மதுரை கதை களத்தில் சூரியநகரம்
மதுரை ஏரியா படமா... அய்யய்யோ... ஆளை விடுங்கப்பா என்று ரசிகர்கள் ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஒரு காலகட்டத்தில் மதுரை ஏரியா படங்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தன. பின்பு மதுரை பகுதியை மையமாக கொண்ட படம் என்றாலே அதை வைத்து ரசிகர்கள் கொலை வெறி வரக்கூடிய அளவுக்கு காமெடி எஸ்.எம்.எஸ்.க்ளை பண்ண ஆரம்பித்தனர். இதனால்தானோ என்னவோ சமீபகாலமாக மதுரை ஏரியாவை மையமாக கொண்ட படங்கள் வருவது கொஞ்சம் குறைந்திருந்தது. இப்போது அந்த குறையை நீக்குவதற்காகவே சூரிய நகரம் என்ற படம் தயாராகியுள்ளது. மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக நடித்த ராகுலும் அவருக்கு ஜோடியாக நந்தனாவும் நடித்திருக்கிறார்கள். மதுரையை மையப்படுத்திய படங்களுக்கு மத்தியில் இந்த படம் அடி தடி இல்லாமல் காதலை மையப்படுத்தியதாக கொண்டு வெளிவர உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மதுரை கதை களத்தில் சூரியநகரம்”
Post a Comment