புத்தாண்டு கொண்டாட்டம் பெண்களுக்கு முத்தம் கொடுத்து தர்ம அடி வாங்கிய ஆசாமிகள்
ஆங்கிலப் புத்தாண்டு முடிந்த மறுநாள் செய்தித்தாளை பார்க்கும் போதுதான் தெரியும் எத்தனை பேர் தண்ணி அடித்துவிட்டு வண்டியில் போய் மேலே சேர்ந்தார்கள் என்பது. பெரிய விபத்துகள் செய்தியானாலும் இது தவிர நிறைய விபத்துகள் ஆங்காங்கே நடப்பது உண்டு. இது போன்ற விபத்து சம்பவங்கள் செய்திதாளில் இப்போது இடம் பிடித்திருந்தாலும், தூத்துக்குடியில் நடந்த பெண்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடியில் புத்தாண்டைக் கொண்டாடிய இரு அமெரிக்கர்கள் பெண்களுக்கு முத்தம் கொடுத்து தர்ம அடி வாங்கியுள்ளனர். தூத்துக்குடியில் தங்கி இருந்த இந்த அமெரிக்கர்கள் நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு வெளியே வந்து ரோட்டில் வருகிற போகிற பெண்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதற்கே அந்த பெண்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
இதற்கு மேல் அந்த அமெரிக்கர்கள் இருவரும் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கன்னத்திலும், உதட்டிலும் முத்தம் கொடுத்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் அலறியபடி ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் இதைப் பார்த்து அத்திரம் அடைந்து அவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள். இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடியை அமெரிக்கா என்று நினைத்துவிட்டார்கள் போலும் இந்த அமெரிக்கர்கள். இந்த புத்தாண்டைப் பொறுத்தவரையில் அந்த ஆசாமிகளுக்கு இனிமேல் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்தாண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “புத்தாண்டு கொண்டாட்டம் பெண்களுக்கு முத்தம் கொடுத்து தர்ம அடி வாங்கிய ஆசாமிகள்”
Post a Comment