ராட்டினம் இயக்குநர் தங்கசாமி... நிஜமாகவே இவரு GOLD GODதாங்க...




பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த படத்தின் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தனுஷின் 3 துவங்கி ஏராளமான படங்களை இந்த வரிசையில் அடுக்கிக் கொண்டே போகலாம். ராட்டினம் படத்திலும் இது போன்ற ஒரு காதல்தான். ஆனால் வெறுப்பு வரவில்லை. அதற்கு பதிலாக படம் மீதும் அந்த கதாபாத்திரங்கள் மீதும் மிகப்பெரிய ஒரு மதிப்பு வருகிறது. ஹீரோ அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கும் பையன். ஹீரோயின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இப்படி ஒரு கதையென்றாலே அதற்குள் எப்படியெல்லாம் லாஜிக்கை கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுப்பார்கள் நம் இயக்குநர்கள். ஆனால் ராட்டினம் படத்தின் இயக்குநர் தங்கசாமியோ படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் மீதும் தனி மதிப்பு மரியாதையையே வர வைத்துவிடுகிறார். அறிமுக இயக்குநர்கள் வரிசையில் தங்கசாமிக்கு என ஒரு சிவப்புக் கம்பள விரிப்பே கொடுக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்த எஸ்கேப் மோஷன் பிக்சர்ஸ் மதன் அடுத்தப் படத்தை தங்கசாமியையே இயக்கச் சொல்லியிருக்கிறாராம். யு ஆர் வெரி கிரேட் தங்கசாமி. நல்ல படத்தை உருவாக்குவதில் இவரு தங்கசாமி இல்ல... goldgod. உங்ககிட்ட இருந்து ராட்டினம் மாதிரியான நல்ல படங்களை எதிர்பார்க்கிறோம். ராட்டினம் என்னும் நல்ல படத்தைக் கொடுத்ததற்காக தங்கசாமிக்கு எமது நன்றிகள்.

ராட்டினம் விமர்சனம் விரைவில்...
hotlinksin

0 Responses to “ராட்டினம் இயக்குநர் தங்கசாமி... நிஜமாகவே இவரு GOLD GODதாங்க...”

Post a Comment