சொர்ணமால்யா நீங்க இப்படி பண்ணலாமா?
சொர்ணமால்யாவுக்கு வேணும்னா உங்களைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உங்களுக்கு சொர்ணமால்யாவைத் தெரிந்திருக்கும்.
இளமை புதுமை என்னும் நிகழ்ச்சியை சன் டிவியில் தொகுத்து வழங்கியதன் மூலம் அறிமுகமானவர். இவரை மணிரத்னம் வெள்ளித் திரைக்கும் அழைத்து வந்தார். மணிரத்னம் கண்ணிப் பட்டாலே பெரிய ஆளாகிவிடுவார்கள் என்று சொல்வார்கள் ஆனால் சொர்ணமால்யாவுக்கோ பெரிய திரையிலும் பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை.சமீபகாலமாக சொர்ணமால்யா எங்க இருக்கிறார் என்ன பண்ணுகிறார் என்கிற எந்த விஷயமும் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட சொர்ணமால்யா அன்னா ஹசாரே சென்னைக்கு வந்த போது தனது நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதற்கு அன்னா ஹசாரேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
இதனால் இந்த நிகழ்ச்சிக்க ஏகப்பட்ட கூட்டமும் வந்திருந்தது. தமிழுணர்வு மிக்க பெரியவர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் கூடியிருந்த கூட்டத்தினரிடையே மரண தண்டனைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை விநியோகம் செய்தனர். இதை கூட்டத்தில் எங்க இருந்துதான் மோப்பம் பிடித்தாரோ சொர்ணமால்யா திடுதிபுவென ஓடி வந்தார். இங்க யாரும் நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்றார் கறாராக. ஏன்.. என்று கேட்டார்கள் தமிழுணர்வாளர்கள். ‘நானே மரண தண்டனைக்கு ஆதரவானவள். என் நிகழ்ச்சியில் மரண தண்டனைக்கு எதிரான நோட்டீஸ் நீங்கள் எப்படி விநியோகம் செய்யலாம்... வெளியே போங்க...’ என்று கத்தினார் சொர்ணமால்யா.
அப்போதுதான் சொர்ணாமால்யாவுக்குள்ளும் ஒரு சொர்ணக்கா இருக்கிற விஷயம் பலருக்கும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழுணர்வாளர்களுக்கும் சொர்ணாவுக்கு பெரிய வாக்குவாதமே நடந்தது. அதற்கு பின்பு நோட்டீஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். எனினும் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் சொர்ணமால்யாமீது கோபமாகத்தான் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
இவரை சொர்ணமாலிகா என்பதிலும் 'சங்காராச்சாரி'
ReplyDeleteபுகழ் என்று சொன்னால் பட்டெனப் புரியும்.
இவர் மரணதண்டனையை ஆதரிக்கிறாராமா? அப்போ சங்கரராமனைக் கொலை செய்யத்தூண்டியது, நிரூபணமானால் சங்கராச்சாரியைத் தூக்கிலிட வேண்டுமெகிறாரா? அடிப்பாவி பட்டாகவும், நகையாகவும் வாங்கியதை மறந்து விட்டாரே!
மிக கொடுமையான முறையில் கொலை செய்பவர்கள் ,. மற்றும் ௪ அல்லது ௫ பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலகாரம் செய்து கொலை செய்வது ,. இது போன்ற செயல்களுக்கு மரணதண்டனை சரியான தீர்வுதனே நண்பரே ,. இதில் தவறு இருபதாக தெரியவில்லை ,.ல், ஈழ பிரச்சினை சாந்தன் முருகன் மரண தண்டனையை நான் எதிர்கிறேன் காரணம் ,. ராஜீவ் கொலைக்கு காரணம் என்று ஒரு தமிழ் இனத்தையே அழிதிருகிறது கொங்கிரஸ் அரசு ,.
ReplyDelete--
www.divinetrekking.com
prabaa, mdu
மரண தண்டனைக்கு ஆதரவான கருத்தைக் கூறுவதில் தவறென்ன இருக்கு...அது அவரவர் கருத்து..
ReplyDeleteஇதுவரைக்கும் மரண தண்டனை பற்றி வாயே திறக்காம...இப்போ திடீர்னு தமிழ் உணர்வாளர்களுக்கு, மரண தண்டனை குறித்த ஞானோதயம் ஏற்பட்டிருக்கா என்ன? 3 பேரும் தூக்கை ரத்து பண்ணுங்கன்னு சொல்ல வழியில்லாம தான் ...மரண தண்டனையையே ரத்து பண்ணுங்கன்னு சொல்றாங்க...எல்லாம் சும்மா லு லா யி.....
மாத்தையாவை தூக்கில் போடும் போது எங்கே போச்சு மரண தண்டனை எதிர்ப்பு!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteunga appan amma va konnuttu " adhu oru thunbiyal sambavam" appadinnu petti kodutha virutudvialo?
ReplyDeletekooda paduthu irudha maadhiriye comment podaranunga paru... .
ReplyDelete