இன்று 4 படங்கள் ரிலீஸ் - அவற்றில் 2 கில்மா படங்கள்
இன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவற்றில் இரண்டு கில்மா படங்கள். இரண்டு தமிழ் படங்களுக்கு இணையாக இரண்டு கில்மா படங்கள் ரிலீஸ் ஆவது இதுதான் முதல் தடவை.
புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகிறது விநாயகா என்னும் படம். இந்த படத்தில் ஹீரோ புதுமுகம் என்றாலும் படத்திற்கு வலு சேர்க்கிறார் சந்தானம். தொப்பை வயிறுடன் படத்தின் காட்சி தரும்போதே தெரிகிறது படம் முழுக்க காமெடியாகத்தான் இருக்கும் என்று. சிக்ஸ் பேக் மத்தியில் ஒரு புல் பேக் நாயகன் என்று இவர்கள் விளம்பரம் செய்துவருகிறார்கள்.
மதுவும் மைதிலியும், இந்த படத்தின் பெயரை ஒரு கிக்கா இருக்கிறது அல்லவா? இந்த படத்திலும் ஹீரோ ஹீரோயின் புதுமுகங்கள்தான். லொள்ளுசபா ஜீவா முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார். ஜெயந்தி என்னும் புதுமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
மன்மதராணி என்னும் கில்மா படமும் ரிலீஸ் ஆகிறது. இந்தி படத்தின் டப்பிங் படம் இது. அவளை அடைய நினைப்பவர்கள் எல்லாருமே நண்பர்கள். அவளை வேட்டையாள துடிப்பவர்களும் நண்பர்கள்தான். அவள்தான்... மன்மதராணி என்னும் வாசகங்கள் இந்த படத்தின் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு கில்மா படம் அவள் அந்தரங்கம். இந்த படம் ஏற்கனவே வெளி வந்த அந்தரங்கம் படத்தில் சில பேட்ச் ஒர்க்குகள் மட்டும் செய்து வெளியிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த படத்தில் நடித்தவர்களும் இதில் நடித்தவர்களும் ஒரே டீம்தான்.
படங்களைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இன்று 4 படங்கள் ரிலீஸ் - அவற்றில் 2 கில்மா படங்கள்”
Post a Comment