இந்த நடிகைகள் எப்பவுமே உஷார்தான்...
தயாரிப்பாளர்கள் மட்டும்தான் படத்தைத் தயாரிப்பதில் கிடைக்கும் பணத்தை
மறுபடியும் சினிமாவில் போட்டு அடுத்த படத்தைத் தயாரிப்பார்கள். ஆனால்
நடிகர்களோ நடிகைகளோ கொஞ்சம் என்ன ரொம்பவே உஷாராக தான் சம்பாதிக்கும் பணத்தை
வேறு தொழில்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்
இதில் விதிவிலக்கு. இவர்கள் அரிதாக எப்போதாவது ஒருமுறை படத்தைத்
தயாரிப்பார்கள். உஷார் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார் காஜல்
அகர்வால். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும்
காஜல் தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் விஜய்யுடன் துப்பாக்கி
படத்திலும் பிஸியாக நடித்துவருகிறார். விரைவில் மிக பிரமாண்டமான ஹோட்டல்
ஒன்றை கட்ட உள்ளாராம் காஜல் அகர்வால். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில்
சல்லி காசு கூட மீண்டும் சினிமாவில் போட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக
உஷாராக இருக்கிறார்கள் இந்த நடிகைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இந்த நடிகைகள் எப்பவுமே உஷார்தான்...”
Post a Comment