அட்டு நடிகருக்கு கிடைத்த லட்டு ஹீரோயின்
அட்டு நடிகருக்கு கிடைத்த லட்டு ஹீரோயினைப் பார்த்தீங்களா...?

13:06 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கர் இயக்கும் படம்
கேபிள் சங்கர் எழுதிய சினிமா என் சினிமா புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பார்க்கணும் போல இருக்கு படங்களின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் நாசர் புத்தகத்தை வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் பேசியதுதான் ஹைலைட். “நான் இப்போது “இருவர் உள்ளம்” என்னும் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதன் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் அடுத்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறேன். அந்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா...? கேபிள் சங்கர்தான் அந்த படத்தை இயக்கப் போகிறார். அவர் என்னிடம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஓ.கே. சொல்லிவிட்டேன்...” என்று தயாரிப்பாளர் தமது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு கேபிள்சங்கரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.

01:32 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’ புத்தக வெளியீடு படங்கள்
21:21 by iamvenkatesh · 0

hotlinksin

‘மல்லிகை’ நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் ‘மல்லிகை’ நடிகை. சமீபகாலமாக இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. புதிது புதிதாக பல நடிகைகள் அவரது சொந்த ஊரிலிருந்தே களம் இறக்கப்பட மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டுவிட்டார் மல்லிகை. தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் எல்லாம் வாய்ப்பும் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால் போனில் இவரது அழைப்பு வந்துவிட்டாலே தப்பித்தால் போதும் என்று ஓடுகிறார்களாம் இயக்குநர்கள். பொறுத்திருந்து பார்த்தவர், இப்போது ஒத்தைப் பாடலுக்கு குத்தாட்டம் போடுவது என்று முடிவெடுத்துவிட்டாராம். பொருளாதார சிக்கல்களை சமாளிக்க தான் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதாக தன் காதலரிடம் சொல்ல அவரும் ‘ஓ.கே. தாராளமாக ஆடு…’ என்று சொல்லிவிட்டாராம். விரைவில் கச்சையுடன் களம் இறங்கவிருக்கிறார் மல்லிகை.

08:20 by iamvenkatesh · 0

hotlinksin

இளம் இயக்குநர்களை வியக்க வைத்த ஆன்டி நடிகை!
படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் குணசித்திர வேடத்தில் நடிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். நடித்தோமா எஸ்கேப் ஆனோமா என்றுதானே இருப்பார்கள்? ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். பல படங்களில் அழகான அம்மாவாக நடித்தவர். யுத்தம் செய் படத்துக்காக மொட்டையும் போட்டு நடித்தார். லஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஆரோகணம். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த், மிஸ்கின் ஆகியோர் படத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். ‘லஷ்மியால இப்படியும் படம் எடுக்க முடியுமா?’ என்று வியந்து போய் இரண்டுபேருமே ஆரோகணத்தை இயக்கிய ஆன்டி நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்
நடிகை ரேஷ்மா, சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல் சும்மாவே இருந்தார். சுவராஞ்சலி என்னும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு இவரை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் செய்தார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தனது சம்பளப் பாக்கியைத் தருமாறு ரேஷ்மா தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். பணம் கேட்டதும் கடுப்பான தயாரிப்பாளர் ரேஷ்மாவை ஆபாச வார்த்தைகளால் அசிங்கமாக திட்டியிருக்கிறார். இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.

11:38 by iamvenkatesh · 0

hotlinksin

பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய இயக்குநர் பாலா
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை குத்தி வலுக்கட்டாயமாக பஞ்சராக்கினார் கோபிநாத். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட அனுதாபங்களும், கோபிநாத்துக்கு கண்டனங்களும் வந்து குவிந்தன. இது ஒருபுறமிருக்க இப்போது இயக்குநர் பாலா பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பரதேசி என்னும் படத்தை பிஸியாக இயக்கிவருகிறார் பாலா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் எக்குதப்பான ஒரு கேரக்டர். இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்த பாலாவிடம் யாரோ இந்த கேரக்டரில் பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாரையே அந்த கேரக்டருக்கு கமிட் செய்திருக்கிறார் பாலா.

சந்தோஷமாக தனது பரிவாங்களுடனே படப்பிடிப்புக்கு போய் இறங்கியிருக்கிறார் பவர் ஸ்டார். பவரின் இந்த மாஸ் கிரியேட்டிங் சீன்ஸ் பாலாவுக்கு பிடிக்காது என்பதால் பவர் ஸ்டாரை பக்கத்தில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஒருவரைத் திட்டுவது போல பவர் ஸ்டாரை சாடை மாடையாக திட்டித் தீர்த்துவிட்டாராம். பாலா திட்ட திட்ட பஞ்சரான பவர் ஸ்டார், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

21:22 by iamvenkatesh · 0

hotlinksin

ஹன்ஸிகாவுக்கு ஆப்பு வைத்தது யார்?சமீபத்தில்தான் பிஎம்டபிள்யு கார் வாங்கியிருந்தார் ஹன்ஸிகா. வாங்கினவர் கார்ல வந்தோமா போனோமா என்று இருக்கணும். அதை விட்டுவிட்டு கார் வாங்கிய விஷயத்தை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்திருக்கிறார். இந்த செய்தி அரசல் புரசலாக வருமான வரித்துறையினரையும் எட்டியிருக்கிறது. கும்பலாக கிளம்பி வந்துவிட்டார்கள் அவர்கள். 60 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கிறார் என்றால் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளிவிட்டார்களாம். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். சொந்தக் காசிலேயே சூனியம் வைத்தது போல் ஆகிவிட்டதே என்ற வேதனையில் இருக்கிறாராம் ஹன்ஸிகா.

09:07 by iamvenkatesh · 0

hotlinksin

மணிரத்னத்தை கடுப்பாக்கிய இளம் நடிகை
மணிரத்னம் இயக்கிவரும் படம் ‘கடல்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா. படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார் சமந்தா. இதற்கான காரணத்தை விசாரித்த போது, சமந்தா ஏற்கனவே பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நிலையில் கடல் படத்திற்கும் அதே தேதிகளை பிரித்துக் கொடுத்திருக்கிறார். இதனால் கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்து கொண்டேயிருந்திருக்கின்றன. இதை சரி செய்துவிடுவார் என்று மணி எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் கால்ஷீட் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே போகவே, செமையாக கடுப்பாகியிருக்கிறார் மணிரத்னம். இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மணிரத்னம் அதிரடியாக சமந்தாவுக்கு கெட்அவுட்டும் குட்பையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்.

23:31 by iamvenkatesh · 0

hotlinksin

இவளுங்க எல்லாம் நாசமாத்தான் போவளுங்க...ஒரு மெல்லிய காதல் என்னுள் எட்டிப் பார்த்து முளையிலேயே கருகிப் போனது.

ஏற்கனவே ஒரு காதல் என்னுள் உருவாகி அது முழுவதும் கருகிப் போனதனால் ஏற்பட்ட என் மனதின் கவலைகள் மறக்கப்பட கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிப் போயின. மீண்டும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு என்னுள் ஒரு காதல் துளிர்விட்டது.

என் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்தேன். அப்போது குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பேச்சைத்தான் எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார்கள் என் அம்மாவும் சகோதரியும். தெரிந்த பெண்தான் அவள். என் அம்மாவிடம் அவள், ‘நான் இன்ஜினியரிங் 3 ஆம் வருடம் படிக்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடிஞ்சிரும்... அப்புறம் என்னை உங்க மகனுக்கு கட்டிக் கொடுங்க’ என்று சொல்லியிருக்கிறாள். என் சகோதரியிடம், ‘உங்க தம்பிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்குங்க...’ என்று சொல்லியிருக்கிறாள். இப்போது நான் ஊருக்கு போன போது என் சகோதரிக்கு போன் செய்த அவள் என்னிடமும் பேசினாள். ‘உங்களை ரொம்ப நல்லா பாத்துப்பேன்...’ என்று அவள் சந்தோஷமாய் சொன்னாள். அதைக் கேட்ட நேரத்தில் இருந்தே என் மனதில் சந்தோஷ பட்டாம்பூச்சிகள் சிறகு முளைத்து பறந்தன. ஒவ்வொரு கணத்தையும் ஒருயுகமாக நான் உணர்ந்தேன். அவளிடம் நான் பேசமாட்டேனா... என ஏங்கினேன். என் அம்மாவும் சகோதரியும் அவளைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டே இருக்க என்மனதில் அவள் இன்னும் அடி ஆழத்தில் இறங்கினாள். என் மனைவியாகவே அவளை நினைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் தூங்கினேன்.

என் சகோதரியின் மொபைலில் இருந்து அவள் எண்ணை தேடி எடுத்து அவளிடம் பேசினேன். ‘சொல்லுங்க...’ என்று அன்பாக துவங்கினாள் பேச்சை. கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவளிடம் பேசிய போதும் அது அரை நிமிடமாகவே எனக்கு தோன்றியது. அவள் அப்போது என் வேலை, அவள் படிப்பு எல்லாவற்றையும் பற்றி நிறைய பேசினாள். நான் படிக்கிற படிப்பு பொண்ணுதான் வேணும்னு சொன்னீங்களாமே... நான் அந்த படிப்புதான் படிக்கிறேன்... என்ற போது அவள் எனக்கு உதவியாக இருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.

அவள் வேறு சாதி நாங்கள் வேறு சாதி என்று வீட்டில் சொன்னார்கள். ஆனால், ‘எந்த சாதியாக இருந்தால் என்ன... எல்லாரும் மனுஷங்கதானே...’ என்று தத்துவத்தைப் பேசினேன் அவளுக்கு ஆதரவாக. அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்.

இன்று அவளை சந்திப்பது என முடிவு செய்தேன். அதற்காக கிளம்பினேன். அவள் இருக்குமிடம் போவதற்கு இரண்டு பேருந்துகளைப் பிடித்துப் போக வேண்டும். அவள் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். பிஸியாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு மேல் பிஸி. ஒருவழியாக அவளை தொடர்பு கொண்ட போது, ‘தன் தோழி ஒருத்தி ஒரு பையனை லவ்வுகிறாள் என்றும்... அந்த காதல் அவள் வீட்டுக்கு தெரிந்து விட்டது. எனவே அதிலிருந்து தப்பிக்க தன் தோழியுடன் சேர்ந்து ஐடியா பண்ணுகிறோம்...’ என்று சொன்னாள். எனக்கு அதை நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. பேருந்தைப் பிடித்து முதல் பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

அதன் பிறகு அவள் மொபைலுக்கு கால் பண்ணினேன். எடுக்கவில்லை. மதிய நேரமாயிற்றே சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைத்தேன். மீண்டும் சிறிது நேரம் கழித்து மொபைலுக்கு முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது பார்த்து ஒரு மெசேஜ் வந்தது. ‘சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்... என்ன விஷயம்... சொல்லுங்க அண்ணா...’ என்று ஒரு மெசேஜ் வந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘என்னது... அண்ணாவா...?’ அதிர்ச்சியில் உடனே போனைப் போட்டேன்.

‘என்னம்மா எப்படி இருக்கே... அண்ணான்னு மெசேஜ் அனுப்பியிருக்கே...’ என்றேன் அதிர்ச்சியுடனே. ‘ஆமா... வயசுல பெரியவங்களை அண்ணான்னு கூப்பிடணும்... இல்ல... சார்ன்னு கூப்பிடணும்... நீங்க ரொம்ப நல்லா பேசுறதால உங்களை அண்ணான்னு கூப்பிடுறேன்... சொல்லுங்க அண்ணா’ என்று சொன்னாள். என் அதிர்ச்சி இன்னும் அதிகமாக அப்படியே கீழே சரிந்து விடுவேனோ என்று பயந்து போனேன். அவள் தந்த வேதனையைத் தாங்க முடியாமல் போனை கட் செய்தேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன். ‘இதுக்கு முன்னால யாருகிட்டயாவது இப்படி உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கியா...?’ என்று கேட்டேன். ‘இல்லை ஏன் கேக்கீறீங்க...’ என்றாள். ‘நீ என்கிட்ட என் அம்மா சகோரிகிட்ட பேசினதை எல்லாம் உண்மைன்னு நெனச்சி நம்பிட்டேன்... என் மனசை ஹர்ட் பண்ணின மாதிரி வேற யாருகிட்டயும் இப்படி பேசி அவங்க மனசை இனிமே விளையாட்டுக்குக்கூட ஹர்ட் பண்ணிடாத...’ என்றேன். ‘எக்ஸ்ட்ரீம்லி சாரி...’ என்றாள்.

இதற்கு மேலும் அவளைப் போய் பார்ப்பது சரி என்று என் மனதுக்கு தோன்றவில்லை. ஊருக்கு செல்லும் பேருந்தை தேடிப்பிடித்து உட்கார்ந்தேன்.

யார் இந்த பெண்...? ஏன் என் வாழ்வில் வந்தாள்... ஓரிரு நாட்களிலேயே என் மனதை முழுவதுமாக வசீகரித்தவள் இப்படி விளையாட்டுக்காய் சொல்வாள் என்று என் கனவில் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஏற்கனவே முதல் காதலில் என் உறவுக்கார பெண் 6 மாதங்கள் பழகிய பின்பு என்னை தூக்கி எறிந்துவிட்டுப் போனாள். இதோ அடுத்தவள் ஆறு நாட்களில் விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். என் வாழ்வில் நான் சந்தித்த என் மனதைத் தொலைத்த பெண்கள் எல்லாருமே என் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திச் செல்கிறார்கள். இதோ இவள் இப்போது பெரும் வேதனையை ஏற்படுத்திச் செல்கிறாள். அடுத்தவள் எப்போது வருவாளோ என் இதயத்தைத் திருடி அதை ஈட்டியால் குத்தி ரத்தத்தைக் குடிப்பதற்கு, நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.

மினி பஸ் உறுமிக் கொண்டு கிளம்பத் தயாரானது. டிரைவர் ஸ்பீக்கரில் பாட்டைப் போட்டார். ‘பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே... நம்பி விடாதே...’ என்று பாடியது பாடல்.

15:52 by iamvenkatesh · 2

hotlinksin

என்னை விட்ருங்க... - இயக்குநரிடம் கெஞ்சிய அசின்
மாதவன்-ஆர்யா-சமீராரெட்டி-அமலாபால் ஆகியோரை வைத்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படம் இங்கு ஓடிச்சோ ஓடலையோ தெரியலை... ஆனால் இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி. இதில் அமலாபால் நடித்த வேடத்திற்கு சமீராரெட்டியை புக் பண்ணிவிட்டார் லிங்கு. சமீராரெட்டி தமிழில் நடித்த அக்கா கேரக்டரில் நடிக்க அசினிடம் கேட்டிருக்கிறார்.

முதலில் லிங்குசாமி படம் என்றதும் ஒத்துக் கொண்டுள்ளார் அசின். பின்னர் சமீராரெட்டிக்கு அக்காவாக நடிக்கும் கேரக்டர் என்பது தெரிந்ததும், ‘இரண்டு ஹீரோயின் கேரக்டரில் நான் நடிப்பதாக இல்லை... என்னை விட்ருங்க... வேறு நடிகையை ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்...’ என்று லிங்குசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாராம் அசின். இதுதான் நல்ல வாய்ப்பு என்று நினைத்த அமலாபால், ‘தமிழில் நடித்தது போலவே என்னையும், சமீராவையும் இந்தியிலும் நடிக்க வையுங்கள்’ என்று லிங்குசாமியிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம் அமலாபால்.

23:49 by iamvenkatesh · 0

hotlinksin

தனியார் பள்ளிகளின் நாறப் பொழப்பு...
தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் பலத்த போட்டிகள் காரணமாக ஒவ்வொரு பள்ளியும் ஏராளமான விளம்பரங்களை செய்து வருகிறது. சில பள்ளிகள் தங்கள் விளம்பரங்களில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களையும் இடம் பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த விளம்பரம். நீங்களும் பார்த்து காறித் துப்பிட்டு போங்க சாமிகளா..


18:39 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த நடிகை பீல் பண்ணியிருப்பாரா? மாட்டாரா?படத்தைப் பாருங்க... க்யூட்டான நடிகை... அட்டு மாதிரி ஒரு நடிகர்... இந்த மாதிரி ஒரு அப்பாடக்கர் நடிகர் கூட ஜோடியாக நடிப்பதற்கு கூட நடிக்கிற நடிகைகள் பீல் பண்ணுவார்களா மாட்டார்களா? ஆனா... என்னால சகிக்க முடியலப்பா...

02:23 by iamvenkatesh · 0

hotlinksin

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த போது, கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? என்ற தலைப்பில் வெளியாகியிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன். 


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.


2. மனது புண்படும்படி பேசக்கூடாது.


3. கோபப்படக்கூடாது.


4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.


5. பலர் முன் திட்டக்கூடாது.


6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.


7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.


8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.


9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.


10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.


11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.


12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.


13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.


14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.


15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.


16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.


17. ஒளிவு, மறைவு கூடாது.


18. மனைவியை நம்ப வேண்டும்.


19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.


20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.


21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.


22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.


23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.


24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.


25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.


26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.


27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.


28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.


29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.


30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.


31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.


32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.


33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.


34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.


36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.


37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்  

02:10 by iamvenkatesh · 0

hotlinksin

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்
சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன். அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில் அப்பாவுக்கு உதவியா பல நேரங்களில் நண்பர்களுடன் வெட்டியா ஊரை சுத்தி வருகிறான். ஆத்மியாவும் சிவகார்த்திகேயனும் அன்புடன் பழகுகிறார்கள். திடீரென ஒரு வீச்சரிவா மீசை மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஆத்மியாவை நிச்சயம் பண்ணுகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சிவா துடிதுடித்துப் போகிறான். தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்கிறான். தனக்கு நிச்சயம் ஆனதை காரணம் காட்டி விலகிப் போகிறாள் அவள். அவளையே நினைத்து குடி மயக்கத்தில் புலம்பும் சிவாவை ஆத்மியாவுடன் சேர்த்து வைக்க முடிவு செய்யும் நண்பர்கள் ஆத்மியாவை மயக்கமடையச் செய்து இருவரையும் கடத்திக் கொண்டு போகிறார்கள். கண்விழித்த ஆத்மியாவோ தனக்கு சிவா மீது காதல் இல்லை என்கிறாள். அவனோ அவள் தனக்கு வேண்டாம்... என்கிறான். இந்நிலையில் ஆத்மியா வீட்டில் அவர்களை வலைவீசி தேடுகிறார்கள். தொடர்ந்து வரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

மெரினா படத்திற்கு பிறகு முழு நீள கதாநாயகனாக வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் இவரை கலங்க விட்டிருக்கிறார்கள். அடுத்த பாதியில் இவர் களைகட்ட வைக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மியா. பெரும்பாலும் சேலைகளிலேயே வருவதால் அம்மனாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் கேர் பண்ணாத இவருடைய நடிப்பு அடுத்த பாதியில்  ரொம்பவே ஸ்கோர் பண்ணுகிறார் ஆத்மியா.

சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களாக வருகிறார்கள் சூரி, சிங்கம்புலி வகையறா. சூரியும் சிங்கம் புலியும் கம்பெனி போட்டு அடிக்கிற லூட்டியில் தியேட்டர் அதிர்கிறது. இடைவேளையில் என்ட்ரி கொடுக்கும் சாம்சும் அவர் நண்பரும் வந்த பிறகு படம் விறுவிறுப்பாகவும் செம காமடியாகவும் நகர்கிறது. ஆத்மியாவையும் சிவகார்த்திகேயனையும் ஆத்மியாவின் அண்ணன் டீம் தேடும் போது சிங்கம் புலியையும் சூரியையும் அழைத்துக் கொண்டே போகும் இடமெல்லாம் செல்கிறார்கள். அவர்களிடம் வம்படியாக மாட்டிக் கொள்ளும் சாம்ஸ்... இந்த காட்சிகள் அரை நிமிடங்களுக்கு தொடர்ந்து வரும் காமெடியாக இருக்கிறது. டிங் டிங்... குத்துப்பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.

படத்தை இயக்கியிருக்கிறார் எழில். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எழில் இந்தப் படத்தின் மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார். காதல், காமெடி, கலாட்டா என வழக்கமான ஸ்டைல் கதை என்றாலும் இடைவேளை ட்விஸ்ட், மாறுபட்ட திரைக்கதை யுக்தியில் படத்தை வேறு பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் எழில்.

01:55 by iamvenkatesh · 0

hotlinksin

குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!
நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை பற்றி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் சட்டையை வீசும் விதமாக தன் உள்ளத்தில் தோன்றியதை பகிர்ந்து இருந்தார். அதை உங்கள் பார்வைக்காக அறியத் தருகிறேன். 

Saravanan Poongavanam பூ.கொ.சரவணன்

நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை மனதை என்னவோ செய்கிறது !அதில் அவர்களின் ஆசிரியர்கள் உடன் தங்கி இருப்பத்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்கிற மாதிரியான தோற்றம் ஏற்ப்பட்டு இருக்கிறது !ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா ?இதன் வரலாறு என்ன தெரியுமா ?முதன்முதலில் வெறும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் தொடங்குகிறது இதற்கான விதை !பதினோராம் வகுப்பை அரக்கபரக்க முடித்து விட்டு பிளஸ் டூ வகுப்பை ஆரம்பித்து அதில் பக்கம் பக்கமாக வரிக்கு வரி தேர்வெழுத வைத்து அதை மீண்டும் நான்கு முதல் ஐந்து திருப்புதல் தேர்வுகள் வைத்து ,நான்கு மணிநேரம் எழுத வேண்டிய வினாத்தாளை மூன்று மணி நேரத்தில் எழுத வைப்பது ,விடுமுறைகள் தராமல் இருப்பது,விளையாட விடாமல் இருப்பது என பல்வேறு வகையான கூறுகளோடு உச்சபட்சமாக அரசு நிர்ணயிக்கும் விலையை விட அதிகமான கட்டண வசூல் செய்தல் இவை அனைத்தையும் செய்து பப்ளிக்குக்கு பிள்ளைகளை அனுப்பி அவர்களை மாநில இடம் பெற்றவர்களாக ஆக்கி விட்டதாக கொக்கரிக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது !ரேசில் அரை நாள் முன்னமே ஓடி ஜெயிக்கிறார்கள் என்பது முதல் வருத்தம் !அடுத்தது இதைப்பற்றி பேச வேண்டிய பல படைப்பாளிகள் பேசுவதில்லை !இப்படிப்பட்ட முறையில் பிள்ளைகளை மிகப்பெரிய மன மட்டும் உடல் ரீதியான மன அழுத்ததிற்கு ஆளாகும் சூழலை ,ஒரு மிகப்பெரும் பொருளாதார சுரண்டலை நடுத்தர வர்க்கத்தின் மீது செலுத்தும் பள்ளிகளின் செயலை கண்டிக்க வேண்டிய பிரபலமான பதிப்பாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் ,எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்,விமர்சகர்கள் ,படைப்பாளிகள் -பல பேர் இந்த பள்ளிகளின் விழாக்களில் பணம் வாங்கிக்கொண்டோ அல்லது விருது பெற்றோ கலந்துகொள்வது வருத்தத்தை தருகிறது !ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பேசவே எழுதவோ இவர்கள் செய்வது இல்லை !தெரியாது எங்களுக்கு இதெல்லாம் என்றால் நல்ல நகைமுரண் தான் !இதைப்பற்றி தைரியமாக எழுதுங்கள் அய்யா !காரணம் இதோ வருகிற திங்கள் கிழமை ஒவ்வொரு பெற்றோரும் லட்சங்களை கட்டிக்கொண்டு கனவுகளோடு இந்தப்பள்ளிகளின் வாசலில் நிற்க நீங்கள் மறைமுக உதவி செய்து இருகிறீர்கள் !நல்ல வருவீங்க !

00:35 by iamvenkatesh · 0

hotlinksin

சென்சார் போர்டை அதிர்ச்சியடைய வைத்த படம்

நிதின்சத்யா- திஷாபாண்டே நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது மயங்கினேன் தயங்கினேன். பெண்கள் நல விடுதியில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.டி.வேந்தன். இப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், படத்தை பார்த்த அதிகாரிகள், அதிர்ந்தே போய்விட்டார்களாம். காரணம் பல இடங்களில் ஆபாச வார்த்தைகளும், ஆபாச வசனங்களும் படம் முழுக்க இருந்தனவாம். இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் காட்சிகளை கட் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதை கட் செய்து விட்டு மீண்டும் கொடுத்த பிறகே படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுத்ததாம் சென்சார் போர்டு.

01:14 by iamvenkatesh · 0

hotlinksin

கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க – பவர்ஸ்டார் சீனிவாசன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து கோபிநாத் பவர்ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் கோபிநாத். இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் எரிச்சலை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இன்னொருவர் பவர் ஸ்டாரை பார்த்து ‘சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் சினிமா எடுக்க நடிக்க வந்துவிட்டார்’ என்று பேசினார். கோபிநாத்தின் கேள்விகளும்… சிறப்பு விருந்தினரின் இந்த கமென்டும் பவர் ஸ்டாரை ரொம்பவே பாதித்திருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக ‘வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது…’ என்று அமைதியாகவே பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்ட போதிலும் பவர் ஸ்டாரின் மீது இருந்த மதிப்பை மேலும் அதிகரித்துவிட்டிருக்கிறது இந்த நீயா நானா நிகழ்ச்சி. இது குறித்து பவர் ஸ்டாரிடம் கேட்ட போது, ‘என்னை கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… இரவு நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று கூப்பிட்டிருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் பங்கு பெற போனேன். போன இடத்தில் என்னை அவமானப்படுத்தும் விதமாக கேள்விகளைக் கேட்டார் கோபிநாத். இன்னொருவர் நடிப்பு அறிவே இல்லாமல் நடிக்க வந்துவிட்டார் என்று பேசினார்… இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது… இது போன்று மற்றவர்களை அவமானப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் விட்டுவிட வேண்டும்…’ என்கிறார் பவர் ஸ்டார் கொஞ்சம் வருத்தம் கலந்த ஆதங்கத்துடன்.

23:46 by iamvenkatesh · 0

hotlinksin

பேச்சுலர்ஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போடும் பத்மப்ரியா
தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. எனினும் அவரால் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ முடியவில்லை. சமீபகாலமாக அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்தார். கடைசியாக மலையாளத்தில் பத்மப்ரியா நடித்த படம் பழசிராஜா. இந்தப் படத்திற்குப் பிறகு மலையாளத்திலும் சரியான வாய்ப்பு ஏதும் பத்மப்ரியாவுக்கு கிடைக்கவில்லை. இனிமேலும் இப்படியே இருக்க முடியாது என்று நினைத்தவர் இப்போது ஒற்றை பாடலுக்கு குத்தாட்டம் போடுவது என்று முடிவு செய்துள்ளார். பேச்சுலர்ஸ் பார்ட்டி என்ற தலைப்பில் உருவாகிவரும் படத்தில்தான் பத்மா குத்தாட்டத்தில் பட்டையக் கிளப்பப் போகிறாராம். இதைத் தொடர்ந்து ஒற்றை பாடலுக்கு ஆடும் வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பத்மப்ரியா.

01:45 by iamvenkatesh · 0

hotlinksin

கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!
வீட்டில் இணைய இணைப்பு இருந்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று இன்றும் பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பை வாங்கமலே இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டும்தானா கெட்டுப் போகிறார்கள். இண்டர்நெட்டில் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் சில அப்பாவி பெண்களும் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை கள்ளக்காதலை வளர்ப்பதில் மொபைல்போன் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால் அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது பேஸ்புக் இணையதளம். இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அடுக்கடுக்காக அரங்கேறி வருகின்றன. அதிலிருந்து பெண்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதற்காக ஒரேயடியாக பேஸ்புக் இணையதளத்தை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னும் சில காலங்களில் பேஸ்புக்கை தடை செய்யக் கோரி சில அவலக் குரல்கள் ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இணையதளத்தில் நேற்று ஒரு பெண் எம்.எல்.ஏ. தனது கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்துவிட்டது பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த எம்.எல்.ஏ.க்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இருந்த போதிலும் கணவரையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு பேஸ் புக் மூலம் அறிமுகமான ஒருவனுடன் ஓடிப் போய் திருமணமும் செய்து கொண்டாராம். தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய எந்த வித எண்ணமும் இல்லாமல் ஓடிப் போன அந்த பெண்ணை என்னவென்று சொல்வது. இது போன்ற பல ஓட்டங்களுக்கு பேஸ்புக் என்னும் இணையதளம் சமீபகாலமாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ் புக் இணையதளத்தை நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் எத்தனையோபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். கள்ளக் காதலை வளர்க்கவும் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பேஸ்புக்கை குறை சொல்ல முடியாது. அதை பயன்படுத்தும் அரைகுறைகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டி இருக்கிறது.

எது எப்படியோ, பேஸ்புக் இணையதளத்தை வீட்டிலும் அலுவலகத்திலும் தடை செய்தால்தான் சிலரது குடும்ப வாழ்வும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் போலிருக்கிறது.

01:20 by iamvenkatesh · 0

hotlinksin

நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்
நேற்றைய நீயா நானாவில், போலி கவுரவத்தை விரும்புகிறவர்கள் அதை விரும்பாதவர்கள் என இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரிடம் சில கேள்விகள் கேட்பதாக ஆரம்பித்த கோபிநாத் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டார். அதுவும் பவர் ஸ்டார் போலி கவுரவத்தை விரும்புகிறவர் என்கிற ரீதியில். நடுத்தர குடும்பத்தின் மக்களே போலி கவுரவத்திற்காக பல செயல்களைச் செய்து கொண்டிருக்கும் போது பவர் ஸ்டார் ஒரு சினிமா நடிகர் போலி கவுரவத்தை மெயின்டெயின் செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே. 

‘எந்த ஒரு பேட்டியிலும் சரி நீங்கள் ஏன் சீரியசாக இருப்பதில்லை... எல்லா விஷயங்களையும் ஏன் நீங்கள் காமெடியாக... சீரியஸ் இல்லாமல் எடுத்துக் கொள்கிறீர்கள்...?’ என்பதுதான் கோபிநாத் அவரிடம் தொடர்ந்து பல முறை கேட்ட கேள்வி. இதே கேள்வியை கோபிநாத் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘ஒருவர் எல்லா விஷயங்களையும் சீரியசாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா...? காமெடியாக எடுத்துக் கொள்ளக் கூடாதா...?’ என்னும் பதிலை திரும்ப கோபிநாத்தைப் பார்த்து வைத்தார். அதற்கு கோபிநாத்தோ உங்கள் நிஜ முகத்தை வெளிக் கொண்டு வருவதற்காகத்தான் நான் அப்படி திரும்ப திரும்ப கேட்டேன் என்றார்.

கோபிநாத் உண்மை முகத்தை கொண்டு வருகிறாரோ இல்லையோ தொடர்ந்து இதே கேள்வியை அப்படிக் கேட்பது ஒருவரை குற்றவாளி மனநிலையில் நிச்சயம் தள்ளிவிடும். அது மட்டுமின்றி வழக்கறிஞரைப் போன்று குறுக்கு கேள்வி கேட்பது கோபிநாத்துக்கு ஆதரவாக இருக்காமல் நிகழ்ச்சி மேலேயே வெறுப்பு வர வைத்துவிடும் வாய்ப்பு உள்ளது.

பவர் ஸ்டாரிடம் என்று இல்லை.. பேச வருபவர்களிடமும் சில நேரங்களில் இது போன்று கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடுவதும் உண்டு.

நல்ல வேளை கோபிநாத் கேட்ட கேள்விகளுக்கு உள்ளே கோபம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டே பதில் சொன்னார் பவர் ஸ்டார்.

00:56 by iamvenkatesh · 0

hotlinksin

மதுபானக்கடை – கதையே இல்லாத படம்மதுபானக்கடை படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன். புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள் போட்ட மதுபானக்கடை செட்டைப் பார்த்து நிறைய பேர் அங்கு மது வாங்க வந்திருக்கிறார்கள். அவர்கள் பாட்டில் கேட்ட போது படக்குழுவினரோ இது ‘படப்பிடிப்பு நடக்கிற இடம்…’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் நம்ப மறுத்துவிட்டார்களாம் அந்த பகுதி குடிமகன்கள். சில குடிமக்களோ மதுபானக்கடை பார் செட்டின் உள்ளே உட்கார்ந்து நன்றாக தண்ணி அடித்துவிட்டு போனார்களாம். நிஜ டாஸ்மாக் கடை என்று எண்ணி குடிமகன்கள் வந்து போனதில் மதுபானக்கடை டீமினர்க்கு ரொம்பவே சந்தோசம். பட்ஜெட் படமாக இருந்தாலும் படம் பேசப்படுகிற அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது என்கிறது மதுபானக்கடை படக்குழு.

19:10 by iamvenkatesh · 0

hotlinksin

இஷ்டம் - விமர்சனம்பார்த்த உடனே வரும் காதல்... கொஞ்ச நாள் பழகிய பின்பு பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலேயே  நடக்கும் கல்யாணம். அதன்பிறகு ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் வருகிறது சண்டை... கடைசியில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள் தம்பதிகள். சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகிவரும் இத்தகைய காதல் திருமணம் + விவாகரத்து சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இஷ்டம் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம் நிஸார்.விமல் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்க்கிறார். மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். வீடு வசதி வாய்ப்புகளுடன் வாழும் இவருக்கு நிஷா அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணமும் பண்ணிக் கொள்கிறார்கள். சில நாட்களிலேயே வரும் சின்ன சண்டை பெரிதாக வெடிக்கிறது. கடைசியில் விவாகரத்து வரைக்கும் போய்விடுகிறார்கள். கேட்ட உடனேயே விவாகரத்தும் கிடைத்துவிட, பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர் இருவரும். விமலுக்கு ஒரு பெண்ணை பார்க்கிறார் அவர் அப்பா. நிஷாவுக்கும் அவர்கள் வீட்டில் ஒரு பையனைப் பார்க்கிறார்கள். பார்த்த வரன்கள் இருவருக்கும் பிடித்துவிட திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். இரண்டாம் திருமணம் நடந்ததா? இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

விமலுக்கு ஐடியில் வேலை பார்க்கும் இளைஞன் கேரக்டர் என்பதால் படம் முழுக்க தாடி மீசை இல்லாத விமலை பார்க்க முடிகிறது. நிஷா அகர்வாலுடனான ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கிறார் விமல். 
விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். பார்ப்பதற்கு காஜல் அகர்வால் மாதிரியே இருக்கிறார். காஜல் ஏற்கனவே செம பிஸியாகிவிட்டதால் அவரது கால்ஷீட் கிடைக்காதவர்கள் நிஷா அகர்வாலை தைரியமாக நடிக்க வைக்கலாம். 

விமலுக்கு நண்பனாக வரும் சந்தானம் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி செல்கிறார். ஹீரோ விமலில் துவங்கி அவரது அப்பா நிஷாவின் தோழிகள், அத்தை என ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கலாய்த்து தாக்குகிறார் சந்தானம்.

ஹீரோயினின் அம்மாவாக உமா பத்மநாபன், அத்தையாக யுவராணி, விமலின் அம்மாவாக பிரகதி, வாட்ச்மேனாக சார்லி, மொபைல் ரீசார்ஜ் கடை உரிமையாளராக வரும் கராத்தே ராஜா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஒரு துணை நடிகர் செய்ய வேண்டிய கேரக்டரை சார்லியை பண்ண வைத்துவிட்டார் இயக்குநர். வாய்ப்பு இல்லை என்பதற்காக இரண்டே இரண்டு காட்சிகளில் வருகிற ஒரு கேரக்டரிலா சார்லி நடிக்க வேண்டும்.

தமன் இசையில் இரண்டு பாடல்கள் மெலடி ரகம். 

திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம் நிஸார். இன்று சமுதாயத்தில் பெருகி வரும் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் எடுத்ததெற்க்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு அவசரப்பட்டு விவாகரத்து வரைக்கும் போய்விடக் கூடாது என்கிற மெசேஜை படம் சொல்வதற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

02:16 by iamvenkatesh · 0

hotlinksin

பள்ளி மாணவியாக நடிக்கும் ஆன்டி நடிகை
அக்கா, அண்ணி கேரக்டர்களை விட அம்மா வேடம்தான் ஹன்ஸிகாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு உடம்பை இஷ்டத்திற்கு ஏற்றி வைத்திருப்பவர் ஹன்ஸிகா. அநேகமாக நமீதாவும் ஹன்ஸிகாவும் ஒரே எடைதான் இருப்பார்கள் போலும். ஓ.கே.ஓ.கே. படத்தின் வெற்றிக்குப் பிறகு வேட்டை மன்னன் படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். சிங்கம் 2வில் பள்ளி மாணவி வேடத்தில் ஹன்ஸிகாவை நடிக்க வைக்கிறார் ஹரி. ஆன்டி நடிகையாக நடிக்கத்தானே தான் லாயக்கு... தனக்கு போய் இப்படி பள்ளி மாணவி வேடத்தைக் கொடுத்துவிட்டாரே... என்ற ஆச்சரியத்தில் இருந்திருக்கிறார் ஹன்ஸிகா. அப்படியே இருந்தால் என்னாவது... அதனால் உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். சிங்கம் 2 துவங்கும் போது நிஜமான பள்ளி மாணவி மாதிரியே என் உடல் எடையைக் கொண்டு வந்துவிடுவேன்... என்று சவால் விட்டுக் கொண்டு உடற் பயிற்சி செய்கிறாராம் ஹன்ஸிகா.

01:16 by iamvenkatesh · 0

hotlinksin

கலக்கல் வடிவேலு - கலக்கத்தில் காமெடி நடிகர்கள்
தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட வடிவேலு விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இரண்டு வேடத்தில் இவர் நடிக்கும் இந்த படம் ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் புலிகேசி மாதிரியான படமாக இருக்குமாம். ஒருவேளை இரண்டாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம். சிம்புதேவனின் இரண்டாம் புலிகேசி படம் மிகப்பெரிய அளவு வெற்றி படமாக அமைந்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கிடையில் வடிவேலு காமெடியில் மறுபடியும் ஒரு காதல் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் போலி டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. போலி டாக்டராக இவர் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டர் அதிரப் போவது உறுதியாம். இந்தப் படத்திற்குப் பிறகு வடிவேலுவின் மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் வடிவேலு வந்துவிட்டால் இப்போது உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்களின் மார்க்கெட் சிதறிவிடும் என்பதால் அந்த காமெடிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

மீண்டும் நடிக்க வந்த சிநேகா - ஆடிப்போன இயக்குநர்
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்கிற கதையாக, கல்யாணம் முடிந்த கையோடு படத்தில் நடிக்க வந்துவிட்டார் சிநேகா. நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கும் படம் ஹரிதாஸ். இந்தப் படத்தில் கிஷோர் ஹீரேவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பது புதுப் பொண்ணு ஸ்நேகா. இந்த படம் இப்போது கமிட் ஆன படம் அல்ல. திருமணத்திற்கு முன்பே இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம் சிநேகா. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில இன்னும் படம் பிடிக்கப்படாமல் இருந்தனவாம். தன்னால் தயாரிப்பாளர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த சிநேகா சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருந்தாலும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாரம். தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் எடுத்துவிடுங்கள் என்று கோரிக்கையும் வைத்திருகிறாராம் சினேகா. சினேகா இப்படி வந்து வேண்டுகோள் வைத்திருப்பது ஹரிதாஸ் படக்குழுவை மட்டுமின்றி அதன் இயக்குநரையும் கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் தள்ளிவிட்டதாம். ‘இதெல்லவோ தொழில் பற்று...’ என்று சிநேகா புராணம் பாடுகிறது ஹரிதாஸ் படப்பிடிப்புக் குழு.

01:09 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய்யின் அடுத்த படம் தலைவன் - பட்டய கிளப்புமா?
காஜல் அகர்வாலுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் விஜய் துப்பாக்கி படத்திற்காக. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது முடிந்தவுடன் விஜய் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்க்ஷன் த்ரில்லர் படமான யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தெய்வத் திருமகள் படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்யுடன் இணைக்கிறார். இந்தப் படத்திற்கு தலைவன் என பெயர் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி, யோகன் அத்தியாயம் ஒன்று இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் தலைவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

00:12 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘ஈகோ’
கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் கதை பிடித்திருந்தால் மட்டுமே வசனம் எழுத ஒப்புக் கொள்ளும் கேபிள்சங்கர் இப்போது ஈகோ என்னும் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஈஸ்வர் கோமதி என்னும் பெயர்களின் சுருக்கமான ஈகோ என்பதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். நகுலை வைத்து கந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல்தான் ஈகோ படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை சக்திவேல் சொன்ன போது கேபிள்சங்கருக்கு கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இவரது வசனங்கள் இயக்குநர் சக்திவேலுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். ஈகோ படத்திற்குப் பிறகு முன்னணி வசனகர்த்தாக்களின் வரிசையில் கேபிள் சங்கர் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை என்கிறார்கள் ஈகோ பட டீமினர்.

01:42 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் விமர்சனம்
காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. அது உறவாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒரு வகையான இழப்பாக இருக்கலாம். பெத்தவங்களோட மிரட்டலுக்கு பயந்து காதலை துறப்பவர்கள்... இழப்புகள் ஏதும் இல்லாமலேயே காதலில் தோற்கிறார்கள். சிலரது காதலோ சில இழப்புகளுக்கு பின்பே வெற்றி பெறுகிறது. சில காதலோ தாங்க முடியாத இழப்புக்குப் பின்னாலும் தோற்றுப் போய்விடுகிறது.

படித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கிறார் ஜெயம் (லகுபரன்). பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனத்தின் (சுவாதி) மேல் காதல் வருகிறது. முதலில் தனலட்சுமிக்கு ஜெயத்தைப் பிடிக்காவிட்டாலும் போகப் போகப் பிடித்துவிடுகிறது. காதல் என்றாலே வில்லன் இல்லாமல் இருப்பார்களா? தனலட்சுமியின் குடும்பம் அவர்கள் காதலுக்கு குறுக்கே நிற்கிறது. அவர்களை மீறி தங்கள் காதலில் உறுதியாக நிற்கும் ஜெயமும் தனலட்சுமியும் தங்கள் காதலில் ஜெயித்தார்களா...? என்பது மனதை உருக வைக்கும் க்ளைமேக்ஸ்.

கதை என்று பார்த்தால் சாதாரண கதையாகத்தான் தெரியும். ஆனால் அதை திரைக்கதையாக்கும் போது இன்ட்ரஸ்டிங்கான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. காதல், அந்த காதலுக்கு பின்னால் எவ்வளவு இழப்புகள் வேதனைகள் என்று சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர் தங்கசாமி. படத்தின் துவக்கத்திலேயே நடக்கும் இரட்டைக் கொலைகள் அது நடக்க காரணம் என்ன... என்கிற பாணியில் கதை சொல்லியிருக்கிறார் தங்கசாமி. கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது இவர் கதை சொல்லும் பாணி.


தூத்துக்குடியில் நடக்கும் கதை என்பதால் தூத்துக்குடியில் முழுக்க முழுக்க படம் பிடித்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் நடப்பது போன்ற காட்சிகளை கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்த போதும் இவ்வளவு டீட்டெயிலான காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தூத்துக்குடி துறைமுகத்தை அங்குலம் அங்குலமாக அலசி படம் பிடித்திருக்கிறார்கள். திருச்செந்தூர் கோயில், குலசேகரன்பட்டிணம் என இவர்கள் கேமரா உள்வாங்கிய இடம் ஒவ்வொன்றும் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. தனலட்சுமி படிக்கும் பள்ளிக்கூடத்தின் பெயர் பலகையைக் காட்டிய போது பள்ளிக் கூடத்தின் பெயரை மறைத்துக் கொண்டு காட்டுவது அதே போல கதாபாத்திரங்கள் தண்ணி அடிக்கும் போது பாட்டிலை மறைப்பது, குடி உடல் நலத்திற்கு கேடு என டைட்டில் போடுவது இது போன்ற காட்சிகள் இயக்குநர் தங்கசாமிக்கு சமூகத்தின் மீது இருக்கும் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

படத்தின் முதல் பாதி ஜெயமும் தனலட்சுமிக்கும் காதல் வருவது, காதலை அவர்கள் டெவலப் பண்ணுவது என்று போகிறது. அதே நேரத்தில் ஜெயத்தின் அண்ணன் அசோக்கின் பிஸினஸ், அரசியல் பிரவேசம் குறித்தும் சொல்கிறது காட்சிகள். இடைவேளையின் போது செம பஞ்ச் வைக்கிறார் இயக்குநர். இடைவேளைக்குப் பிறகு காதலர்களுக்கு வரக் கூடிய பிரச்சினை, அதனால் ஏற்படுகிற விளைவுகள் என்று போகின்றன காட்சிகள். ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயமாக நடித்திருக்கிறார் புதுமுகம் லகுபரன். இவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். இவரை அசல் தூத்துக்குடி பையனாகவே மாற்றியிருக்கிறார்  இயக்குநர் தங்கசாமி. புதுமுகங்கள் என்று சொல்லிக் கொண்டு ‘நானும்தான் நடிக்கிறேன்’ என்று டார்ச்சர் பண்ணுகிற நடிகர்களுக்கு மத்தியில் தனித்திறமையுடன் லகுபரன் பளிச்சென மின்னுகிறார். இவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கேரக்டருக்கு என்ன தேவையோ அதற்கேற்றார் போல் இயல்பாக இருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். லகுபரரைனப் பார்க்கும் போது நம்ம பக்கத்து வீட்டு பையன் ரமேஷ், சுரேஷ் மாதிரி இருக்கிறது. படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நம்மை வெகுவாக கவர்ந்துவிடுகிறார் ஜெயம்... சாரி... லகுபரன்.

படத்தில் நம்மை வெகுவாக கவரும் இன்னொருவர் ஜெயத்தின் அண்ணனாக வரும் அசோக். இயக்குநர் தங்கசாமியே இந்த அண்ணன் கேரக்டரில் நடித்திருக்கிறார். சொல்லப் போனால் இந்த கேரக்டர்தான் படத்திற்கே ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்ம் இந்த கேரக்டர், செம ஷார்ப். ரியலாக ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் என்னும் போது அவர் எப்படி இருப்பார், என்னென்ன பிஸினஸ் பண்ணுவார்... எப்படி வலம் வருவார்... என்பதையெல்லாம் அசோக் குமார் கேரக்டர் சொல்கிறது. ஜெயத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அசோக் அவன் மீது கோபம் கொண்டு அடிக்கும் கேரக்டர், அப்போது அவன் அப்பா உள்ளே வர அடிப்பதை நிறுத்திவிட்டு போவது... என வீடுகளில் இயல்பாக நடக்கும் சம்பவங்களையே தேடிப் பிடித்து காட்சிகளில் வைத்திருக்கிறார் தங்கசாமி. இந்த இயல்பான காட்சிகளே படத்திற்கு மிகப்பெரும் வலு சேர்க்கின்றன. இவர் நடந்து போகும் போது வெளிப்படும் தோரணை, பேசுற போது இருக்கிற கெத்து... இது எல்லாமே தங்கசாமிக்கு நல்ல படம் இயக்க மட்டுமல்ல ஒரு அண்ணன் கேரக்டராகவே மாறவும் தெரியும் என்பதை காட்டுகிறது. கடைசியில் இந்த அண்ணன் கேரக்டருக்கு ஏற்படும் விபரீத முடிவு நம் கண்களை கலங்க வைத்துவிடுகிறது.

ஜெயத்திற்கு ஜோடியாக தனலட்சுமி கேரக்டரில் நடித்திருக்கிறார் சுவாதி. பொதுவா கேரள நடிகைகள் என்றாலே செமையாகத்தான் இருப்பார்கள். அப்படியிருக்கும் போது சுவாதி பற்றி சொல்லவா வேணும். அழகிலும் நடிப்பிலும் நாற்பது கேரள நடிகைகளை சேர்த்து செய்த மாதிரி தெரிகிறார் சுவாதி. தனலட்சுமி கேரக்டருக்கு நல்லாவே பொருந்தியிருக்கிறார் சுவாதி. ‘ஒரு பையன் என்னை லவ் பண்றேன்னு சொல்றாண்டி...’ என்று சொல்லும் அப்பாவி சுவாதி நம்மை அறியாமலே நம்மை தன் வசப்படுத்திக் கொள்கிறார். ‘கல்யாணம் பண்ணினா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...’ என்று இவர் துணிச்சலாக பெற்றோரிடம் பேசும் போது சபாஷ் போட வைக்கிறார்.

சுவாதிக்கு அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் எலிசபெத். தன் பொண்ணு யாரோ ஒரு பையனை லவ்வுகிறார் என்னும் போது மகளை நினைத்து பயப்படும் இவர், மகன் விபத்தில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து மகளை படாத பாடு படுத்துவது தனத்துக்காக நம்மை உச் கொட்ட வைக்கிறது. டீன் ஏஜ் மகளிடம் எப்படியெல்லாம் அணுகக் கூடாது என்பதற்கு தனத்தின் அப்பா அம்மா கேரக்டர் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தனத்தின் மாமாவாக வரும் அந்த அட்வகேட், தனத்தின் காதலை அவள் வீட்டிலும் ஜெயத்தின் வீட்டிலும் சொல்லும் போது வித்தியாசமான அப்ரோச்சில் மெச்ச வைக்கிறார்.

காமெடி நடிகர் என்று யாரும் படத்தில் இல்லாவிட்டாலும் ஜெயத்தின் நண்பன் பானை சேகராக வரும் அஜய் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவும் இவர் ஒரு பொண்ணுக்கு ரூட் விட அந்த பெண்ணோ ஜெயத்தை ரூட் விடுகிற காட்சிகள் ஏகப்பட்ட கலகலப்பு.

படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நம்மை உட்கார்ந்த இடத்திலேயே தூத்துக்குடிக்கு அழைத்துப் போய்விடுகிறது கேரமா. தொழில் நகரமான தூத்துக்குடியின் கலரான முகமும் கலங்கலான முகத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ராஜ்சுந்தரின் கேமரா.

இசையமைப்பாளர் மனு ரமேஷன் தேவையான இடத்தில் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார். ‘ஏத்து ஏத்து’ பாடல் தூத்துக்குடியின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறது. ‘அசத்தும் அழகு...’ இந்த வருடத்தின் டாப் மெலடி பாடல்களில் தனி இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘ஏலே ஏபுள்ள...’, ‘ஏனோ என் இதயம்’ பாடல்களும் ரசிக்க வைக்கும் ரகம். ‘யாக்கை சுற்றும் ராட்டினம்’ பாடல் கம்பீரம். 

ராட்டினத்தை இயக்கிருப்பவர் தங்கசாமி. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். புதுமுங்களை வைத்து இப்படி ஒரு படத்தை ஜீரணிக்கவே முடியாத ஒரு க்ளைமேகஸை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். ரியல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் திரையில் நடமாடவிட்டிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. நம் ஒவ்வொருவருக்குள் இருந்தும் ஓரிரு காட்சிகளை எடுத்து படமாக்கியிருப்பதாலோ என்னவோ படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் அசைபோட வைக்கின்றன. புதுமுகங்களை வைத்துப் படம் எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அட்டு படங்களாக எடுத்து ரசிகர்களை சாகடிக்கும் இயக்குநர்கள் ராட்டினம் இயக்குநர் தங்கசாமியிடம் கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கிட்டா பரவாயில்லை...

உங்கள் காதலுக்காக ‘போராடி’ ஒருவேளை நீங்கள் தோற்றிருந்தால் ராட்டினம் உங்கள் மனதில் இருந்து என்றுமே அகலப் போவதில்லை. ஒருவேளை காதலில் போராடி ஜெயித்திருந்தால் சில நாட்களுக்கு உங்களை இந்த ராட்டினம் தூங்கவிடாமல் செய்யும் என்பது மட்டும் உறுதி.

02:44 by iamvenkatesh · 0

hotlinksin

ராட்டினம் இயக்குநர் தங்கசாமி... நிஜமாகவே இவரு GOLD GODதாங்க...
பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த படத்தின் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தனுஷின் 3 துவங்கி ஏராளமான படங்களை இந்த வரிசையில் அடுக்கிக் கொண்டே போகலாம். ராட்டினம் படத்திலும் இது போன்ற ஒரு காதல்தான். ஆனால் வெறுப்பு வரவில்லை. அதற்கு பதிலாக படம் மீதும் அந்த கதாபாத்திரங்கள் மீதும் மிகப்பெரிய ஒரு மதிப்பு வருகிறது. ஹீரோ அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கும் பையன். ஹீரோயின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இப்படி ஒரு கதையென்றாலே அதற்குள் எப்படியெல்லாம் லாஜிக்கை கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுப்பார்கள் நம் இயக்குநர்கள். ஆனால் ராட்டினம் படத்தின் இயக்குநர் தங்கசாமியோ படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் மீதும் தனி மதிப்பு மரியாதையையே வர வைத்துவிடுகிறார். அறிமுக இயக்குநர்கள் வரிசையில் தங்கசாமிக்கு என ஒரு சிவப்புக் கம்பள விரிப்பே கொடுக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்த எஸ்கேப் மோஷன் பிக்சர்ஸ் மதன் அடுத்தப் படத்தை தங்கசாமியையே இயக்கச் சொல்லியிருக்கிறாராம். யு ஆர் வெரி கிரேட் தங்கசாமி. நல்ல படத்தை உருவாக்குவதில் இவரு தங்கசாமி இல்ல... goldgod. உங்ககிட்ட இருந்து ராட்டினம் மாதிரியான நல்ல படங்களை எதிர்பார்க்கிறோம். ராட்டினம் என்னும் நல்ல படத்தைக் கொடுத்ததற்காக தங்கசாமிக்கு எமது நன்றிகள்.

ராட்டினம் விமர்சனம் விரைவில்...

01:53 by iamvenkatesh · 0

hotlinksin

சேரன் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தினாரா?
சமீபத்தில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்று ஒரு படம் ரிலீசானது நினைவிருக்கிறதா. படம் தியேட்டரில் நாலு நாட்கள் கூட ஓடவில்லையே. அப்புறம் எங்க ஞாபகம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் சேரனின் உதவியாளர் ஷண்முகராஜ். புதிய முயற்சியாக முகமே தெரியாமல் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை படம் பிடித்திருந்தார்கள். முதல் இரவு பாடல் அது என்றாலும் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த சேரன் படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை படம் பார்க்க வைத்திருக்கிறார். ‘செம படம்... சூப்பரா ஓடும்...’ என உசுப்பேத்திவிட மைக்கேல் ராயப்பனும் நம்பி படத்தை வாங்கி வெளியிட்டார். ‘இந்தப் படத்தைப் பார்த்தால்தான் காதலர்கள் ஜெயிக்க முடியும், காதலில் ஜெயிக்க பாலோ பண்ண வேண்டிய 5 டி என்ன என்று இதில் சொல்லியிருக்கிறோம்...’ என்று விதவிதமாக விளம்பரம் செய்த போதும் படம் செல்ப் எடுக்கவில்லை. ‘என் கம்பெனி பேர்ல படத்தை ரிலீஸ் பண்ணித்தரேன்... கலெக்க்ஷன் ஆகஆக பணத்தை கொடுத்திடுறேன்’  என்னும் ஒப்பந்தத்துடன் படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். எனினும் இந்தப் படத்தை வெளியிட்ட வகையில் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்டம்தான் மிஞ்சியிருக்கிறது-

01:59 by iamvenkatesh · 0

hotlinksin

புதிய தலைமுறை சரண்யாவும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகையும்..கொஞ்ச நாட்களாகவே எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அதாவது புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கிற சரண்யாவும், ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி படத்தில் நடித்த நடிகை அக்க்ஷராவும் ஒருத்தர்தான்னு நான் சொல்கிறேன். ஆனால் என் நண்பரோ அது வேற இது வேற... என்கிறார். என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க சாமிகளா...


ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி நடிகை அக்க்ஷரா

 

புதிய தலைமுறை சரண்யா

01:42 by iamvenkatesh · 0

hotlinksin