சிமென்ட் மூட்டை திருடி விற்ற சிவகார்த்திகேயன்




சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மனம் கொத்திப் பறவை ஷூட்டிங் மற்றும் இன்ன பிற வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் கடலளவு காமெடி கடுகளவு காதல் என்னும் பாலிஸியுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் எழில்.

‘படத்தின் கதை ரொம்பவே சிம்பிளானதுதான். ஒரு ஆரம்பப் பள்ளியைச் சுற்றிலும் நகர்கிறது கதை. சிவகார்த்திகேயனுடைய அப்பா இளவரசு ஒரு பில்டிங் காண்டிராக்டர். அப்பாவுக்கு தெரியாமலே சிமென்ட் மூட்டைகளைத் திருடி விற்கிற கேரக்டர்தான் சிவகார்த்திகேயனுடையது. பள்ளிக்கூடம் ஒன்றின் கன்ஸ்ட்ரக்ஸன் வேலைக்குப் போவார் சிவகார்த்திகேயன். அங்கு கரஸ்பாண்டன்டாக இருக்கிறார் ஹீரோயின்... அப்புறம் என்ன... காதல் மோதல் காமெடி தான்... படம் பாருங்க சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க...’ என்கிறார் படத்தின் இயக்குநர் எழில்.
hotlinksin

0 Responses to “சிமென்ட் மூட்டை திருடி விற்ற சிவகார்த்திகேயன்”

Post a Comment