நான் ரசித்த விளம்பரம்


தினமும் வீட்டுக்கு லேட்டா வந்தா வீட்ல கச்சேரிக்கு பஞ்சமே இருக்காது. ஆனா இந்த விளம்பரத்துல பாருங்க இந்த பொண்ணு அவள் புருஷன் லேட்டா வருவதை எப்படி நாசூக்காக சுட்டிக்காட்டுகிறாள் என்று. இந்த ஜோடி, மேட் பார் ஈச் அதர் என்கிற மாதிரியான குட் காம்பினேஷன் ஜோடி. 

‘அது ஆபிஸ்ல இருந்து லேட்டா வராது...’ என்று அந்த பொண்ணு சொல்லுகிற இடத்தில் அவள் எக்ஸ்பிரசன்ஸ் பார்க்கணுமே... அடேங்கப்பா... சூப்பரோ சூப்பர். அதைத் தொடர்ந்து வருகிற அந்த இசை... அவள் வீட்டுக்காரன் பீல் பண்ணுகிற சீன்ஸ்... ‘ஒரே ஒரு சான்ஸ் கொடுப்பியா?’ என்று அவன் கேட்கும் போது அவள் ‘சரி’ என்று சொல்வதும் அதை அவன் இமிடேட் பண்ணுவதும்... ம்... சே... சான்சே இல்லப்பா... கடைசியில் அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

இந்த விளம்பரத்தை நீங்கள் ரசித்துப் பார்த்திருந்தால் அந்த சீனில் உங்களை அறியாமல் உங்கள் முகத்தில் புன்னகையும் மனதில் சந்தோஷமும் வந்து செல்லும். ம்... நீங்களும் ரசித்து பார்த்து சந்தோஷப்படுங்கள்...

hotlinksin

2 comments: