நடிகை தமன்னாவின் மூடநம்பிக்கை



செவ்வாய் தோஷத்தில் இருந்து பல்லி தோசம் வரைக்கும் விதவிதமான தோஷங்களுக்கு பரிகாரம் செய்வாங்க நம்ம ஆளுங்க. ஏதாவது ஒரு ஆசாமியை அழைத்துக் கொண்டுவருவார்கள். அவரும் பூஜை பண்றேன் அது இது... என்று சொல்லி ஒரு தொகையை ஆட்டையப் போட்டுவிட்டுப் போவார். நடிகை தமன்னாவும் இப்போது பரிகார பூஜை செய்ய கிளம்பிவிட்டாராம். சமீபத்தில் ஜீன்ஸ், டீசர்ட் போட்டுக் கொண்டு தமன்னா திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தார். அதிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் தமன்னாவுக்கு பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிந்தவர்கள் வேதம் ஓத, இப்போது யாரை வைத்து அந்த பரிகார பூஜையை நடத்துவது என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் தமன்னா. இந்த மூட நம்பிக்கைகள் படிக்காதவர்களைத்தான் பெரும்பாடு படுத்துகிறது என்றால் இந்த நடிகைகளையும் அது விட்டுவைக்கவில்லை என்று நிரூபித்திருக்கிறார் தமன்னா.

hotlinksin

0 Responses to “நடிகை தமன்னாவின் மூடநம்பிக்கை”

Post a Comment