பேரரசு இயக்கத்தில் விஜய் - அடுத்த ஹிட் ரெடி!
பேரரசு படம் என்றாலே ஒரு ஸ்பெஷல். பஞ்ச் டயலாக்களுக்கு குறைவிருக்காது. அதோடு இவரது படங்களுக்கு ஊர் பெயரையே டைட்டிலாக வைப்பார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய படங்கள் எல்லாமே ஓவர் சென்டிமென்ட் கம் ஆக்க்ஷன் என்றாலும் அந்த படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தவை. மற்ற நடிகர்களுடன் பேரரசு இணைந்த படங்கள் எல்லாம் பஞ்ச் டயலாக்குகள் இருந்தும் பிஞ்சுபோனதுதான் மிச்சம். பேரரசு மீண்டும் விஜய்யுடன் இணையப் போகிறார். விஜய்யிடம் ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லியிருக்கிறார் பேரரசு. அதைக் கேட்ட விஜய் கதை நல்லாயிருக்கு. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்ததும் ஆரம்பிச்சிரலாம் என்று சொல்லியிருக்கிறார். இந்த படம் பேரரசு விஜய் கூட்டணியில் ஹிட்டான சிவகாசி, திருப்பாச்சி வரிசையில் இடம் பிடிக்கும் என்கிறார்கள் அந்த ஒன்லைன் ஸ்டோரியைக் காதால் கேட்டவர்கள். அப்படி அந்த ஒன்லைன் ஸ்டோரி என்னவாக இருக்கும்... அதே தங்கச்சி சென்டிமென்ட்தான்..
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “பேரரசு இயக்கத்தில் விஜய் - அடுத்த ஹிட் ரெடி!”
Post a Comment