தமிழ்சினிமாவில் சில கருப்பாடுகள் - Who is the black sheep



மிருகம், நெல்லு, வெண்மணி போன்ற படங்களைத் தயாரித்தவர் கார்த்திக் ஜெய். மூன்று படங்களைத் தயாரித்து கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டப்பட்டவர்.

திருப்பூரில் கார்மென்ட் தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்த கார்த்திக் ஜெய்யை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சாமி. மிருகம் படத்தின் கதை கார்த்திக் ஜெய்க்குப் பிடித்துப் போக படத்தை தயாரித்திருக்கிறார்கள். படத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் மிருகம் படத்தின் மூலம் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டப்பட்டார் கார்த்திக் ஜெய்.

அதற்கு பிறகு நெல்லு என்ற படத்தைத் தயாரித்தார் கார்த்திக் ஜெய். புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்த இந்த படம் கோடி கோடியாக சம்பாதித்துக் கொடுத்துவிடுமா என்ன? இந்த படமும் ஊத்திக் கொண்டது. சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளியான படம் வெண்மணி. இந்த படத்தில் இவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் ‘ஸ்வாகா’ ஆகிவிட்டது.

கார்மென்ட் தொழிலை விட சினிமா நல்ல தொழில்தான் என்கிறார் கார்த்திக் ஜெய். எல்லா துறைகளிலும் இன்று கருப்பாடுகள் மலிந்துவிட்ட பிறகு சினிமாவில் மட்டும் கருப்பாடுகள் இருக்க மாட்டார்களா என்ன? இந்த கருப்பாடுகள் ஒரு தாடியோட வாடகை ஒரு நாளுக்கு மூவாயிரம் ரூபாய் என்று கணக்கு எழுதுகிறார்களாம். நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாராம் கார்த்திக் ஜெய்.

பணத்தை சரியாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தினால் சினிமா நல்ல தொழில்தான் என்று அடித்துச் சொல்கிறார் கார்த்திக் ஜெய். மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் கார்த்திக் ஜெய்யின் இலக்காக இருக்கிறது. அவரது லட்சியங்கள் நிறைவேறட்டும்.

hotlinksin

0 Responses to “தமிழ்சினிமாவில் சில கருப்பாடுகள் - Who is the black sheep”

Post a Comment