நீங்கல்லாம் நெஜமாவே மனுஷ ஜென்மங்கள்தானா?
அரசு டாக்டர் என்றாலே அலட்சியமாக நடக்கிறவர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அரசு மருத்துவர்கள் பண்ணுகிற அராஜகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. தூத்துக்குடியில் மருத்துவரை கொலை செய்த ஆட்டோ டிரைவரையும் மேலும் 4பேரையும் கைது செய்துவிட்டார்கள். ஆனால் பாருங்கள், அதற்கு பிறகு இந்த அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
கைது செய்யப்படுவதற்கு தாமதம் ஆனாலோ, கைது செய்யப்படாமல் இருந்தாலோ இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் கைது நடவடிக்கைக்குப் பிறகும் இவர்கள் போராட்டத்தில் இறங்கியதன் காரணம் என்ன?
மருத்துவர்கள் போராடுவது இன்று நேற்று நடக்கும் விஷயம் இல்லை. ஊதிய உயர்வில் ஆரம்பித்து இவர்கள் போராட்டம் இப்போது அரசு மருத்துவர் கொலைக்காக வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நல்லவேளை முல்லை பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகளுக்காக இவர்கள் களம் இறங்கவில்லையே என்று சந்தோஷப்படலாம்.
இந்த போராட்டத்தின் போது பாதிக்கப்படுவர்கள் யார்? அப்பாவி பொதுமக்கள், ஏழை மக்கள். அரசு மருத்துவர்கள் எப்போதுமே ஒழுங்காக வேலை பார்க்க மாட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு மருத்துவர் பணிக்கு வேலைக்கு வந்தவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இன்றோ பணம் பணம் என்று திரிகின்றனர் இந்த ஜென்மங்கள். காலை முதல் மாலை வரை பார்க்க வேண்டிய அரசு மருத்துவமனை டாக்டர் இரண்டு மணி நேரம் கூட அரசு மருத்துவமனையில் உட்காராமல் தனியார் கிளினிக்குக்குப் போய்விடுகின்றனர்.
எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் ஸ்டான்லியில் வேலை பார்த்தார். ஸ்டான்லிக்கு வருகிறவர்களில் நோயாளிகளில் கொஞ்சம் வெயிட்டாக தெரிபவர்களை தனது சொந்த கிளினிக்குக்கு அழைத்துச் சென்றுவிடுவார். இது போன்ற மருத்துவர்கள் ஏராளமானவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பணம் தான் முதல்பட்சம். பணம் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பிச்சை எடுக்கலாம், மாமா வேலை பார்க்கலாம் இன்னும் எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போய் பணம் பிடுங்குவது என்பது சராசரி சமான்யனால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.
இன்று ஒரு நாள் போராட்டத்தால் எத்தனை நோயாளிகள் சிரமப்பட்டிருப்பார்கள். உயிரோடு விளையாடுகிறார்கள் இந்த மருத்துவர்கள். தனியார் மருத்துவமனை மருத்துவர் என்றால் இப்படி போராட முடியுமா? அரசு மருத்துவமனை என்றால் அங்குவருகிறவர்கள் எல்லாம் ஏழைகள். அரசும் இது போன்ற போராட்டத்தைக் கண்டு கொள்ளாது என்பதால்தானே. இது போன்ற போராட்டத்தில் குதித்து நோயாளிகளுக்கு அவஸ்தை தருகிற மருத்துவர்களுக்கு பதவி உயர்வு தடை செய்யப்பட வேண்டும்.
இது போன்ற அரசு மருத்துவர்களின் போராட்டம் மக்கள் மனதில் அவர்கள் மீது உள்ள வெறுப்பை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பாதிக்கப்படுபவர்களில் நாலுபேர் அந்த ஆட்டோ டிரைவரைப் போன்று கத்தியை கையில் எடுத்தால்..... இது எங்கே போய் முடியும்...?
Subscribe to:
Post Comments (Atom)
காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல்
ReplyDeletehttp://vennirairavugal.blogspot.com/