வழக்கு எண் 18/9 - கெட்ட வார்த்தையை ரசித்த சென்சார் போர்டு




வழக்கு எண் 18/9 படம் கடந்த வாரத்தில் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய அளவுக்கு வெற்றிப் படமாகியுள்ள இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார் முத்துராமன். படத்தில் இவர் பேசும் வசனங்களின் இடையில் வரும் வார்த்தைகளில் ஒன்று ‘தாயோளிகளா...’. இது கெட்டவார்த்தை என்பதால் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தைப் பார்த்த போது முதலில் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வார்த்தை வேண்டாம் மியூட் அடித்துவிடுங்கள் என்று பாதிபேர் சொல்லியிருக்கிறார்கள். பாதிபேர் இல்ல... இருந்துவிட்டுப் போகட்டும்... என்றிருக்கிறார்கள். இயக்குநர் பாலாஜி சக்திவேல் அந்த இடத்தில் வேறு எந்த வார்த்தையையும் போட முடியாது. அந்த வார்த்தை கிராமத்துப்புறங்களில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான். அதனால் அந்த வார்த்தையை வைப்பதில் தவறில்லையே... என்று சொல்லியிருக்கிறார். சென்சார் போர்டு உறுப்பினர்களில் இந்த வார்த்தையை கேரக்டரோடு ஆழமாக ஒன்றி ரசித்தவர்கள் மற்ற உறுப்பினர்களிடம் இந்த வார்த்தையைப் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறார்கள். பின்னரே அந்த வார்த்தை படத்தில் இடம்பெற்ற சம்பதித்தார்களாம் மற்ற சென்சார் போர்டு உறுப்பினர்கள்.
hotlinksin

0 Responses to “வழக்கு எண் 18/9 - கெட்ட வார்த்தையை ரசித்த சென்சார் போர்டு”

Post a Comment