ஹன்ஸிகாவா இப்படி செய்கிறார்...?
சினிமா நடிகைகள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் செய்கிற முதல் வேலை ஆங்காங்கே இடத்தை வாங்கிப் போடுவதுதான். அதன்பிறகு முடிந்தால் கல்யாண மண்டபம் கட்டுவார்கள். பணத்தை நல்ல வகையில் முதலீடு செய்வது எப்படி என்று நிபுணர்களிடம் பாடமும் படிப்பார்கள். ஆனால் ஹன்ஸிகா இதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறார். இவரது நீண்டநாள் கனவு முதியோர் இல்லம் கட்டுவதுதான். இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஹன்ஸிகா. முதல் வேலையாக இதற்காக நல்ல இடத்தைப் பார்க்கும்படி தனது அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் ஹன்ஸிகா. முதியோர் இல்லம் கட்டி முதியோர்களைப் பராமரிக்க வேண்டும்... என்ற கொள்கையுடன் இருக்கும் ஹன்ஸிகாவை ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ஹன்ஸிகாவா இப்படி செய்கிறார்...?”
Post a Comment