அடேங்கப்பா... வழக்கு எண் 18/9 க்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா...? வியப்பில் தமிழ் திரையுலகம்




புதுமுகங்கள் நடித்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா என ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது வழக்கு எண் 18/9. பாலாஜி சக்திவேல் இயக்கம் லிங்குசாமி தயாரிப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை. நடித்த எல்லாருமே புதுமுகங்கள்தான். முதல் நாள் முதல் காட்சியே அரங்கு நிறைந்த காட்சியைத் தொட்டிருக்கிறது வழக்கு எண் 18/9. புதுமுகங்கள் நடித்த படத்திற்கு ஒரு தியேட்டரில் 40 பேர் 50 பேர் ஒரு காட்சிக்கு உட்கார்ந்தாலே மிகப்பெரிய விஷயம். அந்த அளவுக்குதான் இருந்தது சமீபத்திய புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படங்களின் ரிசல்ட். ஆனால் வழக்கு எண் 18/9 க்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங் தமிழ் பட தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

இந்த படம் வெளியான சாந்தி திரையரங்கில் சமீபகாலத்தில் கர்ணன் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குதான் இவ்வளவு கூட்டம் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்திற்குதான் அப்படி ஒரு கூட்டம். சென்னை நகரின் பெரும்பாலான தியேட்டர்களில் காலை முதலே குறைந்த அளவு எண்ணிக்கையில்தான் டிக்கெட்டுகள் இருந்தன. படம் துவங்கும் நேரத்தில் எல்லா டிக்கெட்டுகளுமே விற்றுத் தீர்ந்திருக்கின்றன. சத்யம் தியேட்டரில் டிக்கெட்டே இல்லை. பெரும்பாலான திரையரங்குகளில் இதுதான் நிலை. இந்தப் படத்திற்கு அப்படி ஒரு மாஸ் உருவாக காரணம் என்ன...? பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு வருவது போன்ற ஒரு ரசிகர்கள் கூட்டம் இந்தப் படத்திற்கு வரக் காரணம் என்ன... இதையெல்லாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து புதிதாக படம் எடுப்பவர்கள் அந்த காரணங்களை தங்கள் படத்திலும் பயன்படுத்தினால், எல்லாப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான்.

பதிவை இணைத்தால் பரிசு...

பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.





hotlinksin

0 Responses to “அடேங்கப்பா... வழக்கு எண் 18/9 க்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா...? வியப்பில் தமிழ் திரையுலகம்”

Post a Comment