பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்கள் முன்பதிவு நாளை துவக்கம்



சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு இரயில்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (06021) வரும் 13 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 2 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

இந்த ரயில் மறுபடியும் நாகர்கோவிலில் இருந்து வரும் 17 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும்.


சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வரும் 17ம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.45க்கு கோவையை சென்றடையும். இன்னொரு சிறப்பு ரயில் 18ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நாள் காலை 6.50 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்குகிறது.
hotlinksin

0 Responses to “பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்கள் முன்பதிவு நாளை துவக்கம்”

Post a Comment