கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்?
ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் கோச்சடையானில் ரஜினிக்கு ஜோடியாக
நடிக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமீப
நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தன. முதலில் அனுஷ்கா, பின்பு
தீபிகா படுகோனே இப்படி ஒவ்வொருவராக ஆளாளுக்கு ரஜினிக்கு ஜோடியாக்கினார்கள்.
கடைசியில் டர்ட்டி பட புகழ் வித்யாபாலனையும் ரஜினிக்கு ஜோடியாக்கினார்கள்.
கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்? என்பதற்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது.
காத்ரினா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்க உள்ளார். இதை
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ரஜினியுடன் நடிக்கப்போவதால்
காத்ரினா கைஃப் தனது கால்ஷீட்டை மொத்தமாக கோச்சடையான் படத்திற்கு
வழங்கியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கோச்சடையானில் ரஜினி ஜோடி யார்?”
Post a Comment