அய்யய்யோ... இன்ட்லிக்கு என்ன ஆச்சு...




பிளாக்குல நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும் எழுதித் தள்ளுற நமக்கெல்லாம் குலதெய்வமா இருக்கிறது இந்த இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகள்தான். நாலு நாளு ரூம் போட்டு யோசிச்சு எழுதினா கூட இவங்களோட தயவு இல்லாம அதை இந்த உலகத்துக்கு சொல்ல முடியாது. இதுல பாருங்க இந்த இன்ட்லி இன்று காலை முதல் வேலை செய்யவில்லை. டேட்டா பேஸ் எரர் என்று வருகிறது. பயனர் பெயர் கடவுச் சொல் கொடுத்தால் கூட உள்ளே நுழைய மாட்டேங்குது. இதனால நம்மை மாதிரி எழுதிக் கிழிக்கிற நண்பர்களுக்கு சிரமம்தான். அதைவிட பெரும் சிரமம் இன்ட்லியை நடத்துகிறவர்களுக்கு. இன்ட்லி சீக்கிரமே சரியாகி மீண்டும் பழைய மாதிரி கெத்தாக வலம் வர வேண்டுகிறேன்.
hotlinksin

1 comment:

  1. இப்படியெல்லாம் பதிவு போட ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்று தான் அது(இண்ட்லி) தகராறு செய்கிறதோ என்னவோ

    ReplyDelete