கேக்கிறவன் கேணையனாக இருந்தால்....



‘தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள்’ இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். உங்கள் மொபைலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள். அட இவங்களுக்கு வேற வேலையே இல்லப்பா... என்று நினைத்தபடியே உங்கள் வேலையைப் பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். வேலை எதுவும் இல்லை என்றால் அதைப் பற்றி கொஞ்சம் யோசிப்பீர்கள். ஆனால் இது உண்மை என்று நம்ப மாட்டீர்கள். ‘தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள்’ என்பது நிச்சயம் வதந்தியாகத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால், உத்திரபிரதேசத்தில் தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள் என்னும் எஸ்.எம்.எஸ்.மொபைல்களில் பரவியிருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்களிலும் இது தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். இதன் விளைவு மக்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் தூங்காதீங்க என்று சொல்லியிருக்கிறார்கள். 

இதனால் பெரும்பாலான மக்கள் தூங்காமலேயே அன்றைய இரவு முழுவதையும் கழித்திருக்கிறார்கள். இதுக்குதான் ஒரு பழமொழி சொல்வார்கள் கேக்கிறவன் கேணையனாக இருந்தால் எருமைமாடும் ஏரோபிளேன் ஓட்டுமாம்... என்று. இந்த பழமொழி அன்று தூங்காமல் விடிய விடிய காத்திருந்த மக்களுக்கு நன்றாகவே பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.
hotlinksin

0 Responses to “கேக்கிறவன் கேணையனாக இருந்தால்....”

Post a Comment