கேபிள் சங்கர் இயக்கும் படம்
கேபிள் சங்கர் எழுதிய சினிமா என் சினிமா புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பார்க்கணும் போல இருக்கு படங்களின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் நாசர் புத்தகத்தை வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் பேசியதுதான் ஹைலைட். “நான் இப்போது “இருவர் உள்ளம்” என்னும் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதன் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் அடுத்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறேன். அந்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா...? கேபிள் சங்கர்தான் அந்த படத்தை இயக்கப் போகிறார். அவர் என்னிடம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஓ.கே. சொல்லிவிட்டேன்...” என்று தயாரிப்பாளர் தமது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு கேபிள்சங்கரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.
hotlinksin

0 Responses to “கேபிள் சங்கர் இயக்கும் படம்”

Post a Comment