ராஜபாட்டை - இந்த வருடத்தின் சிறந்த ப்ளாப் படம்
ராஜபாட்டை இந்த வருடத்தின் சிறந்த தோல்விப் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. விக்ரம் தீக்ஷா சேத் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ராஜபாட்டை படம் பவர் ஸ்டார் படரேஞ்சுக்கு இருக்க, படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கோ ஏகப்பட்ட அதிர்ச்சி. இப்படியும் கூட படம் இயக்க முடியுமா? என்ற கேள்வியை சுந்திரனை நோக்கியும் இப்படிப்பட்ட படத்தில் கூட நடிப்பீங்களா? என்ற கேள்விக் கணையை விக்ரமை நோக்கியும் தொடுத்தனர் ரசிகர்கள். பத்திரிகையாளர்கள் இந்த படம் பற்றி விக்ரமிடம் கேட்ட போது, ‘வித்தியாசமாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தோம்... அதனால் இப்படி ஒரு படம் கொடுத்தோம்’ என்று சொல்லியுள்ளார். இந்த படத்திற்குப் பிறகு விக்ரமும் சுசீந்திரனும் எளிதில் தப்பித்துவிட, ரொம்பவே நொந்து போய் இருப்பது நம்ம தீக்க்ஷா சேத்தான். ஹீரோ விக்ரம் இயக்குநர் சுசீந்திரன்… அப்புறம் என்ன படம் பிச்சுக்கிட்டு போகும். இந்த படத்துக்கு அப்புறம் நாமதான் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது ராஜபாட்டை.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ராஜபாட்டை - இந்த வருடத்தின் சிறந்த ப்ளாப் படம்”
Post a Comment