ரூ. 15,000 சம்பளத்தில் வேலை மற்றும் கல்வி உதவித் தொகையுடன் படிப்பு
அச்சுத்துறை நச்சுத்துறைன்னு சொல்லுவாங்க. ஆனால் டிஜிட்டல் அச்சுத்துறையோ இன்று அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் இதில் பணியாற்றுவதற்கென்றே சிறப்பு படிப்பு ஒன்றை அறிமுகம் செய்கிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். டிஜிட்டல் பப்ளிஷிங் என்னும் இளநிலை பட்டப்படிப்பை +2 அல்லது பட்டப்படிப்பை முடித்தவர்கள் படிக்கலாம். கணிணி மூலமாகவே இதற்கான தேர்வு நடத்தப்படும். பின்பு நேர்காணல் தேர்வு நடைபெறும். விண்ணப்படிவத்தை www.dpub.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த படிப்பில் சேர்பவர்களுக்கு அன்று முதல் ஜோவ் இந்தியா நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்கான பணி நியமனம் வழங்கப்படும். முழுநேரமாக இந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே படிக்கலாம். முதல் வருடத்தில் 6 ஆயிரமும், 2 ஆம் ஆண்டில் 8 ஆயிரமும், மூன்றவது வருடத்தில் 10 ஆயிரமும உதவித் தொகையாக வழங்கப்படும். பட்டப்படிப்பை முடித்தவுடன் ரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் நிரந்தரப் பணியை அந்நிறுவனத்திலேயே தொடரலாம். இது குறித்து மேலும் விளக்கம் தேவைப்படுவோர் 97109 38631 / 97109 38632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ரூ. 15,000 சம்பளத்தில் வேலை மற்றும் கல்வி உதவித் தொகையுடன் படிப்பு”
Post a Comment