உங்களுக்கு தனுசு ராசியா? அப்படின்னா...




நீயாநானா நிகழ்ச்சியில் புத்தாண்டில் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி ஜோதிடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜோதிடத்தில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அவர்கள் பேசியதில் தனுசு ராசி பற்றி பேசியது மட்டும்தான் என்னால் கவனிக்க முடிந்தது. 

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிக மிக சிறப்பான வருடமாக இருக்குமாம். இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து பல நல்ல விஷயங்கள் நடக்குமாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம். அதே நேரத்தில் கார் மற்றும் வீடு வாங்குவதற்கு பெருமளவில் வாய்ப்புகள் உள்ளனவாம். உடல் நலன் மிகவும் நல்லபடியாக இருக்குமாம். மொத்தத்தில் இதற்கு முந்தைய வருடங்களை விட இந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்றார்கள். 

தனுசு ராசி நண்பர்களுக்கு இதை கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இவை எல்லாமே வாழ்வில் நடந்தால் என்றும் சந்தோஷம்தான்.

நண்பர்களே (எந்த ராசியாக இருந்தாலும் சரி...) , புதிதாய் பிறந்திருக்கும் 2012 ல் உங்கள் லட்சியங்கள், கனவு எல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன்.
hotlinksin

0 Responses to “உங்களுக்கு தனுசு ராசியா? அப்படின்னா...”

Post a Comment