அடேங்கப்பா... தனுஷின் 3 படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?




தனுஷின் படங்களில் இதுவரை வெளியான படங்களை விட 3 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. 3 படத்திற்கு டிக்கெட் ரிசர்வேசன் துவங்கிய அன்றே மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன. தனுஷின் படங்களில் முதல் முறையாக இந்த படத்திற்குதான் இப்படி புக்கிங் ஆகி உள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை திங்கட்கிழமைக்குமேல்தான் டிக்கெட் கிடைக்கும்... என்று தியேட்டரில் இருந்து தகவல் வருகிறது. இது பற்றி தியேட்டர்காரர்களிடம் விசாரித்தால், ‘தனுஷ் ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக புக் பண்ணிவிட்டார்கள்... ரஜினி ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதால் படம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரம் ஏற்பட்டுள்ளது’ என்று சொல்கிறார்கள். சென்னை, அண்ணா சாலையில் உள்ள திரையரங்கத்திற்கு நாம் சென்ற போது அங்கு தனுஷ் ரசிகர்கள் சிலர் படம் ரிலீஸ் ஆன அன்று டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள், ‘தனுஷ் படத்தை முதல் நாளில் முதல் காட்சி பார்த்துவிடுவோம். ஆனால் 3 படத்தை அவ்வாறு பார்ப்பதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், படத்தின் கொலைவெறி பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருப்பதுதான். அதுவே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டதால் தனுஷின் மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் முதல் நாளில் டிக்கெட் கிடைக்கவில்லை...’ என்று தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் ‘தியேட்டர்காரர்களிடம் சிலர் மொத்தமாக டிக்கெட்டை வாங்கிவிடுகிறார்கள். படம் ரிலீஸ் ஆன அன்று பிளாக்கில் விற்று கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்... இதில் தியேட்டர்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது...’ என்று தியேட்டர்காரர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
hotlinksin

0 Responses to “அடேங்கப்பா... தனுஷின் 3 படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?”

Post a Comment