நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியலுக்கு வரும் இளம் நடிகை




ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் சோனியா அகர்வால். இந்த படம் ரிலீஸ் ஆனதும் நிச்சயம் அதைத் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும் என்று நினைத்திருந்த சோனியா அகர்வாலுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் எடுபடாமல் போனதால் அதைத் தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் ஹீரோயினாக நடிப்பது என்னும் தனது கொள்கையை சற்றே தளர்த்தியிருக்கிறார் சோனியா. பொருத்தமான கேரக்டராக இருந்தால் போதும்... என்று சொல்லியிருக்கிறார் சோனியா அகர்வால். விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் டிவி சீரியலில் சோனியா தலைகாட்டுவார் என்று தெரிகிறது.
hotlinksin

0 Responses to “நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியலுக்கு வரும் இளம் நடிகை”

Post a Comment