருந்துருக்கு. திடீரென கையை அங்க விட்டிருச்சாம் அந்த பொண்ணு. அலறி அடிச்சு ஓடி வந்திருக்கார் நம்ம ஆளு என்ற அவர் கூட ஒரு பத்திரிக்கை நிருபர் என்கிற போது, வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை என்று தான் எண்ண தோன்றுகிறது. இந்த ஒரு இடத்திலேயே இப்படி என்றால், மற்ற மற்ற இடங்களில் எப்படி இருக்கும்? என்பதுதான் நம் கேள்வி. 

- கே.எஸ். நாராயணன்.

மலையாளப் பெண்கள் பற்றி குஷ்புவின் கருத்து?புதிய பரபரப்புத் தகவல்


01:21 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் துப்பாக்கிக்கு வந்த தலைவலி!
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த நேரத்தில் துப்பாக்கி படத்திற்கு தலைவலி தரும் விதத்தில் களம் இறங்கியிருக்கிறது கள்ளத்துப்பாக்கி என்னும் படம். இந்த படம் 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் உதவியாளரான ரவிதேவன் என்பவரால் துவங்கப்பட்டது. நெடு நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் இப்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இரு படங்களின் போஸ்டர்களும் சென்னை நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. இரு படக்குழுவினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘துப்பாக்கி படத்தின் போஸ்டர்களை எங்கள் கள்ளத்துப்பாக்கி படத்தின் போஸ்டர் மீது ஒட்டி மறைக்கிறார்கள்...’ என்பதை முதல் பிரச்சினையாக துவங்கியிருக்கும் ரவிதேவன் ‘விஜய்யின் துப்பாக்கி படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும்’ என்று இப்போது போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருக்கிறார்.
அடுத்த என்ட்ரீ அனுராதா!
திரிஷாவைத் திருப்திப்படுத்த தமன்னா நீக்கம்
போட்டோ கிராபரை உதைத்த நடிகை!
'நித்தி'கொடுத்த கலக்கல் பிரசாதம்!
ஓவியாவால் காப்பாற்றப்பட்ட சுந்தர்.சி!

01:23 by iamvenkatesh · 0

hotlinksin

ஆபாச படத்தில் நடித்தேனா...? அதிர்ச்சியில் நடிகை பூஜா
ஆபாச படத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார் என கன்னட பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த பூஜா அந்த பத்திரிகையின் மீது கடுங்கோபத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பூஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நான் கடவுள் படத்திற்குப் பிறகு நான் இலங்கையிலேயே செட்டில் ஆகிவிட்டேன். இந்த சமயத்தில் கன்னட பத்திரிகை ஒன்று நான் ஆபாச படத்தில் நடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. அந்த பத்திரிகை மீது இப்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். என் மீது பழி சுமத்தியவர்களை ஒரு போதும் சும்மா விடமாட்டேன்...’ என்று ஆக்ரோஷத்துடன் தெரிவித்திருக்கிறார்.பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
01:44 by iamvenkatesh · 0

hotlinksin

பத்திரிகையாளர்களைத் ஓட ஓட துரத்தியடிக்கும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்


சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டாருன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இந்த சினிமா பிஆர்ஓ உதவியாளருக்கு நல்லாவே பொருந்தும். தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவர்தான் ஜாண்மகன். சொத்தை பி.ஆர்.ஓ.க்களே நாலு உதவியாளர்களை வைத்திருக்கும் போது ஐடி கம்பெனி டிப்டாப் ஆசாமி போன்று இருக்கும் இவரோ ஒரே ஒரு குமாரமான உதவியாளரை வைத்திருக்கிறார். தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கோ தலை கம்முன்னு இருக்க வாலோ போடாத ஆட்டம் எல்லாம் போடுது.

பத்திரிகையாளர் சந்திப்பை வைப்பதற்கு முன்பே, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாம் பி.ஆர்.ஓ.விடம் நாலு பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டாலே போதும் என்று சொல்லி விடுகிறார்கள். எதற்கு செலவு செய்து அப்படி ஒரு சந்திப்பை நடத்துவானேன் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ எதையும் கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே மீடியாக்கள்தான். எனவே எல்லா மீடியாக்களையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்துவிடுவார்கள். இந்த முன்னணி பி.ஆர்.ஓ. பண்ணுவது எல்லாமே பெரிய நிறுவனங்களுக்கான படங்கள் என்பதால் பெரும்பாலான மீடியாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்கும்.

வருகிற பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை ஆட்டையப் போட்டுவிடுகிறாராம் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர். ஏதோ ஆசைப்பட்டு பண்ணுறான்பா... விட்டுரலாம் என்று நினைத்தால் இவர் பத்திரிகையாளர்களை சரிவர மதிப்பதே இல்லை. பத்திரிகையாளர்களை வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்... என்று இவர் மீது குற்றம் வாசிக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.

பெரிய பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள் வந்துவிட்டால் சாஷ்டாங்கமாக வணக்கம் சொல்லும் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர், நடுத்தரமான சிறிய பத்திரிகையாளர்கள் வந்தால் கண்டு கொள்வதே இல்லை. அதே போல பெரிய பத்திரிகை ஆட்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கோ, பத்திரிகையாளர் காட்சிக்கோ தொடர்ந்து அழைப்பு கொடுத்து அழைப்பாராம். அதுவே சிறிய பத்திரிகை என்றால் கண்டு கொள்வதே இல்லையாம்.

வழக்கு எண் 18/9 படத்தின் பத்திரிகையாளர் காட்சியிலும் இது போல சில மீடியாக்களிடம் ’படம் இருக்கு வந்தா வாங்க...’ என்று வேண்டா வெறுப்பாக அழைக்க அவர்கள் பத்திரிகையாளர் காட்சிக்கு போகாமல் படத்தைப் பற்றி எழுதாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். வர வர இவனுக்கு கொழுப்பு அதிகமாகிப் போச்சு... மதிக்கிறதே இல்லை என்று உள்ளூர அழுது புலம்பும் இவர்கள் வாலைப் பற்றி தலையிடம் புகார் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

வாலே இப்படி இருந்தா தலை எப்படி இருக்கும்..? யார் போன் செய்தாலும் எடுக்கவே மாட்டாராம் இந்த தலை. (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குப்பா போனு. பேசாம தலையச் சுத்தி தூர எறியலாம்ல...) அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படித்தான் புகார் வாசிப்பதாம்...? வெலவெலத்துப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தயாரிப்பாளர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும் இவர்களே வேண்டிய மீடியாக்களை மட்டும் கூப்பிடுகிறார்கள். பி.ஆர்.ஓ. 100 பத்திரிகையாளர்களை கூப்பிட சொன்னால் உதவியாளர் வெறும் 50 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கிறாராம். மற்றவர்களை கொஞ்சம் கொஞ்சம் ஓரம் கட்டி விடுகிறார்கள் என்று எக்கச்சக்கமாகக் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.

வால் இப்படியே ஓவரா ஆட்டம் போட்டா எப்படி அதன் கொட்டத்தை அடக்குறதுன்னு தீவிரமாக யோசிச்சுக்கிட்டு இருக்கிறார்களாம் இந்த பத்திரிகையாளர்கள். இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.


பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.


01:32 by iamvenkatesh · 0

hotlinksin