விஜயகாந்தை கடுப்பாக்கிய ஆசாமி - சங்கரன்கோவிலில் பரபரப்பு




சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, தமிழக அரசின் மின்வெட்டு குறித்து பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்தவுடன் இப்போது இருக்கும் மின்வெட்டு இன்னும் அதிகமாகும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கீழே நின்று கொண்டிருந்த ஒருவர், ‘மின்சாரம் இருப்பதால்தானே நீங்க பேசிக்கொண்டிருக்கிறீங்க...’ என்று கேட்டார்.

இதனால் கடுப்பான விஜயகாந்த், ’யார் நீங்க...?’ என்று கேட்டார், அதைக் கேட்ட அந்த ஆள், ‘எங்க ஊருக்கு வந்து விட்டு என்னையே நீ யார்ன்னு கேட்கிற நீங்க யாரு..?’ என்று கேட்டார். இதனால் கடுப்பான விஜயகாந்த், ‘மேலவா... சொல்றேன்...’ என்று சொல்ல ‘நீ கீழே வா...’ என்று பதிலுக்கு அந்த ஆசாமி சொல்ல, இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்க காவலுக்கு நின்றிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். தேமுதிகவினர் இது குறித்து காவல்துறையினரிடம் முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தேமுதிகவினரையும் சமாதானம் செய்ய விஜயகாந்த் அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றார்.
hotlinksin

0 Responses to “விஜயகாந்தை கடுப்பாக்கிய ஆசாமி - சங்கரன்கோவிலில் பரபரப்பு”

Post a Comment