நண்பன் - வேட்டையால் வேட்டையாடப்படுமா?
எந்த வருடமும் பொங்கல் திருநாளில் நான்கைந்து படங்கள் ரிலீஸ் ஆகும். அத்தனையும் பெரிய ஸ்டார்களின் படங்களாகவே இருக்கும். ஆனால் இந்த பொங்கலுக்கு வெறும் இரண்டே இரண்டு படங்கள் மட்டும்தான் ரிலீஸ் ஆகின்றன. அவை இரண்டுமே பெரிதும் எதிர்பார்க்கப்படும் நண்பன், வேட்டை ஆகிய இரு படங்களும்தான். வேட்டை ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. நண்பன் படத்தை அதற்கு முன்பே அதாவது
ஜனவரி 12 ஆம் தேதியே ரிலீஸ் செய்கிறது ஜெமினி பிலிம் சர்க்யூட். மயக்கம் என்ன படத்தை எடுத்து கையில் மட்டுமின்றி ஆங்காங்கே சூடு போட்டுக் கொண்ட இந்நிறுவனம் நண்பன் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறது. நண்பன் கைகொடுக்குமா இல்லை வேட்டையால் வேட்டையாடப்படுமா என்பதற்கு பொங்கல் திருநாள்தான் விடை சொல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
februaryyai january endru maatravum
ReplyDelete