சேரனின் மாஸ்டர் பிளான் - கைகொடுக்குமா? காலை வாருமா?
சமீபத்தில் வெளியான படம் வெங்காயம். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள்
அத்தனை பேருமே படத்தைப் பாராட்டினார்கள். ஆனாலும் படம் சில நாட்கள் கூட
ஓடவில்லை. காரணம், படம் வெளியானதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அந்த
அளவுக்கு படத்திற்கு பப்ளிசிட்டி செய்யாமல் விட்டிருந்தார்கள். என்னதான்
படத்தை கோடி கோடியாக கொட்டி எடுத்தாலும், படத்திற்கு விளம்பரம்
இல்லையென்றால் மக்களை அது போய் ரீச் ஆவதே இல்லை. இதை லேட்டாக
உணர்ந்திருக்கிறது வெங்காயம் படக் குழு. அதே நேரத்தில் இந்தப் படத்தைப்
பார்த்த இயக்குநர் சேரனுக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.
நல்ல கருத்துக்கள் இருக்கும் வெங்காயம் படம் நிச்சயம் ரசிகர்களை நல்ல
முறையில் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை ரீரிலீஸ்
செய்கிறார் சேரன். இதற்காக பப்ளிசிட்டி டிசைன்ஸ்களில் இருந்து எல்லாமே
மாற்றப்பட்டுள்ளன. வெங்காயம் படத்தின் புதுவித விளம்பர டிசைன்கள் ரசிகர்களை
ஈர்க்கிற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. டைட்டிலிலும் மாற்றம்
செய்திருக்கிறார் சேரன். சேரன் இந்த படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதால் இந்த
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பழைய
வெங்காயம் இப்போது ப்ரெஷ்ஷாக வலம் வரப்போகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சேரனின் மாஸ்டர் பிளான் - கைகொடுக்குமா? காலை வாருமா?”
Post a Comment