கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!




வீட்டில் இணைய இணைப்பு இருந்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று இன்றும் பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பை வாங்கமலே இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டும்தானா கெட்டுப் போகிறார்கள். இண்டர்நெட்டில் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் சில அப்பாவி பெண்களும் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை கள்ளக்காதலை வளர்ப்பதில் மொபைல்போன் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால் அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது பேஸ்புக் இணையதளம். இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அடுக்கடுக்காக அரங்கேறி வருகின்றன. அதிலிருந்து பெண்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதற்காக ஒரேயடியாக பேஸ்புக் இணையதளத்தை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னும் சில காலங்களில் பேஸ்புக்கை தடை செய்யக் கோரி சில அவலக் குரல்கள் ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இணையதளத்தில் நேற்று ஒரு பெண் எம்.எல்.ஏ. தனது கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்துவிட்டது பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த எம்.எல்.ஏ.க்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இருந்த போதிலும் கணவரையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு பேஸ் புக் மூலம் அறிமுகமான ஒருவனுடன் ஓடிப் போய் திருமணமும் செய்து கொண்டாராம். தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய எந்த வித எண்ணமும் இல்லாமல் ஓடிப் போன அந்த பெண்ணை என்னவென்று சொல்வது. இது போன்ற பல ஓட்டங்களுக்கு பேஸ்புக் என்னும் இணையதளம் சமீபகாலமாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ் புக் இணையதளத்தை நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் எத்தனையோபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். கள்ளக் காதலை வளர்க்கவும் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பேஸ்புக்கை குறை சொல்ல முடியாது. அதை பயன்படுத்தும் அரைகுறைகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டி இருக்கிறது.

எது எப்படியோ, பேஸ்புக் இணையதளத்தை வீட்டிலும் அலுவலகத்திலும் தடை செய்தால்தான் சிலரது குடும்ப வாழ்வும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் போலிருக்கிறது.
hotlinksin

0 Responses to “கள்ளக் காதலை வளர்ப்பதில் பேஸ்புக் முதலிடம்!”

Post a Comment