அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படாத...மயக்கம் என்ன பெரிய அளவுக்கு வெற்றியைப் பெறாவிட்டாலும் படத்தில் என்னை கவர்ந்த காட்சிகள் சில இருக்கின்றன. அவற்றில் ஒரு காட்சிதான் ரிச்சா அவள் நண்பனைப் பார்த்து பேசும் காட்சி. ஒரே வரியில் அடுத்தவர் மனைவி மேல் ஆசைப்படும் அத்தனை பேருக்கும் சாட்டை கொண்டு விளாசியிருந்தார் செல்வராகவன்.

கீழே விழுந்ததில் அடிபட்டு மனநோயாளி ஆகியிருந்த தனுஷ், அவர் மனைவியாக நடித்திருக்கும் ரிச்சா, தனுஷ் நண்பன் மூவரும் வண்டியில் வந்து கொண்டிருப்பார்கள். நண்பன்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பான். திடீரென தனுஷ் வண்டியை நிறுத்திதச் சொல்லி இறங்கி ஓடுவார். அப்போது அவரைப் பார்க்கும் ரிச்சா மனம் உடைந்து போய் அழுவார். உடனே அவர்களது நண்பன் பின் சீட்டுக்கு வந்து ரிச்சாவை அப்படியே மெல்ல அணைத்துக் கொள்வான். ‘அழாத யாமினி... நீ ஏன் அவன் கூட இருந்து கஷ்டப்படுறே... அவனை ஒரு ஹாஸ்பிட்டல்ல சேர்ததுட்டு என்கூட வந்திடு... உன்னை நல்லா வச்சிப்பேன்...’ என்று சொல்வான்.

அதைக் கேட்டு கோபப்படும் யாமினி, ஒரு இளைஞன் முன்பு தான் அழுதது தன் தவறு என உணர்கிறாள். நண்பனை நோக்கி முறைத்த படியே விரலைக் காட்டி ‘உன் முன்னால நான் அழுதது தப்பு... அதனாலதான் நீ இப்படி எல்லாம் சொல்லுற... இந்த மாதிரி என்கிட்ட பேசாத... அவன் மனநோயாளி அல்ல... அவன் ஜீனியஸ்...’ என்கிறாள். நண்பனும் தன் தவறை உணர்ந்தவனாக, ‘என்னை மன்னிச்சிரு... யாமினி... ப்ளீஸ் நம்ம ப்ரண்ட்ஸ்க்கு நான் இப்படி பிகேவ் பண்ணினது தெரிஞ்சா... என்னை...’ என்கிறான். ‘ம்... நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்... நீ எப்பவும் போல என்கிட்ட பேசலாம்... எங்க வீட்டுக்கு வரலாம்... நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணு... அதுதான் உன்னை இப்படி எல்லாம் பேச வைக்குது... உன் பொண்டாட்டிய நீதான் தேடிக்கணும்... இன்னொருத்தர் பொண்டாட்டி மேல ஆசைப்படக் கூடாது... ஆங்... இன்னொரு தடவை என் புருஷனை பைத்தியம்னு சொல்லாத, அவன் ஜீனியஸ்...’ என்று சொல்வாள் அவள். 

நண்பனுக்கு அட்வைஸ் பண்ணும் அதே நேரத்தில் அவள் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுவாள். ம்... யாமினி மாதிரி பொண்டாட்டி கிடைக்கணும்... ம்... அதுக்கெல்லாம் யோகம் வேணும்பா...
hotlinksin

0 Responses to “அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படாத...”

Post a Comment