ராகவா லாரன்ஸை அதிர்ச்சியடைய வைத்த இயக்குநர்




ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான உயிர் எழுத்து படத்தை இப்போது தூசி தட்டி வெளியிடத் தயாராகிவிட்டார்கள். இந்தப் படத்தின் விளம்பரமும் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தது. அதில் லாரன்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து விம்பரத்தை வடிவமைத்திருந்தார்கள்.

இது பற்றி லாரன்ஸ், ‘நான் 12 வருடங்களுக்கு முன்பு உயிர்எழுத்து படத்தில் நடித்திருந்தேன். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களைப் போல உயிர் எழுத்து படத்திலும் ஹீரோவின் நண்பனாகத்தான் நடித்திருந்தேன். இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. ஆனால் சமீபத்தில் உயிர் எழுத்து படத்திற்காக செய்யப்பட்டிருந்த விளம்பரங்களில் எல்லாம் நான் தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிச்சி அடைந்தேன். என்னைச் சந்திக்கிற நண்பர்களும் விநியோகஸ்தர்களும் இந்தப் படத்தில் எப்போது, நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தயவு செய்து உயிரெழுத்து விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம் என்று படத்தாயரிப்பாளர்களையும் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்… காஞ்சனா படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் முனி 3 படம் ஜூன் மாதம் துவங்கப்பட உள்ளது. அதற்கிடையில் நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை…’ என்று தெரிவித்திருக்கிறார்.







hotlinksin

0 Responses to “ராகவா லாரன்ஸை அதிர்ச்சியடைய வைத்த இயக்குநர்”

Post a Comment